தமிழ் - தமிழ் அகரமுதலி - தலைவன் முதல் - தவழ்சாதி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| தலைவன் | முதல்வன் ; அரசன் ; குரு ; மூத்தோன் ; சிறந்தவன் ; கடவுள் ; அகப்பொருட் கிழவன் ; கதைத்தலைவன் ; கணவன் . |
| தலைவாங்கி | தூக்குப்போடுவோன் ; தீயன் . |
| தலைவாங்குதல் | சிரச்சேதஞ் செய்தல் ; காண்க : தலைமயிர்வாங்குதல் . |
| தலைவாசகம் | பாயிரம் . |
| தலைவாசல் | காண்க : தலைவாயில் . |
| தலைவாய் | முதன்மடை . |
| தலைவாய்ச்சேரி | முகப்பிலுள்ள ஊர்ப்பகுதி . |
| தலைவாயில் | முதல்வாசல் ; கதவின் மேல்நிலை . |
| தலைவாரி | சீப்பு . |
| தலைவாருதல் | தலைமயிர் சீவுதல் . |
| தலைவாழையிலை | நுனியோடு கூடிய வாழை இலை . |
| தலைவி | தலைமைப் பெண் ; இறைவி ; அகப்பொருட் கிழத்தி ; கதைத்தலைவி ; மனைவி . |
| தலைவிதி | ஊழ் . |
| தலைவிரிகோலம் | அலங்கோலம் . |
| தலைவிரிச்சான் | தலைமயிர் முடியாதவன் ; சாரணைப்பூடு ; செருப்படைப்பூடு . |
| தலைவிளை | வயலின் முதல்விளைவு . |
| தலைவெட்டி | தலைமயிரைக் கத்தரித்துக் கொள்வோன் ; காவாலி ; மோசக்காரன் ; ஆட்டுநோய்வகை . |
| தலைவெட்டுதல் | சிரத்சேதம் செய்தல் ; காண்க : தலைதட்டுதல ; மோசஞ்செய்தல் ; பத்திரக் காதுகுத்துதல் ; தலைமயிர் கத்தரித்தல் . |
| தலைவைத்தல் | காண்க : தலையிடுதல் ; நீர் முதலியன பாயத் தொடங்குதல் . |
| தவ்வல் | சிறு குழந்தை ; மரம் விலங்கு முதலியவற்றின் இளமை . |
| தவ்வி | அகப்பை . |
| தவ்வு | கெடுகை ; பலகையிலிடும் துளை ; பாய்ச்சல் . |
| தவ்வுதல் | தாவுதல் ; குறைதல் ; குவிதல் ; கெடுதல் ; தவறுதல் ; மெல்ல மிதித்தல் ; அகங்கரித்தல் . |
| தவ்வெனல் | சுருங்குதற்குறிப்பு ; மழையின் ஒலிக்குறிப்பு . |
| தவ்வை | தாய் ; தமக்கை ; மூதேவி . |
| தவ | மிக . |
| தவக்கம் | தடை ; இல்லாமை ; தாமதம் ; கவலை . |
| தவக்கு | நாணம் . |
| தவக்கை | காண்க : தவளை . |
| தவக்கொடி | தவப்பெண் . |
| தவங்கம் | துன்பம் . |
| தவங்குதல் | தடைப்படுதல் ; பொருட்குறையால் வருந்துதல் ; வாடுதல் . |
| தவச்சாலை | தவம் செய்யும் இடம் . |
| தவசம் | தானியம் ; தொகுத்த பண்டம் . |
| தவசி | தவஞ்செய்பவன் . |
| தவசிப்பிள்ளை | பூசைப் பணியாள் ; சைவருக்குச் சமையற்காரன் . |
| தவசு | காண்க : தவம் . |
| தவடை | தாடை . |
| தவண்டை | பேருடுக்கை ; ஒரு நீச்சுவகை ; தவிப்பு ; காண்க : தவடை . |
| தவண்டையடித்தல் | நீரில் விளையாடுதல் ; வறுமைப்படுதல் . |
| தவணை | கெடு ; சட்டம் பதிக்கும் காடி ; கட்டுப் பானைத் தெப்பம் . |
| தவணைச்சீட்டு | காலங் குறித்தெழுதும் பத்திரம் . |
| தவணைப்பணம் | கெடுவின்படி செலுத்த வேண்டிய பணம் . |
| தவணைபார்த்தல் | சாகுபடிக் கணக்குப் பார்த்தல் . |
| தவத்தர் | முனிவர் . |
| தவத்தல் | நீங்குதல் . |
| தவதாயம் | இடுக்கண் . |
| தவதாயித்தல் | துன்பநிலைக்குள்ளாதல் . |
| தவந்து | தானியம் . |
| தவநிலை | தவச்செயல் . |
| தவப்பள்ளி | முனிவர் வாழிடம் . |
| தவம் | பற்று நீங்கிய வழிபாடு ; புண்ணியம் ; இல்லறம் ; கற்பு ; தோத்திரம் ; தவத்தைப் பற்றிக் கூறும் கலம்பக உறுப்பு ; வெப்பம் ; காட்டுத்தீ . |
| தவமுதல்வி | தவத்தில் முதிர்ந்தவள் . |
| தவமுதுகள் | தவத்தில் முதிர்ந்தவள் . |
| தவமுதுமகன் | தவத்தில் முதிர்ந்த முனிவன் . |
| தவர் | வில் ; துளை ; சிறு கப்பலில் சங்கிலி சுற்றும் கருவி . |
| தவர்தல் | துளைத்தல் . |
| தவராசம் | வெள்ளைச் சருக்கரை . |
| தவல் | குறைவு ; கேடு ; குற்றம் ; இறப்பு ; வறுமையால் வருந்துகை . |
| தவல்தல் | நீங்குதல் . |
| தவலுதல் | நீங்குதல் . |
| தவலத்து | ஆட்சி . |
| தவலை | அகன்ற வாயுடைய பாத்திரவகை . |
| தவலோகம் | மேலேழுலகினுள் ஒன்று . |
| தவவிளக்கு | முக்காலத்தை விளக்கும் தவமாகிய தீபம் . |
| தவவீரர் | தவம் இயற்றுவதில் வீரரான முனிவர் . |
| தவவேடம் | முனிவர்கோலம் . |
| தவவேள்வி | நோன்பு இருத்தல் . |
| தவழ்சாதி | ஊர்ந்து செல்லும் உயிரினம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 547 | 548 | 549 | 550 | 551 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தலைவன் முதல் - தவழ்சாதி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, தவம், முனிவர், நீங்குதல், தவத்தில், தலைமயிர், முதிர்ந்தவள், தவடை, துளை, செய்தல், தலைவாயில், சிறு, அகப்பொருட், தானியம்

