முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » அழகிதழகிது முதல் - அழிச்சாட்டியக்காரன் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - அழகிதழகிது முதல் - அழிச்சாட்டியக்காரன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அழிகன்று | விலங்குகளின் வயிற்றினின்று சிதைந்து விழும் கரு . |
| அழிகால் | முதிர்ச்சியால் அழிக்க வேண்டியதான வெற்றிலைத் தோட்டம் . |
| அழிகாலி | வீண்செலவு செய்வோன் . |
| அழிகிரந்தி | கிரந்திநோய்வகை . |
| அழிகுட்டி | காண்க : அழிகன்று . |
| அழிகுரன் | தோற்றவன் . |
| அழிகை | அழிவு ; சிதைவு . |
| அழிகொடிக்கால் | காண்க : அழிகால் . |
| அழிச்சாட்டம் | காண்க : அழிச்சாட்டியம் . |
| அழிச்சாட்டியக்காரன் | தீம்புள்ளவன் ; பொய் வழக்கை எழுப்புவோன் . |
| அழகியவாணன் | நெல்வகை . |
| அழகியன் | அழகுடையவன் . |
| அழகியான் | அழகுடையவன் . |
| அழகு | வனப்பு ; நூல் வனப்புள் ஒன்று ; சுகம் ; சிறப்பு ; நற்குணம் ; கண்டசருக்கரை . |
| அழகுகாட்டுதல் | உடை முதலியவற்றான் ஆயசிறப்பினைக் காண்பித்தல் ; கை கால்களால் பரிகசித்தல் . |
| அழகுகாமாலை | காமாலைவகை . |
| அழகுகுளிசம் | கழுத்தணிவகை . |
| அழகுசெண்டேறுதல் | விளையாட்டுக்காகச் சாரி வருதல் ; அழகைக் காடடுதல் . |
| அழகுதுரைப்பெண் | இந்திரபாடாணம் . |
| அழகுதேமல் | தேமல்வகை . |
| அழகோலக்கம் | தன் அழகு தோற்றக் கொலுவிருக்கை . |
| அழத்தியன் | காண்க : பெருங்காயம் . |
| அழல் | நெருப்பு ; தீக்கொழுந்து ; எரிவு ; வெப்பம் ; கோபம் ; நஞ்சு ; உறைப்பு ; கார்த்திகை மீன் ; கேட்டை ; செவ்வாய் ; கள்ளி ; எருக்கஞ் செடி ; கொடிவேலிச்செடி ; நரகம் . |
| அழல்சேர்குட்டம் | கார்த்திகை பரணி . |
| அழல்தல் | எரிதல் ஒளி வீசுதல் ; காந்துதல் ; உறைப்பாதல் ; கோபம் கொள்ளுதல் ; பொறாமை கொள்ளுதல் . |
| அழலுதல் | எரிதல் ஒளி வீசுதல் ; காந்துதல் ; உறைப்பாதல் ; கோபம் கொள்ளுதல் ; பொறாமை கொள்ளுதல் . |
| அழல்வண்ணன் | நெருப்பு வண்ணத்தனாகிய சிவன் . |
| அழல்விதை | நேர்வாளவித்து . |
| அழல்விரியன் | காண்க : எரிவிரியன் . |
| அழல்விழித்தல் | கோபத்தோடு நோக்குதல் . |
| அழலம்பூ | தீம்பூமரம் . |
| அழலவன் | அக்கினிதேவன் ; சூரியன் ; செவ்வாய் . |
| அழலாடி | கையில் நெருப்புடன் ஆடும் சிவன் . |
| அழலி | நெருப்பு . |
| அழலிக்கை | எரிச்சல் ; பொறாமை . |
| அழலூட்டுதல் | தீயுண்ணச் செய்தல் . |
| அழலேந்தி | கையில் நெருப்போடு இருக்கும் சிவன் . |
| அழலை | தொண்டைக் கரகரப்பு ; களைப்பு . |
| அழலோம்புதல் | அக்கினிகாரியம் செய்தல் . |
| அழலோன் | அக்கினிதேவன் . |
| அழவணம் | காண்க : மருதோன்றி . |
| அழற்கடவுள் | காண்க : அழலோன் . |
| அழற்கண்ணன் | நெற்றியில் தீக்கண்ணையுடைய சிவன் . |
| அழற்கண்வந்தோன் | சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவன் ; முருகன் ; வீரபத்திரன் . |
| அழற்கதிர் | சூரியன் . |
| அழற்கரத்தோன் | நெருப்பைக் கையில் ஏந்தியிருக்கும் சிவபிரான் . |
| அழற்காமாலை | காமாலை நோய்வகை . |
| அழற்காய் | காண்க : மிளகு . |
| அழற்குட்டம் | காண்க : கார்த்திகை . |
| அழற்சி | உறைப்புச் சுவை ; எரிவு ; சினம் ; அழுக்காறு ; கால்நடைகளுக்குச் சுரம் உண்டாக்கும் ஒரு நோய் . |
| அழற்பால் | எருக்கஞ்செடி . |
| அழற்பித்தம் | பித்தநோய்வகை . |
| அழற்பிரவை | நரகவகை . |
| அழற்புண் | சிவந்து இரத்தம் வடியும் புண் . |
| அழற்புற்று | வெள்ளை விழியில் எரிசதையை உண்டாக்கும் ஒரு நோய் . |
| அழற்றடம் | தீக்காய் கலம் . |
| அழற்றி | அழலச்செய்வது ; எரிவு ; அழுக்காறு ; சினம் . |
| அழற்றுதல் | வெம்மை செய்தல் . |
| அழறு | சேறு . |
| அழன் | பிணம் ; பேய் . |
| அழனம் | பிணம் ; வெம்மை ; தீ . |
| அழனாகம் | ஒருவகை நச்சுப் பாம்பு . |
| அழனிறக்கடவுள் | காண்க : அழல்வண்ணன் . |
| அழாஅல் | அழுகை . |
| அழாந்தை | அழானுக்குத் தந்தை . |
| அழி | கேடு ; வைக்கோல் ; வைக்கோலிடும் கிராதி ; கிராதி ; வண்டு ; மிகுதி ; வருத்தம் ; கழிமுகம் ; இரக்கம் . |
| அழிகட்டு | பொய்ச்சீட்டு ; வீண் போக்கு ; தடை ; மந்திரம் ; நஞ்சு முதலியவற்றிற்கு மாற்று . |
| அழிகடை | அறக்கெட்டது . |
| அழிகண்டி | இவறலன் , உலோபி . |
| அழிகரப்பான் | படர்தாமரை நோய் . |
| அழிகரு | கரு அழிவு . |
| அழகிதழகிது | மிக நன்று . |
| அழகியமணவாளன் | திருவரங்கத்திலிருக்கும் மணமகனாகிய அரங்கநாதன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 52 | 53 | 54 | 55 | 56 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அழகிதழகிது முதல் - அழிச்சாட்டியக்காரன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, கொள்ளுதல், சிவன், கார்த்திகை, செய்தல், கோபம், கையில், நெருப்பு, பொறாமை, எரிவு, நோய், சூரியன், அழலோன், உண்டாக்கும், பிணம், கிராதி, வெம்மை, அக்கினிதேவன், அழுக்காறு, சினம், உறைப்பாதல், அழகு, அழகுடையவன், அழிவு, அழிகால், நஞ்சு, செவ்வாய், அழிகன்று, காந்துதல், வீசுதல், எரிதல், அழல்வண்ணன்

