தமிழ் - தமிழ் அகரமுதலி - தடையம் முதல் - தண்டாயம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| தடையம் | அணிகலன்கள் ; தடை ; களவு முதலிய குற்றங்களில் சம்பந்தப்பட்ட பொருள் ; கத்திப்பிடி ; பெற்றுக்கொண்ட பொன்னுக்குத் தட்டார் கொடுக்கும் பொன்னிறை கல் ; தராசுதடை ; தட்டுமுட்டு ; நிறுக்கப்போகும் பொருளை வைத்திருக்கும் பாத்திரம் முதலியவற்றிற்குரிய எடை . |
| தடையறுத்தல் | மந்திரத் தடைநீக்குதல் ; இடையூறு விலக்குதல் . |
| தடைவிடை | மறுப்பும் மாற்றமும் . |
| தண் | குளிர்ச்சி ; அருள் . |
| தண்கடற்சேர்ப்பன் | நெய்தல்நிலத் தலைவன் . |
| தண்கதிர் | குளிர்ந்த ஒளியுள்ள கதிர்களையுடைய சந்திரன் . |
| தண்சுடர் | குளிர்ந்த ஒளியுள்ள கதிர்களையுடைய சந்திரன் . |
| தண்சுடர்க்கலையோன் | குளிர்ந்த ஒளியுள்ள கதிர்களையுடைய சந்திரன் . |
| தண்டக்காரன் | வேலைக்காரன் . |
| தண்டக்கூற்றம் | வரிவகை . |
| தண்டகநாடு | காண்க : தொண்டைநாடு . |
| தண்டகம் | காண்க : தொண்டைநாடு ; தண்டகாரணியம் ; தண்டனை ; வடமொழியில் ஒருவகைச் செய்யுள் ; வீணாதண்டம் என்னும் முதுகெலும்பு ; அணிகலன் ; கரிக்குருவி ; குறுந்தறி ; நுரை . |
| தண்டகமாலை | முந்நூறு வெண்பாக்களால் பாடும் ஒரு நூல்வகை . |
| தண்டகன் | ஒரு மன்னன் ; யமன் . |
| தண்டகாகம் | காண்க : செம்போத்து . |
| தண்டகாரணியம் | தக்கணதேசத்தில் துறவியர் வசித்துவந்த ஒரு காடு . |
| தண்டங்கொடுத்தல் | அபராதங்கட்டுதல் ; இழத்தல் ; இழப்புக்கு ஈடு கொடுத்தல் . |
| தண்டச்சோறு | பயனற்றவனுக்கு இடும் உணவு ; இலவசமாகக் கொடுக்குஞ் சோறு ; காண்க : புல்லுருவி . |
| தண்டசக்கரம் | குயவனது சுழற்றுகருவி . |
| தண்டசம் | கருவிவகை . |
| தண்டஞ்செய்தல் | நிலத்தில் வீழ்ந்து வணங்குதல் ; தண்டித்தல் ; கோலால் அளத்தல் . |
| தண்டடித்தல் | பாளையம் அடித்துப் படை இறங்குதல் . |
| தண்டத்தலைவன் | படைத்தலைவன் . |
| தண்டத்தான் | யமன் . |
| தண்டத்துக்கழுதல் | பொருள் முதலியவற்றைப் பயனின்றிக் கொடுத்தல் ; நட்டமாக இறுத்தல் . |
| தண்டதரன் | யமன் ; கதாயுதத்தையுடைய வீமன் ; அரசன் ; குயவன் . |
| தண்டதாசன் | அடிமை . |
| தண்டநாயகம் | படைத்தலைமையாகிய வேலை . |
| தண்டநாயகன் | படைத்தலைவன் ; தண்டனை செய்யும் அதிபதியாகிய அரசன் ; சிவகணத் தலைவனாகிய நந்தி . |
| தண்டநீதி | அரசியல் நூல் . |
| தண்டப்படுதல் | அபராதம் விதிக்கப்படுதல் . |
| தண்டப்பொருள் | அபராதமாகக் கொள்ளும் பொருள் . |
| தண்டபாசிகன் | கொலைகாரன் . |
| தண்டபாணி | தண்டைக் கையிலுடைய முருகன் ; திருமால் ; யமன் ; வீமன் . |
| தண்டம் | கோல் ; தண்டாயுதம் ; அபராதம் ; தண்டனை ; குடைக்காம்பு ; உலக்கை ; படகு துடுப்பு ; ஓர் அளவை ; உடம்பு ; படை ; படை வகுப்புவகை ; திரள் ; வரி ; கருவூலம் ; இழப்பு ; யானைகட்டும் இடம் ; யானை செல்லும் வழி ; ஒறுத்து அடக்குகை ; வணக்கம் ; ஒரு நாழிகை நேரம் ; செங்கோல் . |
| தண்டம்பண்ணுதல் | அடியில் வீழ்ந்து வணங்குதல் . |
| தண்டம்பிடித்தல் | அபராதம் வாங்குதல் . |
| தண்டம்போடுதல் | அபராதமிடுதல் ; வணங்குதல் . |
| தண்டமானம் | வால் முறுக்குதல் . |
| தண்டமிழ் | தண்ணிய தமிழ் . |
| தண்டயமரம் | கோக்காலி . |
| தண்டியமரம் | கோக்காலி . |
| தண்டயாத்திரை | படையெடுத்துச் செல்லுகை . |
| தண்டர் | தண்டனை செய்வோர் . |
| தண்டல் | வசூலித்தல் ; வசூலிக்கும் பொருள் ; தீர்வை வசூலிப்பவன் ; எதிர்த்தல் ; தண்டனை ; படகு தலைவன் . |
| தண்டலர் | பகைவர் . |
| தண்டலாளன் | தீர்வை வசூலிப்போன் . |
| தண்டலை | சோலை ; பூந்தோட்டம் ; ஓர் ஊர் . |
| தண்டவாளம் | புடைவைவகை ; இரும்புச்சட்டம் . |
| தண்டற்காரன் | வரி முதலியன வசூலிப்போன் ; தீர்வை வசூல் செய்யும் ஊர்ப் பணியாளன் ; படகு தலைவன் . |
| தண்டன் | கோல் ; வணக்கம் . |
| தண்டன்சமர்ப்பித்தல் | மார்பு நிலத்துற விழுந்து வணங்குதல் . |
| தண்டனம் | சிட்சை . |
| தண்டனிடுதல் | கீழே விழுந்து வணங்குதல் . |
| தண்டனை | ஒறுப்பு . |
| தண்டா | தொந்தரவு ; சண்டை ; சிக்கல் ; கதவை அடைத்து இடும் இரும்புத்தடி ; உடற்பயிற்சி வகை . |
| தண்டாமை | நீங்காமை . |
| தண்டாயம் | பாரந்தாங்குந் தண்டு ; தவணைப் பகுதி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 532 | 533 | 534 | 535 | 536 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தடையம் முதல் - தண்டாயம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், தண்டனை, வணங்குதல், யமன், பொருள், காண்க, தலைவன், தீர்வை, படகு, குளிர்ந்த, அபராதம், கதிர்களையுடைய, ஒளியுள்ள, சந்திரன், கோல், வணக்கம், வசூலிப்போன், விழுந்து, கோக்காலி, வீழ்ந்து, கொடுத்தல், தண்டகாரணியம், தொண்டைநாடு, இடும், படைத்தலைவன், அரசன், வீமன், செய்யும்

