முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » தலைப்பந்தி முதல் - தலைமைப்பாடு வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - தலைப்பந்தி முதல் - தலைமைப்பாடு வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
தலைப்பந்தி | பந்தியின் முதலிடம் . |
தலைப்பறை | யானை முதலியவற்றின் முன்னே கொட்டும் பறை . |
தலைப்பா | தலையிற் கட்டும் துணி . |
தலைப்பாகை | தலையிற் கட்டும் துணி . |
தலைப்பாட்டு | கூத்தின் முதலில் தொடங்கும் பாட்டு . |
தலைப்பாடு | கலந்திருக்கை ; தற்செயல் நிகழ்ச்சி . |
தலைப்பாமாறி | தலைப்பாவை மாற்றுவோன் ; பெருமோசக்காரன் ; பக்காத்திருடன் . |
தலைப்பாரம் | தலைக்கனம் ; தலைச்சுமை ; தோணியின் முற்பாகத்தில் மிக்க சுமையை ஏற்றுகை . |
தலைப்பாளை | தென்னை முதலியவற்றில் வரும் முதல் பாளை ; மகளிர் தலையணிவகை . |
தலைப்பித்தம் | தலைச்சுற்றல் . |
தலைப்பிரட்டை | தவளைமீன் . |
தலைப்பிரிதல் | நீங்குதல் . |
தலைப்பிள்ளை | முதற்பிள்ளை . |
தலைப்பு | நூல் முதலியவற்றின் தலைப்பெயர் ; ஆதி ; முன்றானை ; சீலை விளிம்பு ; தோன்றும் இடம் . |
தலைப்புணர்த்தல் | பை முதலியவற்றின் வாயைக் கட்டுவதற்காகச் சுருக்குதல் . |
தலைப்புணை | முக்கிய ஆதாரம் . |
தலைப்புரட்டு | தொல்லை ; பெரும்பொய் ; குழப்பம் ; செருக்கு . |
தலைப்புரள்தல் | நீர் சுருண்டுபாய்தல் ; மேன்மேல் மிகுதல் . |
தலைப்புரளுதல் | நீர் சுருண்டுபாய்தல் ; மேன்மேல் மிகுதல் . |
தலைப்புற்று | தலைப்புண்வகை . |
தலைப்புறம் | முன்புறம் . |
தலைப்பெய்தல் | ஒன்றுகூடுதல் ; கிட்டுதல் ; பெய்துரைத்தல் ; கூடுதல் . |
தலைப்பெயர்த்தல் | மீளச்செய்தல் . |
தலைப்பெயல் | முதல் மழை . |
தலைப்பெயனிலை | மகப்பேறாகிய கடனையிறுத்துத் தாய் இறந்த நிலையைக் கூறும் புறத்துறை ; போர்க்களத்தினின்று புறங்காட்டிச் சென்ற மகனது செயற்காற்றாது தாய் இறந்துபட்ட நிலை கூறும் புறத்துறை . |
தலைப்பேறு | முதற்பிள்ளை ; முதற்பேறு . |
தலைப்போடுதல் | மேற்கொள்ளுதல் . |
தலைபணிதல் | வணங்குதல் . |
தலைபிணங்குதல் | ஒன்றோடொன்று மாறுபடுதல் . |
தலைபோகுமண்டிலம் | இசைப்பாவகையுள் ஒன்று . |
தலைபோதல் | பெருங்கேடுறுகை . |
தலைமக்கள் | மேன்மக்கள் ; படைத்தலைவர் . |
தலைமகள் | தலைவி ; மூத்த பெண் ; அகப்பொருள் தலைவி ; மனைவி . |
தலைமகன் | தலைவன் ; மூத்த மகன் ; அகப்பொருள் தலைவன் ; கணவன் ; |
தலைமடங்குதல் | கீழ்ப்படிதல் ; தலைகுனிதல் ; காண்க : தலைமடிதல் . |
தலைமடிதல் | இறத்தல் ; கதிர் முதலியன சாய்தல் . |
தலைமடுத்தல் | தலையணையாகக் கொள்ளுதல் . |
தலைமடை | கிளைக்கால் பிரியும் முதல்மடை ; நீர்ப்பாசனம் தொடங்கும் முதல்மடை . |
தலைமண்டை | தலையோடு . |
தலைமண்டையிடுதல் | மிதமிஞ்சுதல் . |
தலைமணத்தல் | நெருங்கிக் கலத்தல் ; ஒன்றோடொன்று பின்னுதல் . |
தலைமயக்கம் | தலைச்சுழற்சி . |
தலைமயங்குதல் | பெருகுதல் ; கைகலத்தல் ; கலந்திருத்தல் ; கெடுதல் ; பிரிதல் . |
தலைமயிர்வாங்குதல் | முடியிறக்குதல் ; கைம்பெண்ணாயினாள் தலைமயிரை முதலில் எடுப்பித்தல் . |
தலைமறைதல் | ஒளிந்துகொள்ளுதல் ; மறைந்து போதல் . |
தலைமாடு | தலைப்புறம் ; பக்கம் ; தூரவளவு . |
தலைமாணாக்கன் | முதல் மாணாக்கன் . |
தலைமாராயம் | பகைவனுடைய தலையைக் கொண்டுவந்தவன் மனமுவக்கும்படி மன்னன் செல்வமளித்தலைக் கூறும் ஒரு புறத்துறை . |
தலைமாலை | தலைக்கு அணியும் கண்ணி ; சிவபிரான் அணியும் தலையாலாகிய மாலை . |
தலைமாறு | படி ; மாற்று . |
தலைமிதழ் | மூளை . |
தலைமுழுக்கு | மெய்முழுதும் குளிக்கை ; எண்ணெய்முழுக்கு ; மகளிர் சூதகம் ; நோய் நீங்கியபிறகு செய்யும் முதல்முழுக்கு . |
தலைமுழுகாமலிருத்தல் | கருவுற்றிருத்தல் . |
தலைமுழுகுதல் | உடல் முழுதுங் குளித்தல் ; எண்ணெய் தேய்த்துக் குளித்தல் ; மாதவிடாய் முடிவில் குளித்தல் ; நிலைகெடுதல் ; தொடர்பு அழித்தல் ; கைவிடுதல் . |
தலைமுறை | பரம்பரை ; ஒருவர் இருந்து வாழும் காலம் . |
தலைமுறைதத்துவமாய் | வழிவழியாய் . |
தலைமூர்ச்சனை | வருத்தம் . |
தலைமேற்கொள்ளுதல் | பயபத்தியாய் ஏற்றுக் கொள்ளுதல் ; பொறுப்பை ஏற்றல் . |
தலைமை | முதன்மை ; மேன்மை ; எசமானத்தன்மை ; உரிமை . |
தலைமைப்பாடு | பெருமை . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 545 | 546 | 547 | 548 | 549 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தலைப்பந்தி முதல் - தலைமைப்பாடு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கூறும், முதலியவற்றின், புறத்துறை, குளித்தல், தலைவி, ஒன்றோடொன்று, மூத்த, தலைவன், அணியும், முதல்மடை, கொள்ளுதல், தலைமடிதல், அகப்பொருள், தலைப்புறம், முதலில், தொடங்கும், துணி, கட்டும், தலையிற், மகளிர், முதற்பிள்ளை, மிகுதல், மேன்மேல், சுருண்டுபாய்தல், நீர், தாய்