தமிழ் - தமிழ் அகரமுதலி - தட்டுதல் முதல் - தடவுதல் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
தட்டுதல் | கதவு முதலியவற்றை அடித்தல் ; மோதுதல் ; கிட்டுதல் ; கொட்டுதல் ; உட்செல்லுமாறு அடித்தல் ; தட்டித் தூசி போக்குதல் ; உடைத்தல் ; கவர்தல் ; தள்ளுதல் ; அகற்றுதல் ; தடுத்தல் ; மறுத்தல் ; குலையச் செய்தல் ; தப்புதல் . |
தட்டுப்படுதல் | தடைப்படுதல் ; குறைவுபடுதல் ; புலன்களுக்குத் தெரிதல் . |
தட்டுப்பறத்தல் | திடீரென்று மறைதல் . |
தட்டுப்பாய்தல் | கிளித்தட்டு விளையாட்டு . |
தட்டுப்பிழா | வட்டமாய் முடைந்த பெட்டி வகை . |
தட்டுப்புடை | தானியத்தை முறம் முதலியவற்றாற் புடைக்கை . |
தட்டுமாறுதல் | நிலைகெடுதல் . |
தட்டுமானம் | ஏமாற்று ; தந்திரவழி . |
தட்டுமுட்டு | வீட்டுப் பொருள்கள் ; கருவிகள் ; மூட்டைகள் . |
தட்டுருவுதல் | ஊடுசெல்லுதல் . |
தட்டுவாணி | ஒரு குதிரைவகை ; விலைமகள் . |
தட்டுளுப்பு | தடுமாற்றம் . |
தட்டை | மொட்டை ; பரந்த வடிவம் ; முறம் ; திருகாணி ; பயிர்களின் அடித்தாள் ; தினைத்தாள் ; காண்க : மூங்கில் ; கிளிகடிகருவி ; கவண் ; கரடிகைப்பறை ; அறிவிலி ; தீ ; ஒரு காலணிவகை . |
தட்டைத்தலை | தட்டையான பெரிய தலை . |
தட்டைப்பயறு | பயறுவகை ; பெரும்பயறு . |
தட்டையம்மை | காண்க : தட்டம்மை . |
தட்டொளி | உலோகக் கண்ணாடி . |
தட்டோடு | தட்டையோடு ; கூரையை மூடுமாறு இடும் வளைவுள்ள ஒருவகை ஓடு . |
தட்பம் | குளிர்ச்சி ; விசிறுதல் ; முதலிய போற்றுகை ; அருள் . |
தட்பவெப்பம் | குளிர்ச்சியும் சூடும் . |
தட | பெரிய ; வளைந்த ; மெல்லிய . |
தடக்கம் | தடை . |
தடக்கிப்பேசுதல் | திக்கிப்பேசுதல் . |
தடக்கு | தடை . |
தடக்குதல் | தடைபண்ணுதல் ; இடறுதல் ; தடைப்படுதல் . |
தடங்கல் | தடை ; மறுப்பு ; சுணக்கம் ; அடைப்பு ; வேலையின்றியிருக்கை . |
தடங்கல்பண்ணுதல் | நிறுத்திவைத்தல் ; தடை செய்தல் . |
தடங்குதல் | காண்க : தடக்குதல் . |
தடங்கோலுதல் | வழிசெய்தல் ; ஒருவனைக் கெடுக்க வழி முதலியன தேடுதல் . |
தடத்தம் | நடுநிலை ; இயற்கையானன்றிப் பிறிதொன்றன் சார்பு முதலியனபற்றிப் பொருளுக்குள்ள இலக்கணம் ; ஐந்தொழில்களைப் பண்ணும் இறைநிலை . |
தடத்தன் | நடுநிலையாளன் ; மேலோன் . |
தடதடத்தல | நாக்குத் தட்டல் ; தள்ளாடுதல் ; குழறுதல் ; தளர்வாதல் . |
தடதடப்பு | தள்ளாட்டம் . |
