தமிழ் - தமிழ் அகரமுதலி - தரக்கு முதல் - தரிஞ்சகம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| தரக்கு | புலி ; கழுதைப்புலி . |
| தரகரி | வாங்குவோர் விற்போர்களிடையே நின்று பண்டங்களின் விற்பனைக்கு ஏற்பாடு செய்பவன் . |
| தரகன் | வாங்குவோர் விற்போர்களிடையே நின்று பண்டங்களின் விற்பனைக்கு ஏற்பாடு செய்பவன் . |
| தரகு | தரகர் பெறும் கூலி ; வாசனைப் புல்வகை ; விலை இலாபம் ; காண்க : தரகுபாட்டம் ; ஏறக்குறைய இரண்டு படியுள்ள ஓர் அளவுகருவி . |
| தரகுகாரன் | காண்க : தரகன் . |
| தரகுகூலி | தானியம் வாங்குவோன் அளப்பவனுக்குக் கொடுக்கும் கூலி . |
| தரகுபாட்டம் | தரகரிடமிருந்து கொள்ளும் வரி . |
| தரங்கம் | அலை ; கடல் ; மனக்கலக்கம் ; இசையலைவு ; ஈட்டி . |
| தரங்கம்மி | நிலத்தின் தாழ்ந்த தரம் ; நிலவரிக்குறைவு . |
| தரங்கிணி | ஆறு . |
| தரங்கித்தல் | அலையுண்டாதல் ; மனம் அலைதல் . |
| தரங்கு | வழி ; மண்வெட்டிப் பிடியின் அடியில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு வளையம் ; ஈட்டிமுனை ; அலை . |
| தரணம் | தாண்டல் ; பாலம் ; தரிக்கை ; அரிசி ; இமயமலை ; கதிரவன் ; பாவம் ; பூமி . |
| தரணி | பூமி ; மலை ; நியாயவாதி ; சூரியன் ; மருத்துவன் ; படகு . |
| தரணிதரன் | அரசன் ; திருமால் . |
| தரணிபன் | அரசன் ; சூரியன் . |
| தரணிவாரிக்கல் | கானகக்கல் . |
| தரணீதரம் | ஆமை . |
| தரத்தர | மேன்மேலே கொடுக்க . |
| தரதூது | முயற்சி ; வேளாண்மை . |
| தரந்தம் | தவளை ; கடல் ; விடாமழை . |
| தரப்பு | பக்கம் ; உத்தியோக நிலை ; அயன்பூமி . |
| தரபடி | நடுத்தரம் ; உட்சட்டை ; ஊர் நிலங்களின் தரவாரி முறை ; காண்க : தரவழி . |
| தரம் | தகுதி ; மேன்மை ; தலை ; தெப்பம் ; வலிமை ; வீதம் ; வகுப்பு ; மட்டம் ; தக்க சமயம் ; நிலப்பிரிவு ; தீர்வை ; மலை ; பருத்திப்பொதி ; கூட்டம் ; சங்கு ; தடவை ; அச்சம் ; அரக்கு ; வரிசை ; பூமி . |
| தரவழி | வகை ; நடுத்தரம் . |
| தரவிணைக்கொச்சகம் | இரண்டு தரவுகொண்ட கொச்சகக் கலிப்பாவகை . |
| தரவு | தருகை ; கலிப்பாவின் முதலுறுப்பு ; கட்டளை ; தரகர்பெறுங் கூலி ; விலை இலாபம் ; காண்க : தரகன் ; தரகரிடமிருந்து கொள்ளும் வரி ; வரி ; வரிதண்டுகை ; பிடர் . |
| தரவுக்காரன் | தண்டக் கட்டளையை நிறைவேற்றுவோன் . |
| தரவுகொச்சகம் | கொச்சகக் கலிப்பாவகை . |
| தரவை | கரம்புநிலம் ; களை மூடிய உவர்நிலம் . |
| தரள நீராஞ்சனம் | முத்தாரத்தி . |
| தரளம் | நடுக்கம் ; முத்து ; உருட்சி . |
| தரளை | கஞ்சி ; கள் . |
| தரன் | தரித்தவன் ; எட்டு வசுக்களுள் ஒருவன் . |
