தமிழ் - தமிழ் அகரமுதலி - தவழ்தல் முதல் - தழற்பூமி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| தவழ்தல் | ஊர்தல் ; தத்துதல் ; பரத்தல் . |
| தவழ்புனல் | மெல்லச் செல்லும் ஆற்றுநீர் . |
| தவழவாங்குதல் | ஒருவனைக் குனியவைத்துத் துன்புறுத்தி அவன் சொத்து முழுவதையும் கவர்தல் ; மிகுதியான வேலைவாங்குதல் . |
| தவளசத்திரம் | அரசர்க்குரிய வெண்கொற்றக் குடை . |
| தவளத்தொடை | தும்பைமாலை . |
| தவளம் | வெண்மை ; வெண்மிளகு ; சங்கபாடாணம் . |
| தவளிதம் | வெண்மை . |
| தவளை | ஒரு நீர்வாழ் சாதிவகை . |
| தவளைக்கிண்கிணி | தவளைபோல் ஒலிக்கும் கிண்கிணிகொண்ட ஒரு காலணிவகை . |
| தவளைக்குஞ்சு | தவளையின் இளமை . |
| தவளைக்குட்டி | தவளையின் இளமை . |
| தவளைக்குரங்கு | பணிப்பூட்டுவகை ; கொக்கித் தாழ்ப்பாள் ; இரட்டைக்கொக்கி . |
| தவளைப்பாய்த்து | சூத்திரநிலை நான்கனுள் தவளைப் பாய்ச்சல்போல இடைவிட்டுச் செல்லும் ஒரு நிலை . |
| தவளோற்பலம் | காண்க : வெள்ளாம்பல் . |
| தவற்றுதல் | விலக்கல் . |
| தவறு | பிழை ; செயல் கைகூடாமை ; நெறி தவறுகை ; அழுக்கு ; பஞ்சம் ; குறைவு . |
| தவறுதல் | வழுவுதல் ; பிசகுதல் ; சாதல் ; தப்புதல் ; குற்றம் செய்தல் ; தாண்டுதல் ; வாய்க்காமற்போதல் ; காணாமற்போதல் ; தோல்வியுறல் . |
| தவறைவாரி | கப்பலின் இருப்புக்கருவிவகை . |
| தவன் | தவசி ; காண்க : தவம் ; தலைவன் . |
| தவனகம் | மருக்கொழுந்து . |
| தவனப்புளி | மிளகாயும் உப்பும் உளுத்தம் பருப்பும் சேர்த்திடித்த புளி ; தாகத்தை நீக்கவல்ல புளி . |
| தவனம் | வெப்பம் ; தாகம் ; ஆசை ; வருத்தம் ; மருக்கொழுந்து . |
| தவனன் | சூரியன் ; அக்கினி . |
| தவனியம் | பொன் . |
| தவாக்கினி | வேள்வித்தீ ; காட்டுத்தீ . |
| தவாநிலை | உறுதிநிலை . |
| தவாவினை | மலை ; முத்தி . |
| தவாளித்தல் | கால்வாய் முதலியன தோண்டுதல் . |
| தவாளிப்பு | எழுதகக்குழி ; பார்வைக்கு மதிப்பாயிருக்கை . |
| தவிசணை | கட்டில் . |
| தவிசம் | கடல் ; வீடுபேறு . |
| தவிசு | தடுக்கு ; பாய் ; பீடம் ; மெத்தை ; யானை முதலியவற்றின்மேலிடும் மெத்தை ; திராவகம் . |
| தவிட்டம்மை | சின்னம்மை . |
| தவிட்டான் | ஒரு மரவகை . |
| தவிட்டுக்கிளி | ஒரு தத்துக்கிளிவகை . |
| தவிட்டுக்கொய்யா | காண்க : தவிட்டான் . |
| தவிட்டுண்ணி | சிறிய உண்ணிவகை . |
| தவிட்டுப்பழம் | தவிட்டுக்கொய்யா . |
| தவிடு | அரிசியினின்றும் கழியும் துகள் ; தானியத்தவிடு ; பொடி . |
| தவிடுபொடியாதல் | பொடிப்பொடியாதல் ; நிலைகுலைதல் . |
| தவித்தல் | இளைத்தல் ; வேட்கையெடுத்தல் ; இல்லாமைபற்றி வருந்துதல் . |
| தவிப்பு | வேட்கை ; வருந்துகை . |
| தவிர்ச்சி | இடையீடு ; தங்குகை . |
| தவிர்த்தல் | நீக்குதல் ; நிறுத்திவிடுதல் ; தடுத்தல் ; அடக்குதல் . |
| தவிர்த்துவினைசெயல் | பகைவர் எய்யும் அம்பினைத் தடுத்து அவர்மேல் அம்பு எய்யுஞ் செயல் . |
| தவிர்தல் | விலகுதல் ; தங்குதல் ; தணிதல் ; பிரிதல் ; நீக்குதல் ; ஒழிதல் ; இல்லாமற் போதல் . |
| தவிர | நீங்க . |
| தவில் | மேளவகை . |
| தவிவு | இடையீடு . |
| தவிழ்தல் | காண்க : தவிர்தல் . |
| தவுக்கார் | சுண்ணச்சாந்து ; எழுதக வளைவு ; மதிற்செங்கல்லின் இடைவெளி . |
| தவுசெலம் | முருங்கைமரம் . |
| தவுடு | குதிரைப்பாய்ச்சல் ; படையெடுப்பு ; அரிசி தீட்டியபின் வரும் துகள் ; தாடை . |
| தவுடை | தாடை . |
| தவுதல் | குன்றுதல் . |
| தவுரிதகம் | குதிரைநடையுள் ஒன்று . |
| தழங்கல் | ஆரவாரம் ; யாழ் நரம்போசை . |
| தழங்குதல் | முழங்குதல் ; ஒலித்தல் . |
| தழங்குரல் | ஒலிக்குமோசை . |
| தழம் | தயிலம் . |
| தழல் | தீ , நெருப்பு ; கார்த்திகைநாள் ; நஞ்சு ; காண்க : கொடிவேலி ; கிளியோட்டுங்கோல் ; கவண் . |
| தழல்தல் | அழலுதல் ; ஒளிவிடுதல் . |
| தழலுதல் | அழலுதல் ; ஒளிவிடுதல் . |
| தழலாடி | தீயோடு ஆடும் சிவன் . |
| தழலாடிவீதி | நெற்றி . |
| தழலி | நெருப்பு . |
| தழற்சி | அழலுதல் . |
| தழற்சொல் | நெருப்பைப்போன்ற சுடுசொல் ; தண்டனையைத் தோற்றுவிக்கும் சொல் . |
| தழற்பூமி | உவர்மண் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 548 | 549 | 550 | 551 | 552 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தவழ்தல் முதல் - தழற்பூமி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, அழலுதல், துகள், நீக்குதல், இடையீடு, தவிர்தல், தாடை, ஒளிவிடுதல், நெருப்பு, தவிட்டுக்கொய்யா, மெத்தை, தவளையின், வெண்மை, செல்லும், இளமை, செயல், சொல், புளி, மருக்கொழுந்து, தவிட்டான்

