தமிழ் - தமிழ் அகரமுதலி - தப்பித்தல் முதல் - தம்பனம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| தப்பித்தல் | குற்றம் முதலியவற்றினின்று விலகுதல் . |
| தப்பித்தவறி | தவறுதலாய் ; தற்செயலாய் . |
| தப்பித்தான் | தப்புச்செய்தவன் ; தப்பிச்சென்றவன் . |
| தப்பிதம் | தவறு ; நெறிதவறுங் குற்றம் . |
| தப்பியார் | குற்றம் செய்தோர் . |
| தப்பிலி | குற்றமற்றவன் ; போக்கிரி . |
| தப்பு | குற்றம் ; பொய் ; வஞ்சனை ; தப்பித்துக் கொள்ளுகை ; துணி துவைத்தல் ; ஒரு பறைவகை . |
| தப்புக்கடலை | விளைச்சற்காலத்தில் சிதறிப்போன நிலக்கடலை . |
| தப்புக்கொட்டை | விளைச்சற்காலத்தில் சிதறிப்போன நிலக்கடலை . |
| தப்புச்செடி | தானே தோன்றிய செடி . |
| தப்புத்தண்டா | குற்றம் ; தொந்தரை . |
| தப்புதல் | தவறுதல் ; பயன்படாது போதல் ; பிறழுதல் ; விட்டுப்போதல் ; அபாயத்திலிருந்து நீங்குதல் ; இறத்தல் ; பிழைசெய்தல் ; அழிதல் ; அடித்தல் ; சீலை தப்புதல் ; விட்டு விலகுதல் ; காணாமற்போதல் ; தடவுதல் ; அப்பம் முதலியன தட்டுதல் ; கையால் தட்டுதல் ; தடவிப்பார்த்தல் ; அப்புதல் ; செய்யத் தவறுதல் ; தண்டுதல் . |
| தப்புநடத்தை | தீயவொழுக்கம் . |
| தப்புமேளம் | ஒரு பறைவகை . |
| தப்பெண்ணம் | தவறான கருத்து . |
| தப்பை | மூங்கிற்பட்டை ; முரிந்த எலும்பு பொருந்த வைத்துக் கட்டும் சிம்பு ; அடி ; ஒரு சிறு பறைவகை . |
| தபச்சரணம் | தவஞ்செய்கை . |
| தபசி | காண்க : தவசி . |
| தபசியம் | பங்குனிமாதம் ; முல்லை . |
| தபசு | காண்க : தவம் . |
| தபதபவெனல் | விரைவாகத் தொடர்தற் குறிப்பு . |
| தபதி | கல்தச்சன் , சிற்பி . |
| தபம் | காண்க : தவம் ; மாசிமாதம் ; வெப்பம் . |
| தபலை | தவலை ; பாத்திரவகை ; மத்தளவகை . |
| தபளா | மத்தளவகை . |
| தபன் | சூரியன் . |
| தபனம் | வெப்பம் ; வெயிற்காலம் ; தாகம் ; ஒரு நரகவகை . |
| தபனற்கஞ்சி | வெயிலில் நிறமிழக்கும் மஞ்சள் . |
| தபனன் | சூரியன் ; தீக்கடவுள் ; கொடிவேலி . |
| தபனியம் | காண்க : தமனியம் . |
| தபனீயகம் | காண்க : தமனியம் . |
| தபா | தடவை . |
| தபாது | தப்பு ; ஏமாற்றுகை . |
| தபாய்த்தல் | தப்பிவிடுதல் ; கேலிபண்ணுதல் ; ஏமாற்றிவிடுதல் . |
| தபால் | அஞ்சல் ; நிற்குமிடம் . |
| தபாற்காரன் | தபாற்கடிதங் கொடுப்போன் ; கடிதங்களை அஞ்சலில் கொண்டுசெல்வோன் . |
| தபித்தல் | காய்தல் ; வருந்துதல் . |
| தபுக்கெனல் | விழுதல் முதலியவற்றின் விரைவுக்குறிப்பு ; ஓர் ஒலிக்குறிப்பு . |
| தபுத்தல் | கெடுத்தல் ; அழித்தல் . |
| தபுத்துதல் | ஈரம் புலர்த்துதல் . |
| தபுதல் | கெடுதல் ; இறுத்தல் . |
| தபுதாரநிலை | கணவன் தன் தாரம் இழந்து துயருறும் நிலையைக் கூறும் புறத்துறை . |
| தபுதாரம் | கணவன் தன் தாரம் இழந்து துயருறும் நிலையைக் கூறும் புறத்துறை . |
| தபுதி | அழிவு . |
| தபோதன் | முனிவன் . |
| தபோதனன் | முனிவன் . |
| தபோநிதி | முனிவன் . |
| தபோபலம் | தவப்பயன் ; தவத்தால் உண்டாகும் வல்லமை . |
| தபோலோகம் | மேலேழு உலகினுள் ஒன்று . |
| தபோவனம் | தவம் செய்யும் காடு ; தவசிகள் தங்கும் சோலை . |
| தம் | ஒரு சாரியை இடைச்சொல் ; மூச்சடக்குகை ; மூச்சு . |
| தம்பகம் | ஒன்றுக்கும் பயன்படாது அங்கங்கே முளைத்துத் தீய்ந்துபோகும் தாவரவகை . |
| தம்பட்டம் | ஒரு பறைவகை ; வாளவரைக் கொடி . |
| தம்பட்டை | வாளவரைக்கொடி . |
| தம்பதி | கணவனும் மனைவியும் ; மருதமரம் . |
| தம்பம் | தூண் ; யானை முதலியன கட்டுந் தறி ; விளக்குத்தண்டு ; பற்றுக்கோடு ; கொடிக்கம்பம் ; கவசம் ; ஊருணி ; தம்புகைமரம் ; காண்க : தம்பனம் . |
| தம்பர் | தாம்பூல எச்சில் . |
| தம்பல் | காண்க : தம்பர் ; மழையால் வயல் இறுகுகை . |
| தம்பலடித்தல் | கனத்த மழையால் இறுகினவயலை உழுதல் ; வயலிறுகிச் சமமாதல் . |
| தம்பலப்பூச்சி | இந்திரகோபம் என்னும் பூச்சிவகை . |
| தம்பலம் | வெற்றிலைபாக்கு ; காண்க : தம்பர் ; தம்பலப்பூச்சி . |
| தம்பலாடுதல் | வயலில் நீர்பாய்ச்சி மிதித்துச் சேறாக்குதல் . |
| தம்பலி | மருதமரம் . |
| தம்பலை | நிலவிலந்தைமரம் . |
| தம்பனகாரன் | பொருள்களின் இயற்கையைக் கட்டுப்படுத்தும் மந்திரவாதி . |
| தம்பனம் | அசைவற நிறுத்துகை ; எட்டுக் கருமத்துள் ஒருவன் இயக்கத்தை மந்திரத்தால் தடுத்து நிறுத்துகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 537 | 538 | 539 | 540 | 541 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தப்பித்தல் முதல் - தம்பனம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, குற்றம், பறைவகை, தவம், தம்பர், முனிவன், துயருறும், தம்பலப்பூச்சி, நிறுத்துகை, இழந்து, தாரம், மழையால், நிலையைக், மருதமரம், கணவன், புறத்துறை, கூறும், தம்பனம், மத்தளவகை, சிதறிப்போன, நிலக்கடலை, விளைச்சற்காலத்தில், தப்பு, விலகுதல், தப்புதல், தவறுதல், வெப்பம், சூரியன், தட்டுதல், முதலியன, பயன்படாது, தமனியம்