| தரா | ஒருவகைக் கலப்பு உலோகம் ; பூமி ; சங்கு . |
| தராங்கம் | மலை . |
| தராசம் | வயிரக் குணங்களுள் ஒன்று ; மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்று . |
| தராசு | நிறைக்கோல் ; ஓரளவு ; துலாராசி ; பரணி நாள் ; வெள்ளெருக்கு . |
| தராசுக்குண்டு | நிறைகல் . |
| தராசுக்கொடி | காண்க : பெருமருந்து ; முல்லை . |
| தராசுக்கோல் | துலாக்கோல் . |
| தராசுத்தட்டு | துலாத்தட்டு . |
| தராசுநா | காண்க : தராசுமுள் . |
| தராசுப்படி | நிறைகல் ; காண்க : தராசுக்குண்டு . |
| தராசுமுள் | தராசில் இரண்டு தட்டும் சமமாய் உள்ளதா என்பதைக் காட்டும் முள் . |
| தராதரம் | ஏற்றத்தாழ்வு ; உயர்வுதாழ்வு ; உயர்நிலை ; மலை . |
| தராதலம் | பூமி ; கீழேழு உலகத்துள் ஒன்று . |
| தராதிபன் | அரசன் . |
| தராபதி | அரசன் . |
| தராய் | மேட்டுநிலம் ; கீரைவகை ; பிரமிப்பூண்டு . |
| தரி | இருப்பு ; நன்செய் நிலம் . |
| தரிகொடுத்தல் | இடங்கொடுத்தல் . |
| தரிகொள்தல் | இருப்புக்கொள்ளுதல் . |
| தரிகொளுதல் | இருப்புக்கொள்ளுதல் . |
| தரிசனபேதி | காண்க : தரிசனவேதி . |
| தரிசனம் | காட்சி ; பார்வை ; கண் ; தோற்றம் ; தரிசிக்கை ; சொப்பனம் முதலிய தோற்றம் ; கண்ணாடி ; மதக்கொள்கை ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று . |
| தரிசனவிசுத்தி | வீட்டுநெறியை ஐயமின்றித் தெளிகை . |
| தரிசனவேதி | தாழ்ந்த உலோகங்களை உயர்ந்த உலோகங்களாக மாற்றவல்ல பச்சிலைவகை . |
| தரிசனாவரணியம் | எண்வகைக் குற்றத்துள் உண்மைக் கொள்கையைக் காணவொட்டாமல் தடுக்கும் கருமம் . |
| தரிசனீயம் | காட்சிக்கினியது . |
| தரிசனை | காட்சி ; அறிகை ; கண்ணாடி . |
| தரிசித்தல் | பெரியோர் ; கடவுள் ; புண்ணியத் தலங்களைக் காணுதல் ; வழிபடல் . |
| தரிசியம் | காணத்தக்கது . |
| தரிசு | பயிர் செய்யாத நிலம் ; உள்ளிடு பரல் . |
| தரிஞ்சகம் | அன்றிற்பறவை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 540 | 541 | 542 | 543 | 544 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தரக்கு முதல் - தரிஞ்சகம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பூமி, ஒன்று, அரசன், கூலி, இரண்டு, தரகன், கொச்சகக், நடுத்தரம், தரவழி, சங்கு, கலிப்பாவகை, நிறைகல், காட்சி, தோற்றம், கண்ணாடி, தரிசனவேதி, இருப்புக்கொள்ளுதல், தராசுமுள், நிலம், தராசுக்குண்டு, தரம், ஏற்பாடு, செய்பவன், விற்பனைக்கு, பண்டங்களின், விற்போர்களிடையே, நின்று, விலை, இலாபம், தாழ்ந்த, வாங்குவோர், கடல், கொள்ளும், தரகுபாட்டம், தரகரிடமிருந்து, சூரியன்

