தமிழ் - தமிழ் அகரமுதலி - தலைமைவகை முதல் - தலைவழுக்கை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| தலைமைவகை | ஒன்றன் சார்பானன்றித் தலைமைபற்றிக் கூறும் முறை . |
| தலையடி | காண்க : தலையடிப்பு . |
| தலையடித்தல் | தொந்தரவுபடுத்துதல் . |
| தலையடித்துக்கொள்தல் | தொந்தரவுபடுதல் . |
| தலையடித்துக்கொளுதல் | தொந்தரவுபடுதல் . |
| தலையடிப்பு | தொந்தரவு ; நெற்கதிரின் முதலடி . |
| தலையடுத்தல் | சேர்த்துக் கூறுதல் . |
| தலையணி | தலையில் அணியும் அணிவகை . |
| தலையணை | தலைவைத்துப் படுப்பதற்காகப் பஞ்சு முதலியன அடைத்துத் தைத்த பை ; ஆற்றின் உற்பத்திக்கு அருகில் கட்டும் முதலணை . |
| தலையணைமந்திரம் | கணவனுடன் தனித்திருக்கும்போது மனைவி கமுக்கமாகச் சொல்லும் செய்திகள் ; கோள்மொழி . |
| தலையரங்கேறுதல் | தான் கற்ற வித்தையை முதன்முறை அவையோர்க்குக் காட்டுதல் . |
| தலையரட்டை | வீண்பேச்சு ; செருக்குடன் வீண்பேச்சுப் பேசுபவன் . |
| தலையல் | சொரிகை ; தலைப்பெய்மழை ; மழைபெய்துவிடுதல் ; புதுநீர் வரவு . |
| தலையலங்காரம் | தலையை அலங்கரித்தல் ; தேர்மொட்டு . |
| தலையழித்தல் | அடியோடு கெடுத்தல் ; தலைமை தீர்த்தல் . |
| தலையழிதல் | அடியோடு கெடுதல் . |
| தலையளி | இனியவற்றை முகமலர்ந்து கூறுதல் ; உயர் அன்பு ; அருள் . |
| தலையளித்தல் | அருளோடு நோக்குதல் ; வரிசை செய்தல் . |
| தலையற்றாள் | தலைவனை இழந்த கைம்பெண் . |
| தலையறை | உடற்குறை . |
| தலையன்பு | உயர் அன்பு . |
| தலையாகுமோனை | செய்யுளின் ஓரடியில் எல்லாச் சீரிலும் மோனையெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது . |
| தலையாகெதுகை | செய்யுள் அடிதோறும் முதற்சீர் முழுதும் ஒன்றிவரும் எதுகை . |
| தலையாட்டம் | தலைநடுக்கம் ; பேரச்சம் ; குதிரைத் தலையணிவகை . |
| தலையாட்டி | இங்குமங்கும் தலையசைத்து ஆடும் பொம்மை ; எதற்கும் இணங்கி நடப்பவன் . |
| தலையாட்டிப் பொம்மை | இங்குமங்கும் தலையசைத்து ஆடும் பொம்மை ; எதற்கும் இணங்கி நடப்பவன் . |
| தலையாடி | பனைமரத்தின் நுனிப்பாகம் ; ஒரு செய்யுளின் பிற்பகுதி . |
| தலையாப்பு | வடிசோற்றின்மேற் பரந்துள்ள கஞ்சியாடை . |
| தலையாயர் | பெரியோர் . |
| தலையாரி | ஊர்க்காவற்காரன் . |
| தலையானடத்தல் | அகங்கரித்தல் ; பெருமுயற்சி செய்தல் . |
| தலையிடி | தலைவலி . |
| தலையிடுதல் | காரணமின்றிப் பிறர் செயலில் புகுதல் ; நுழைதல் ; கூட்டுதல் . |
| தலையில்லாச்சேவகன் | நண்டு . |
| தலையிலடித்தல் | அநியாயஞ்செய்தல் ; ஒருவனது தலையைத் தொட்டுச் சத்தியஞ் செய்தல் . |
| தலையிலெழுத்து | விதி . |
| தலையிற்கட்டுதல் | ஒருவனை ஒன்றற்குப் பொறுப்பாக்குதல் ; ஏமாற்றிக் கொடுத்தல் . |
| தலையிற்போடுதல் | பொறுப்பாக்குதல் ; பழிசுமத்தல் . |
| தலையிறக்கம் | தலை சாய்கையான துயரம் ; அவமானம் . |
| தலையீடு | முதல¦ற்று ; முதல்தரம் ; தலைப்பிலிருப்பது ; சுவரின் தலைப்பாகத்தில் கட்டப்படும் செங்கல் வரிசை . |
| தலையீண்டுதல் | ஒன்றுகூடுதல் . |
| தலையீற்று | முதல¦னுகை ; முதற் கன்று . |
| தலையுடைத்துக்கொள்தல் | பெருமுயற்சி எடுத்தல் . |
| தலையுடைத்துக்கொளுதல் | பெருமுயற்சி எடுத்தல் . |
| தலையுதிர்நெல் | கதிரின் முதலடிப்பில் எடுக்கப்படும் நெல் . |
| தலையுவா | அமாவாசை . |
| தலையெடுத்தல் | தலை நிமிர்தல் ; வெளித்தெரிதல் ; வளர்ச்சியடைதல் ; உற்பத்தியாதல் ; இழந்த நிலையைத் திரும்ப அடைதல் ; நீக்குதல் . |
| தலையெடுப்பு | மேம்படுதல் ; செருக்கு ; தலைநிமிர்ச்சி ; ஒரு துறையில் உயர்தல் ; மேன்மை . |
| தலையெழுத்து | பிரமலிபியாகிய விதி ; நூலின் முகப்பு ; உயிரெழுத்து . |
| தலையேழுவள்ளல்கள் | சகரன் , காரி , நளன் , துந்துமாரி , நிருதி , செம்பியன் , விராடன் . |
| தலையேறுதண்டம் | பொறுக்கமுடியாத தண்டனை ; துன்பப்படுத்தி வாங்கும் வேலை ; மிக்க துன்பம் . |
| தலையோடு | மண்டையோடு ; கபாலம் . |
| தலைவணங்குதல் | தலைசாய்த்து வணங்குதல் ; பயிரின் தலை வளைதல் . |
| தலைவரிசை | உயர்ந்த பரிசு . |
| தலைவலி | தலைநோவு ; முகத்திலுள்ள நரம்புநோவு ; தொந்தரவு . |
| தலைவழித்தல் | தலைச்சவரம் பண்ணுதல் ; தலைதட்டுதல் . |
| தலைவழிதல் | நிரம்பிவழிதல் . |
| தலைவழுக்கை | தலையை வழுக்கையாகச் செய்யும் நோய்வகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 546 | 547 | 548 | 549 | 550 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தலைமைவகை முதல் - தலைவழுக்கை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பொம்மை, செய்தல், பெருமுயற்சி, பொறுப்பாக்குதல், எடுத்தல், ஆடும், எதற்கும், இணங்கி, தலைவலி, தலையசைத்து, நடப்பவன், விதி, செய்யுளின், தலையை, கூறுதல், தொந்தரவு, தொந்தரவுபடுதல், அடியோடு, உயர், தலையடிப்பு, இழந்த, வரிசை, அன்பு, இங்குமங்கும்

