தமிழ் - தமிழ் அகரமுதலி - அவிநயர் முதல் - அழகி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அவிர் | ஒளி . |
| அவிர்தல் | ஒளிர்தல் ; பீறுதல் . |
| அவிர்ப்பாகம் | காண்க : அவிப்பாகம் . |
| அவிரதம் | என்றும் , எப்பொழுதும் . |
| அவிருகம் | அதிவிடயப் பூண்டு . |
| அவிருத்தம் | பகையில்லாதது . |
| அவிரோதம் | மாறு இன்மை ; நட்பு . |
| அவிவாதம் | மாறுபாடு இல்லாமை ; இசைவு . |
| அவிவு | ஒழிவு . |
| அவிவேகம் | பகுத்தறிவு இன்மை . |
| அவிவேகி | பகுத்தறிவு இல்லாதவன் . |
| அவிழ் | பருக்கை , சோறு . |
| அவிழ்த்தல் | கட்டு நீக்குதல் ; மலரச்செய்தல் ; விடுகதைப் பொருளை விடுத்தல் . |
| அவிழ்த்துக் கொடுத்தல் | சொந்தப் பொருளிலிருந்து எடுத்துக் கொடுத்தல் . |
| அவிழ்தம் | மருந்து , ஔடதம் . |
| அவிழ்தல் | நெகிழ்தல் ; மலர்தல் ; உதிர்தல் ; சொட்டுதல் ; இளகுதல் ; பிரிதல் . |
| அவிழிகம் | மலர்ந்த பூ . |
| அவின் | காண்க : அபின் . |
| அவினயம் | அடக்கம் இல்லாமை . |
| அவினாபாவம் | விட்டு நீங்காத உடன் நிகழும் தன்மை . |
| அவினாபாவி | பிரிக்க முடியாதது . |
| அவினாபூதம் | நீக்கமீன்றி இருப்பது . |
| அவீசி | தூமகேதுவகை ; திரை இல்லாதது . |
| அவீரை | பிள்ளை இல்லாக் கைம்பெண் . |
| அவுக்கவுக்கெனல் | காண்க : அவக்கவக்கெனல் . |
| அவுசனம் | காண்க : ஔசனம் ; உசனம் . |
| அவுசு | ஒழுங்கு . |
| அவுசுக்காரன் | ஆடையில் விருப்பமுள்ளவன் . |
| அவுண் | அசுரசாதி . |
| அவுணன் | அசுரன் . |
| அவுத்திரி | காண்க : ஔத்திரி . |
| அவுதா | அம்பாரி . |
| அவுரி | நீலச்செடி ; மீன்வகை . |
| அவுரிச்சால் | வாயகன்ற பெரிய சால் . |
| அவுரிப்பச்சை | பச்சைக் கருப்பூரம் . |
| அவுல்தார் | சிறுபடைக்குத் தலைவன் . |
| அவுனியா | வவ்வால் மீன் . |
| அவுனுதம் | பித்தநோய்வகை ; கிரந்திநோய்வகை . |
| அவேத்தியன் | அறியப்படாதவன் . |
| அவை | மாந்தர் கூட்டம் ; அறிஞர் கூட்டம் ; சபா மண்டபம் ; புலவர் ; நாடக அரங்கு ; பன்மைச்சுட்டு ; அப்பொருள்கள் . |
| அவைக்களம் | சபை கூடும் இடம் . |
| அவைத்தல் | நெல் முதலியவற்றைக் குற்றுதல் ; கையால் குத்துதல் ; அவித்தல் ; நெரித்தல் . |
| அவைப்பரிசாரம் | சபை வணக்கம் . |
| அவைப்பு | குற்றப்பட்ட அரிசி . |
| அவையடக்கம் | சபையோர்க்கு வழிபடு கிளவி கூறுகை . |
| அவையடக்கு | சபையோர்க்கு வழிபடு கிளவி கூறுகை . |
| அவையம் | அறிஞர் கூட்டம் ; நியாயம் உரைக்கும் சபையோர் ; அவைக்களம் ; இலாமிச்சை . |
| அவையம்போடுதல் | சத்தமிடுதல் . |
| அவையர் | சபையோர் . |
| அவையல் | குற்றலரிசி ; திரள் ; அவல் . |
| அவையல்கிளவி | சபையில் உரைக்கத் தகாத சொல் . |
| அவையலும் துவையலும் | நெல் முதலியன குற்றப் பட்டுக் கிடக்கும் நிலை ; செயல் முற்றுப் பெறாமை . |
| அவையறிதல் | சபையின் இயல்பை அறிதல் . |
| அவையாவரிசி | கொழியல் அரிசி . |
| அவையிற்றின் | அவற்றின் . |
| அழக்கு | காண்க : ஆழாக்கு . |
| அழக்குடம் | பிணக்குடம் . |
| அழக்கொடி | பேய்ப்பெண் . |
| அழகங்காட்டுதல் | காண்க : அழகுகாட்டுதல் . |
| அழகச்சு | நாணயவகை . |
| அழகப்பன்காளை | பெருமாள் மாடு . |
| அழகம் | பெண்டிர் கூந்தல் . |
| அழகர் | திருமாலிருஞ்சோலைத் திருமால் ; காண்க : வெள்ளெருக்கு . |
| அழகர்மலை | அழகர் கோயில்கொண்டுள்ள மலை , திருமாலிருஞ்சோலை . |
| அழகன் | திருமால் ; அழகுடையவன் ; சுந்தரன் . |
| அழகாரம் | அழகான பேச்சு ; வீண்புகழ்ச்சிப் பேச்சு . |
| அழகி | அழகுள்ளவள் . |
| அவிநயர் | கூத்தர் ; அவிநய யாப்பிலக்கண நூலின் ஆசிரியர் . |
| அவிநாசவாதி | பொருள் அழியாதது என்னும் கொள்கையை உடையவன் . |
| அவிநாசி | கடவுள் . |
| அவிப்பலி | தேவர்க்குக் கொடுக்கும் உணவு ; வீரன் சூளுரைத்துத் தன்னைத் தீக்குப் பலி கொடுக்கை . |
| அவிப்பாகம் | தேவர் உணவின் பங்கு . |
| அவிப்பிணம் | உவர்மண்ணை எடுத்துக் காய்ச்சும் உப்பு . |
| அவிபக்த குடும்பம் | பிரிக்கப்படாத சொத்துள்ள குடும்பம் . |
| அவிபாகம் | பிரிக்கப்படாதது . |
| அவிமுத்தம் | காசி நகரம் . |
| அவியல் | பாகஞ் செய்கை ; உணவு ; கறிவகை ; வெப்பம் ; புழுக்கம் ; வாய்ப்புண் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 51 | 52 | 53 | 54 | 55 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அவிநயர் முதல் - அழகி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, கூட்டம், கூறுகை, வழிபடு, சபையோர், கிளவி, திருமால், குடும்பம், உணவு, பேச்சு, சபையோர்க்கு, அழகர், நெல், பகுத்தறிவு, இல்லாமை, இன்மை, அவிப்பாகம், கொடுத்தல், எடுத்துக், சொல், அவைக்களம், அறிஞர், அரிசி

