தமிழ் - தமிழ் அகரமுதலி - தரித்தல் முதல் - தருமதானம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| தரித்தல் | நிலைபெற்று நிற்றல் ; இருப்புக் கொள்ளுதல் ; ஊன்றி நிற்றல் ; அணிதல் ; தாங்குதல் ; பொறுத்தல் ; அடக்கிக்கொள்ளுதல் ; மறவாது உள்ளத்தில் வைத்தல் ; தாம்பூலம் தின்னுதல் . |
| தரித்திரப்படுதல் | வறுமையடைதல் ; உலோப குணத்தையடைதல் . |
| தரித்திரம் | வறுமை . |
| தரித்திரம்பிடித்தல் | வறுமையடைதல் ; உலோபியாயிருத்தல் . |
| தரித்திரன் | வறியவன் . |
| தரித்திரி | வறியவள் ; பூமி . |
| தரிப்பு | தங்குகை ; நினைவு ; பொறுத்திருக்கை ; உறுதி ; இருப்பிடம் ; கையிருப்பு ; நிறுத்தும் இடம் ; காண்க : தருப்பு . |
| தரிப்புத்தட்டான் | செல்வன் . |
| தரிபடுதல் | நிலைபெறுதல் . |
| தரிபெறுதல் | நிலைபெறுதல் . |
| தரியலர் | பகைவர் . |
| தரியலார் | பகைவர் . |
| தரியாபத்து | விசாரணை ; கண்டுபிடிக்கை ; வழக்கு . |
| தரியார் | பகைவர் . |
| தரு | மரம் ; கற்பகமரம் ; இசைப்பாட்டுவகை ; ஒருவகைச் சந்தம் ; காண்க : தேவதாரு . |
| தருக்கம் | நியாயவாதம் ; மேம்பாடு ; வாக்கு வாதம் ; நியாயவாத நூல் . |
| தருக்கி | அகங்காரமுள்ளவர் ; நியாயவாத நூல் வல்லோன் . |
| தருக்கித்தல் | வாக்குவாதம் பண்ணல் . |
| தருக்கு | செருக்கு ; வலிமை ; களிப்பு ; தருக்கம் . |
| தருக்குதல் | அகங்கரித்தல் ; களித்தல் ; ஊக்கமிகுதல் ; பெருக்குதல் ; இடித்தல் ; வருத்துதல் ; உடைத்தல் ; மேற்கொள்ளுதல் . |
| தருக்கோட்டம் | காவிரிப்பூம்பட்டினத்தில் கற்பகத்தரு நின்று விளங்கிய கோயில் . |
| தருசாரம் | மரத்தின் சாரமாயுள்ள கருப்பூரம் . |
| தருசு | நெருங்கிய இழை . |
| தருணம் | இளமை ; தக்க சமயம் ; நல்ல எண்ணம் ; காண்க : பெருஞ்சீரகம் ; ஆமணக்கு . |
| தருணன் | இளைஞன் . |
| தருணி | காண்க : தருணை ; கற்றாழை . |
| தருணை | இளம்பெண் , பதினாறு முதல் முப்பது அகவைவரை யுள்ள பெண் . |
| தருதல் | கொடை . |
| தருநன் | கொடுப்பவன் . |
| தருநிலைக்கோட்டம் | காண்க : தருக்கோட்டம் . |
| தருநிறப்பஞ்சரம் | காந்தம் . |
| தருப்பகம் | தாழ்வு . |
| தருப்பகன் | மன்மதன் . |
| தருப்படன் | ஊர் காவற்காரன் . |
| தருப்பணம் | தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பிதிரருக்கும் செய்யும் நீர்க்கடன் ; உணவு ; அவல் ; கண்ணாடி . |
| தருப்பம் | அகங்காரம் ; புனுகுசட்டம் ; தருப்பைப்புல் . |
| தருப்பாக்கிரம் | தருப்பை நுனி . |
| தருப்பி | காண்க : தருவி . |
| தருப்பித்தல் | வழிபாடுகளால் கடவுளுக்குத் தன்னை ஒப்படைத்தல் . |
| தருப்பு | குறைந்த விலையுள்ள ஒரு வெள்ளைக் கல்வகை . |
| தருப்பை | குசைப்புல் . |
| தருமக்கட்டை | பிறர் தருமத்தால் வாழும் உடலான அநாதப்பிள்ளை ; ஆவுரிஞ்சு தறி . |
| தருமக்கல் | ஒருவன் செய்த அறங்கள் வரையப்பட்ட கல்வெட்டு . |
| தருமக்கிழவர் | தருமத்தைக் காப்பவர் ; அறச்செயல் புரிதற்குரிய வணிகர் . |
| தருமகர்த்தா | கோயில் அதிகாரி ; நீதி உரைக்கும் அதிகாரி . |
| தருமகாரியம் | அறச்செயல் . |
| தருமச்செல்வி | காண்க : தருமதேவதை ; பார்வதி . |
| தருமச்செலவு | அறத்திற்காகச் செய்யும் செலவு . |
| தருமச்சக்கரம் | அறவாழி . |
| தருமசங்கடம் | மாறுபட்ட இரு கடமைகளுள் எதைச் செய்வது என்று அறியாது துன்புறும் நிலை . |
| தருமசத்திரம் | அறக்கூழ்ச்சாலை , அன்னசத்திரம் . |
| தருமசபை | நீதிமன்றம் . |
| தருமசாசனம் | அறச்செயலைக் குறிக்கும் செப்புப் பட்டயம் . |
| தருமசாதனம் | அறச்செயலைக் குறிக்கும் செப்புப் பட்டயம் . |
| தருமசாலி | அறஞ்செய்வோன் . |
| தருமசாலை | தருமசத்திரம் ; முப்பத்திரண்டு அறங்களையும் புரிதற்குரிய இடம் . |
| தருமசிந்தை | அறம்புரியுங் கருத்து . |
| தருமசீலன் | அறஞ்செய்பவன் . |
| தருமசீலி | அறம்புரிபவள் . |
| தருமணல் | புதிதாகக் கொணர்ந்து பரப்பும் மணல் . |
| தருமத்தியானம் | ஆன்மா ஈடேறுவதைப்பற்றிய நினைவு . |
| தருமதலைவன் | தருமத்திற்குரிய தலைவனான புத்தன் . |
| தருமதாயம் | அறத்திற்காக விடும் இறையிலி நிலம் . |
| தருமதானம் | சமய தருமப்படி செய்யும் தானம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 541 | 542 | 543 | 544 | 545 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தரித்தல் முதல் - தருமதானம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, செய்யும், பகைவர், அதிகாரி, புரிதற்குரிய, அறச்செயல், தருப்பை, தருமசத்திரம், பட்டயம், செப்புப், குறிக்கும், அறச்செயலைக், தருணை, தருக்கோட்டம், தருப்பு, இடம், நினைவு, வறுமையடைதல், நிலைபெறுதல், தருக்கம், நிற்றல், நூல், நியாயவாத, கோயில்

