முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » தாண்டகவடி முதல் - தாதெருமன்றம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - தாண்டகவடி முதல் - தாதெருமன்றம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| தாண்டகவடி | இருபத்தாறுக்கு மேற்பட்ட எழுத்துகளால் இயன்ற அடி . |
| தாண்டவம் | தாண்டுதல் ; செலுத்தல் ; கூத்துவகை . |
| தாண்டவமூர்த்தி | நடனமாடும் மூர்த்தியாகிய நடராசர் . |
| தாண்டவராயன் | நடனமாடும் மூர்த்தியாகிய நடராசர் . |
| தாண்டவன் | நடனமாடும் மூர்த்தியாகிய நடராசர் . |
| தாண்டி | நடனசாத்திரம் . |
| தாண்டிமண்டலம்போடுதல் | கோபாவேசத்தோடு மேற்பாய்தல் . |
| தாண்டு | குதி ; வெற்றி ; அகங்கரிப்பு . |
| தாண்டுகாலி | கண்டபடி திரிபவன் (ள்) . |
| தாண்டுகாற்போடுதல் | ஒரு வேலையும் செய்யாமல் திரிதல் ; ஆற்றலுக்கு மீறிய வேலையை மேற்கொள்ளுதல் ; நூலில் இங்கொரு பக்கம் அங்கொரு பக்கமாகப் படித்தல் . |
| தாண்டுதல் | மிதமிஞ்சிப் பேசுதல் ; குதித்தல் ; கடத்தல் ; செலுத்தல் ; மேற்படுதல் ; செருக்கடைதல் . |
| தாண்முளை | மகன் . |
| தாணா | குதிரைக்குக் கொடுக்கும் அவித்து எடுத்த கொள்ளு ; காவல்நிலையம் ; சிற்றுணவு . |
| தாணாக்காரன் | காவலன் . |
| தாணி | தான்றிமரம் ; பூண்டுவகை . |
| தாணித்தல் | பதித்தல் ; கெட்டிப்படுத்துதல் ; துப்பாக்கியில் மருந்திடுதல் ; உறுப்படுத்துதல் ; குற்றமேற்றல் ; விரைவில் கடைதல் ; இழையோட்டுதல் . |
| தாணு | சிவன் ; குற்றி ; தூண் ; நிலைபேறு ; மலை ; பற்றுக்கோடு ; செவ்வழி யாழ்த்திறவகை ; தாவரம் . |
| தாணையம் | கோட்டைக்குள்ளிருக்கும் படை ; பாளையம் ; மந்தை . |
| தாணையம்போடுதல் | பாளையம் இறங்குதல் ; உறவினர் பலர் ஒரு வீட்டில் பலநாள் கூடியிருத்தல் . |
| தாத்தா | பாட்டன் ; கிழவன் . |
| தாத்தாரி | காண்க : நெல்லி . |
| தாத்தி | ஆத்திமரம் . |
| தாத்திரம் | கோடரி ; கூன்வாள் . |
| தாத்திரி | தாய் ; பூமி ; நெல்லிமரம் ; ஆடு தின்னாப்பாளை . |
| தாத்திரியம் | வறுமை . |
| தாத்திருவாதம் | கபடம் ; பொய் . |
| தாத்துதல் | தாற்றுதல் ; கொழித்தல் ; இழிந்ததை மேலாக மாற்றுதல் ; ஒளித்துவைத்தல் ; செலவழித்தல் . |
| தாத்துரு | பன்னிரண்டு ஆதித்தருள் ஒருவர் . |
| தாத்துவிகம் | தத்துவத் தொடர்புடையுது . |
| தாதக்கூத்து | தாசரிகள் ஆடும் நடனம் . |
| தாதகி | ஆத்திமரம் ; ஒரு தீவம் ; பேய்க் கொம்மட்டி . |
| தாதச்சி | தவப்பெண் . |
| தாதமார்க்கம் | காண்க : தாசநெறி . |
| தாதரி | ஆடுதின்னாப்பாளை . |
| தாதலம் | நோய் ; பாகம் ; மனத்திட்பம் . |
| தாதன் | தாசன் , அடியவன் ; தொண்டன் ; வைணவப் பரதேசி ; தந்தை ; ஈகையாளன் . |
| தாதா | தந்தை ; தாத்தா ; பெரியோன் ; கொடையாளி ; பிரமன் ; காண்க : தாத்துரு . |
| தாதாத்மியம் | காண்க : தாதான்மியம் . |
| தாதான்மியசக்தி | சிவபெருமானை விடுத்து ஒரு போதும் நீங்காத ஐவகை வினையுள் ஒரு வினைவகை . |
| தாதான்மியம் | ஒன்றுபட்டிருக்கை . |
| தாதானம் | கரிக்குருவி . |
| தாதி | வேலைக்காரி ; செவிலித்தாய் ; தோழி ; விலைமகள் ; பரணிநாள் ; வாதி . |
| தாதிற்றூள் | பூந்தாது , மகரந்தப்பொடி . |
| தாதின்றூள் | பூந்தாது , மகரந்தப்பொடி . |
| தாது | கனிப்பொருள் ; உலோகம் ; காவிக்கல் ; பஞ்சபூதம் ; நாடி ; பூந்தாது ; தேன் ; தாது மாதுளமரம் ; கேள்வி ; உடலின் எழுவகைத் தாதுக்கள் ; சுக்கிலம் ; வாதபித்த சிலேட்டுமங்கள் ; நீறு ; பூவின் இதழ் ; மலர் ; அறுபதாண்டுக் கணக்கில் பத்தாம் ஆண்டு ; அடிமை ; வினைப்பகுதி . |
| தாதுகட்டுதல் | இந்திரியம் அடக்குதல் . |
| தாதுகந்தம் | கந்தகம் . |
| தாதுகலிதம் | காண்க : தாதுநட்டம் . |
| தாதுகி | செங்கல் . |
| தாதுசேகரம் | துரிசு . |
| தாதுண்பறவை | வண்டு . |
| தாதுநட்டம் | வீரியச்சிதைவு . |
| தாதுபரீட்சை | நோயறியுமாறு நாடிபிடித்து ஆய்தல் . |
| தாதுபார்த்தல் | கைந்நாடி யறிதல் . |
| தாதுபுஷ்டி | இந்திரியம் மிகுகை . |
| தாதுமாதுளை | பூமாதுளை . |
| தாதுராசகம் | இந்திரியம் , சுக்கிலம் . |
| தாதுவாதம் | அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்றாகிய நாடியியல்பு அறிகை ; கபடம் ; பொய் ; உலோகப் பரிசோதனை . |
| தாதுவாதி | உலோகங்கள் பரிசோதிப்போன் . |
| தாதுவிருந்தி | சுக்கிலப்பெருக்கு . |
| தாதுவிழுதல் | நாடி ஒடுங்குதல் . |
| தாதுவைரி | கந்தகம் ; காண்க : கடுக்காய் . |
| தாதெருமன்றம் | எருக்கள் நிறைந்த மரத்தடிப் பொதுவிடம் ; இடையர் குரவை முதலியன நிகழ்த்துவதற்குரிய இடம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 557 | 558 | 559 | 560 | 561 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாண்டகவடி முதல் - தாதெருமன்றம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பூந்தாது, நடராசர், இந்திரியம், மூர்த்தியாகிய, நடனமாடும், மகரந்தப்பொடி, தாதுநட்டம், தாது, சுக்கிலம், கந்தகம், தாதான்மியம், நாடி, பொய், தாத்தா, பாளையம், செலுத்தல், ஆத்திமரம், கபடம், தாத்துரு, தாண்டுதல், தந்தை