தடதடெனல் | விரைவுக்குறிப்பு ; ஒலிக்குறிப்பு . |
தடந்தேடுதல் | காண்க : தடங்கோலுதல் . |
தடபடெனல் | ஒலிக்குறிப்பு ; தள்ளாடற்குறிப்பு . |
தடபுடல் | விரைவு ; சந்தடி ; அபாயநிலை ; பகட்டு . |
தடம் | நீர்நிலை ; கரை ; வரம்பு ; வேள்விக்குழி ; தாழ்வரை ; வெளியிடம் ; மலை ; மூங்கில் ; இடம் ; உயர்ந்த இடம் ; வழி ; மனைவாயில் ; சுவடு ; கண்ணி ; சுருக்கு ; பெருமை ; அகலம் ; செல்வப்பகுதி ; வளைவு ; கடம்புவகை . |
தடம்படுதல் | தழும்புபடுதல் ; பயிற்சியால் ஆற்றல் மிகுதல் . |
தடம்பார்த்தல் | அடிச்சுவடு பார்த்தல் ; கேட்டில் உதவி தேடுதல் . |
தடம்புரளுதல் | நிலைதடுமாறுதல் ; நிலைகெடுதல் ; பாதம் நரம்பு பிசகுதல் ; பாதையை விட்டு விலகுதல் . |
தடமண் | சுதைமண் . |
தடயம் | பலபண்டம் ; அணிகலன்கள் ; களவு போய்த் திரும்பக் கிடைத்த பொருள் ; விலங்கு . |
தடல் | மேட்டுநிலம் ; பலாப்பழச்செதிள் ; வாழை மடல் ; விலங்கு , மரம் முதலியவற்றின் தோல் . |
தடவக்கொடுத்தல் | முதுகைத் தடவ இடங்கொடுத்தல் ; மிக இணங்குதல் . |
தடவரல் | வளைவு . |
தடவருதல் | காண்க : தடவாதல் . |
தடவல் | ஆறு என்னும் எண்ணின் குழூஉக்குறி ; முறை ; முட்டுப்பாடு ; பொங்கல் முதலிய உணவுவகை . |
தடவாதல் | தடவுதல் ; பூசுதல் ; தேடுதல் ; யாழ் முதலியன வாசித்தல் . |
தடவிக்கட்டுதல் | பதித்தல் . |
தடவிக்கொடுத்தல் | தடவுதல் ; ஊக்கப்படுத்துதல் ; சமாதானப்படுத்துதல் ; குறையக்கொடுத்தல் . |
தடவு | பருமை ; பகுதி ; தூபக்கால் ; வேள்விக்குழி ; கணப்புச்சட்டி ; ஒரு மரவகை ; சிறைச்சாலை . |
தடவுத்தாழி | பெருஞ்சாடி . |
தடவுதல் | பூசுதல் ; வருடுதல் ; இருட்டில் கைகால் முதலியவற்றால் துழாவுதல் ; தேடுதல் ; குறைத்தளத்தல் ; யாழ் முதலியன மீட்டுதல் ; திருடுதல் ; உரிமையில்லாதவரைப் புணர்தல் ; அசைதல் ; தடுமாறுதல் ; முட்டுப்பாடாயிருத்தல் ; தகட்டுப் பணிகாரம் செய்தல் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 530 | 531 | 532 | 533 | 534 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தட்டுதல் முதல் - தடவுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, தேடுதல், தடவுதல், முதலியன, செய்தல், இடம், வேள்விக்குழி, வளைவு, தடவாதல், யாழ், பூசுதல், ஒலிக்குறிப்பு, விலங்கு, தடங்கோலுதல், நிலைகெடுதல், முறம், தடைப்படுதல், மூங்கில், பெரிய, தடக்குதல், முதலிய, அடித்தல்