தமிழ் - தமிழ் அகரமுதலி - அவலம்பித்தல் முதல் - அவிநயம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அவா | எனக்கு இது வேண்டும் என்னும் எண்ணம் ; பெருவிருப்பம் ; இறங்குகை . |
| அவாச்சியம் | சொல்ல முடியாதது . |
| அவாச்சியன் | குறிப்பிடத்தகாதவன் . |
| அவாசி | தென்திசை . |
| அவாசீனம் | தென்திசை . |
| அவாதிதம் | கண்டிக்கப்படாதது . |
| அவாந்தரப்பிரளயம் | இடையில் உண்டாகும் உலக அழிவு . |
| அவாந்தரம் | இடையில் உள்ளது ; வெறுவெளி ; உதவியின்மை ; அழிவு . |
| அவாந்தரபேதம் | உட்பிரிவு . |
| அவாந்தரவெளி | வெட்டவெளி . |
| அவாய்நிலை | ஒன்றை வேண்டிநிற்கும் நிலை , ஒரு சொல் தன்னோடு பொருந்திப் பொருள் முடிதற்குரிய மற்றொரு சொல்லை வேண்டி நிற்கும் நிலை . |
| அவாயம் | காண்க : அபாயம் . |
| அவாரபாரம் | கடல் . |
| அவாரி | சிறுநீர் ; தடையின்மை . |
| அவாவல் | காண்க : அவாவுதல் . |
| அவாவறுத்தல் | ஆசையை ஒழித்தல் . |
| அவாவன் | ஆசை உடையவன் . |
| அவாவுதல் | விரும்புதல் , பற்றுச்செய்தல் ; ஒன்றை வேண்டி நிற்றல் . |
| அவி | வேள்வித்தீயில் இடும் கடவுளர்க்குரிய உணவு ; உணவு ; சோறு ; நெய் ; நீர் ; ஆடு ; கதிர் ; கதிரவன் ; காற்று ; மேகம் ; மலை ; மதில் ; பூப்பினள் . |
| அவி | (வி) தணி ; அழி . |
| அவிக்கனம் | இடையூறு இன்மை . |
| அவிக்கை | அவித்தல் . |
| அவிகம் | வைரம் . |
| அவிகாரம் | விகாரம் அற்றது , மாறாதது ; கடவுள் . |
| அவிகாரன் | கடவுள் ; ஆட்டுக்காரன் . |
| அவிகாரி | விகாரம் அற்றது ; மாறாதவன் ; கடவுள் . |
| அவிச்சன் | தந்தை . |
| அவிச்சின்னம் | இடைவிடாமை ; பிரிக்கப்படாமை . |
| அவிச்சை | காண்க : அவித்தை . |
| அவிசல் | அவிந்துபோனது . |
| அவிசல்நாற்றம் | அழுகிய காய் முதலியவற்றின் தீநாற்றம் . |
| அவிசற்பல் | சொத்தைப்பல் . |
| அவிசாரம் | ஆராய்ச்சியில்லாமை ; கவலை இல்லாமை ; காண்க : அபிசாரம் . |
| அவிசாரி | விபசாரி ; கவலையற்றவன் (ள்) . |
| அவிசு | வேள்வித்தீயில் தேவர்க்கும் கொடுக்கும் உணவு ; நெய் ; கஞ்சிவடியாது சமைத்த சோறு . |
| அவிசுவாசம் | நம்பிக்கையின்மை ; நன்றி இன்மை . |
| அவிஞ்சன் | அறியாமை உடையோன் , போதிக்கப்படாதவன் . |
| அவிஞ்சை | காண்க : அவித்தை . |
| அவிட்டம் | இருபத்துமூன்றாம் நட்சத்திரம் . |
| அவித்தல் | வேகச்செய்தல் ; அணைத்துவிடுதல் ; அடக்குதல் ; கெடுத்தல் ; துடைத்தல் ; நீக்குதல் . |
| அவித்துருமம் | இருப்பை மரம் . |
| அவித்துவையல் | பச்சடி . |
| அவித்தை | அறியாமை ; மாயை ; ஆணவம் ; ஜவகைத் துன்பங்களுள் ஒன்று ; மோகம் . |
| அவிதல் | பாகமாதல் ; இறுக்கத்தால் புழுங்குதல் ; ஒடுங்குதல் ; ஓய்தல் ; அணைந்துபோதல் ; குறைதல் ; பணிதல் ; அழிதல் ; காய்கனி முதலியன சூட்டால் வெதும்புதல் ; சாதல் . |
| அவிதா | ஆபத்தில் முறையிட்டுக் கூறும் சொல் . |
| அவிநயக்கூத்து | பாடற்பொருளைக் கையால் காட்டி ஆடும் கூத்து . |
| அவிநயம் | காண்க : அபிநயம் ; ஓர் யாப்பிலக்கணம் . |
| அவலம்பித்தல் | சார்ந்து நிற்றல் ; பற்றுதல் . |
| அவலன் | குற்றமுள்ளவன் ; பயனற்றவன் . |
| அவலி | பூனைக்காலிச் செடி . |
| அவலிடி | வரிக்கூத்துவகை . |
| அவலித்தல் | வருந்துதல் ; அழுதல் ; பதறுதல் . |
| அவலுப்பு | அவுரியினின்று எடுக்கும் உப்பு . |
| அவலேசம் | அற்பம் ; அவமானம் . |
| அவலை | கடுப்பு ; காடு . |
| அவலோகம் | பார்வை . |
| அவலோகனம் | பார்வை . |
| அவலோகித்தல் | நோக்குதல் . |
| அவவாதம் | காண்க : அபவாதம் ; ஆணை ; நம்பிக்கை . |
| அவவு | காண்க : அவா . |
| அவள் | பெண்பால் சுட்டுப் பெயர் . |
| அவளம் | தீமை . |
| அவளைதுவளை | கதம்ப உணவு . |
| அவற்கம் | கஞ்சி . |
| அவன் | ஆண்பால் சுட்டுப் பெயர் . |
| அவனி | உலகம் , பூமி . |
| அவனிகேள்வன் | நிலமகளின் கணவனான திருமால் . |
| அவனிகை | இடுதிரை . |
| அவனிபன் | அரசன் . |
| அவனிபாரகன் | அரசன் . |
| அவனிபாலகன் | அரசன் . |
| அவனிபாலன் | அரசன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 50 | 51 | 52 | 53 | 54 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அவலம்பித்தல் முதல் - அவிநயம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, உணவு, அரசன், கடவுள், சொல், அவித்தை, சுட்டுப், பெயர், அவித்தல், விகாரம், அற்றது, அறியாமை, பார்வை, இன்மை, சோறு, ஒன்றை, அழிவு, இடையில், தென்திசை, நிலை, வேண்டி, வேள்வித்தீயில், நிற்றல், அவாவுதல், நெய்

