தமிழ் - தமிழ் அகரமுதலி - தமிழ்நதி முதல் - தர்மோபதேசம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| தமிழ்நதி | செந்தமிழ் நாட்டிற்குரிய ஆறான வையை ஆறு . |
| தமிழ்நர் | தமிழர் . |
| தமிழ்நாடன் | தமிழ்நாட்டு வேந்தன் ; பாண்டிய அரசன் . |
| தமிழ்ப்படுத்துதல் | பிறமொழியிலுள்ளதைத் தமிழில் மொழிபெயர்த்தல் . |
| தமிழ்மருந்து | தமிழ் மருத்துவ நூல்களிற் கூறியவாறு செய்யப்பட்ட மருந்து . |
| தமிழ்மலை | பொதியமலை . |
| தமிழ்மறை | திருக்குறள் ; தேவாரம் ; திருவாசகம் ; திவ்வியப் பிரபந்தம் . |
| தமிழ்முனிவன் | அகத்தியன் . |
| தமிழ்வாணன் | தமிழ்ப்புலவன் . |
| தமிழ்வேதம் | காண்க : தமிழ்மறை . |
| தமிழ்வேளர்கொல்லி | மருத யாழ்த்திறவகை . |
| தமிழக்கூத்து | தமிழ்நாட்டுக்குரிய கூத்து . |
| தமிழகம் | தமிழ்நாடு . |
| தமிழச்சி | தமிழப்பெண் . |
| தமிழிச்சி | தமிழப்பெண் . |
| தமிழத்தி | தமிழப்பெண் . |
| தமிழப்பல்லவதரையர் | தமிழ்நாட்டுப் பல்லவ அரசர் . |
| தமிழன் | தமிழைத் தாய்மொழியாக உடையவன் ; ஆரியனல்லாத தென்னாட்டான் . |
| தமிழாகரன் | தமிழுக்கு நிலைக்களமான திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் . |
| தமிழியல்வழக்கு | பண்டைக் காலத்துத் தமிழ் நூல்களிற் கூறப்படும் காமக்கூட்டம் . |
| தமிழோர் | தமிழ்மக்கள் ; தமிழ்ப்புலவர் . |
| தமுக்கடித்தல் | பறைசாற்றிச் செய்தியறிவித்தல் ; தேவையின்றிப் பிறருக்கு அறிவித்தல் . |
| தமுக்கம் | போருக்குச் செல்லும் யானைகள் திரளுமிடம் ; வசந்தமாளிகை . |
| தமுக்கு | செய்தி தெரிவிக்க முழக்கும் ஒரு பறைவகை . |
| தமுக்குப்போடுதல் | காண்க : தமுக்கடித்தல் . |
| தமை | ஆசை ; புலன்களையடக்குதல் . |
| தமையம் | காண்க : அரிதாரம் . |
| தமையன் | காண்க : தமயன் . |
| தமோகுணம் | காம வெகுளி மயக்கங்களுக்குக் காரணமான குணம் . |
| தமோமணி | மின்மினி . |
| தய்யான் | தையற்காரன் . |
| தயக்கம் | ஒளிவிடுகை ; தோற்றம் ; கலக்கம் ; அசைவு . |
| தயங்குதல் | விளங்குதல் ; ஒளிவிடுதல் ; தெளிவாயிருத்தல் ; திகைத்தல் ; வாடுதல் ; அசைதல் . |
| தயல் | பெண் . |
| தயவு | அன்பு ; அருள் ; பக்தி . |
| தயனியம் | அருளத்தக்கது . |
| தயா | காண்க : தயவு . |
| தயாசீலன் | அருளுடையவன் . |
| தயாதர்மம் | அருளாகிய அறம் . |
| தயாபரன் | அருள்மிக்க கடவுள் . |
| தயாபாரமிதை | அருள் மிகுகையாகிய பாரமிதை . |
| தயார் | அணியம் , ஆயத்தம் . |
| தயாவம் | காண்க : தயவு . |
| தயாவீரன் | அருளில் மேம்பட்ட புத்தன் . |
| தயாவு | காண்க : தயவு . |
| தயாளத்துவம் | அருள் . |
| தயாளம் | அருள் . |
| தயாளன் | காண்க : தயாசீலன் . |
| தயாளு | காண்க : தயாசீலன் . |
| தயித்தியர் | அசுரர் . |
| தயிர் | பிரையூற்றின பால் ; மூளைக் கொழுப்பு . |
| தயிர்க்கோல் | மத்து . |
| தயிர்கடைதறி | தயிர் கடைவதற்குப் பயன்படுத்தும் தூண் . |
| தயிர்கடைதாழி | மத்திட்டுக் கடையும் தயிர்ப்பானை . |
| தயிர்வேளை | தைவேளைப்பூடு . |
| தயிரமுது | கடவுட்கு அல்லது அடியார்க்குப் படைக்குந் தயிர் . |
| தயிரியம் | மனத்திட்பம் , துணிவு . |
| தயிரேடு | பால் ஆடை . |
| தயிலக்காப்பு | கடவுள் திருமேனிக்கு எண்ணெய் இடுதல் . |
| தயிலம் | வடித்த மருந்தெண்ணெய் ; எண்ணெய் . |
| தயிலமாட்டுதல் | பிணத்தை எண்ணெயிலிட்டுக் கெடாமற் காத்தல் . |
| தயிலமிறக்குதல் | பொருள்களினின்று தைலம் வடித்தல் . |
| தயினியம் | எளிமை . |
| தயை | அருள் ; அன்பு ; பக்தி . |
| தர்க்கம் | காண்க : தருக்கம் . |
| தர்ச்சனி | சுட்டுவிரல் . |
| தர்ப்பகன் | மன்மதன் . |
| தர்ப்பணம் | தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பிதிரருக்கும் இறுக்கும் நீர்க்கடன் ; கண்ணாடி . |
| தர்ப்பணானனன் | எதிர் தோன்றினாரைக் காணமாட்டாத கண்ணாடிபோன்ற முகமுடைய குருடன் . |
| தர்ப்பீத்து | பயிற்சி ; ஒழுக்கம் . |
| தர்பார் | அரசன் முதலாயினரது ஓலக்கம் . |
| தர்மம் | காண்க : தருமம் . |
| தர்மாசனம் | காண்க : தருமசபை ; பார்ப்பனருக்கு விட்ட இறையிலி நிலம் . |
| தர்மோபதேசம் | அறவுரை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 539 | 540 | 541 | 542 | 543 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழ்நதி முதல் - தர்மோபதேசம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, அருள், தயவு, தமிழப்பெண், தயாசீலன், தயிர், கடவுள், பால், எண்ணெய், பக்தி, தமிழ், நூல்களிற், தமுக்கடித்தல், அரசன், அன்பு, தமிழ்மறை

