தமிழ் - தமிழ் அகரமுதலி - தசமூலம் முதல் - தட்டல் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
தசமூலம் | கண்டங்கத்திரி , சிறுமல்லிகை , சிறுவழுதுணை , தழுதாழை , நெருஞ்சி , பாதிரி , பெருங்குமிழ் , பெருமல்லிகை , வாகை , வில்வம் என்னும் பத்து மருந்துவேர்கள் . |
தசரா | மாளய அமாவாசையை அடுத்துத் துர்க்கையை வணங்கி நிகழ்த்தப்படும் பத்து நாள் விழா . |
தசவவதாரன் | பத்து அவதாரங்கள் எடுத்த திருமால் . |
தசவாயு | உடலில் நிற்கும் பத்து வாயு ; அவை : அபானன் , உதானன் , கிருகரன் , கூர்மன் , சமானன் , தனஞ்சயன் , தேவதத்தன் , நாகன் , பிராணன் , வியாழன் என்பன . |
தசனப்பொடி | கருநிறமுள்ள பற்பொடிவகை . |
தசனம் | பல் , கவசம் ; மலைமுடி . |
தசாக்கரி | ஒரு பண்வகை . |
தசாங்கத்தயல் | ஆசிரியவிருத்தத்தால் அரசியல் உறுப்புகள் பத்தனையும் பாடும் நூல்வகை . |
தசாங்கம் | ஊர் , யானை , கொடி , செங்கோல் , நாடு , குதிரை , மலை , மாலை , முரசு , யாறு என்னும் பத்து அரசியல் உறுப்புகள் . |
தசாட்சரி | ஒரு பண்வகை . |
தசாமிசம் | பத்தில் ஒரு கூறு ; பத்தில் ஒன்று . |
தசாவதாரம் | மீன் , ஆமை , பன்றி , நரசிங்கம் , வாமனன் , பரசுராமன் , இராமன் , பலராமன் , கண்ணன் , கற்கி என்னும் திருமாலின் பத்துத் திருப்பிறப்புகள் . |
தசியு | ஆரியர் அல்லாத சாதிவகை ; திருடன் . |
தசிரம் | உட்டுளை ; மழைத்தூறல் . |
தசுகரம் | களவு . |
தசும்பர் | குடம் ; மிடா ; கோபுரவிமானங்களின் உச்சிக்குடம் ; பொன் . |
தசும்பு | குடம் ; மிடா ; கோபுரவிமானங்களின் உச்சிக்குடம் ; பொன் . |
தசுமன் | கள்வன் ; வேள்வி செய்விப்போன் . |
தசை | இறைச்சி , ஊன் , புலால் , மாமிசம் ; சதை , முடைநாற்றம் ; பழத்தின் சதை ; நிலைமை , கோளின் ஆட்சிக்காலம் ; திரி . |
தசைக்கனி | சதைப்பற்றுள்ள பழவகை . |
தசைத்தல் | சதைப்பிடித்தல் ; கொழுத்தல் . |
தசைதல் | சதைப்பற்றாதல் ; பூரித்தல் . |
தசைநரம்பு | அசைவுகொடுக்கும் நரம்பு . |
தசைநார் | அசைவுகொடுக்கும் நரம்பு . |
தசைப்பற்று | தசைபிடித்திருத்தல் ; சதை . |
தசைப்பு | கொழுப்பு ; சதைப்பிடித்திருத்தல் . |
தசைபிடி | சதைபிடிக்கை . |
தசையடைப்பு | காண்க : தசைவளர்ச்சி ; கொழுப்புப் பிடித்தல் . |
தசையூறுதல் | சதைபிடித்தல் . |
தசைவலி | சதையில் உண்டாகும் நோவு . |
தசைவளர்ச்சி | சதைப்பற்றுண்டாகை ; புண்ணைச்சுற்றிச் சதை மிகுகை ; மூத்திரத்துளையை அடைத்துக்கொண்டு சதை வளர்கை . |
தசைவைப்பு | கோளின் ஆட்சிமுடிவு . |
தஞ்சக்கேடு | வலுவின்மை ; வறுமை . |
தஞ்சம் | எளிது ; தாழ்வு ; எளிமை ; பற்றுக்கோடு ; அடைக்கலப்பொருள் ; உறுதி ; பெருமை . |
தஞ்சன் | அறிஞன் . |
தஞ்சனன் | தன்னையுணர்ந்தவன் . |
தஞ்சு | காண்க : தஞ்சம் . |
தட்குதல் | தங்குதல் ; கட்டுதல் ; தடுத்தல் . |
தட்சகன் | எண்வகை நாகத்துள் ஒன்று ; குடும்பத் தலைவன் . |
தட்சசங்காரன் | தக்கனை அழித்தவனான சிவன் . |
தட்சணம் | தெற்கு ; வலப்பக்கம் ; அப்போதே . |
தட்சணாக்கினி | காண்க : தக்கணாக்கினி . |
தட்சணாமூர்த்தம் | காண்க : தட்சிணாமூர்த்தம் . |
தட்சணாமூர்த்தி | காண்க : தட்சிணாமூர்த்தி . |
தட்சணாயம் | காண்க : தக்கணாயனம் . |
தட்சணை | காண்க : தட்சிணை . |
தட்சிணபூமி | பூகோளத்தின் தென் சீதளபாகம் . |
தட்சிணம் | தக்கிணம் , தெற்கு ; வலப்பக்கம் ; அறிவுக்கூர்மை ; தாராளம் . |
தட்சிணாசலம் | பொதியமலை . |
தட்சிணாமூர்த்தம் | சிவபிரான் தென்முகமாயிருந்து பிரமபுத்திரர்களாகிய சனகாதியர் நால்வருக்கும் உபதேசித்த திருவுருவம் . |
தட்சிணாமூர்த்தி | தென்முகமாயிருக்கும் சிவமூர்த்தம் ; தெற்கிலிருக்கும் அகத்தியர் ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று . |
தட்சிணாயனம் | காண்க : தக்கணாயனம் . |
தட்சிணாவர்த்தம் | காண்க : வலம்புரிச்சங்கு . |
தட்சிணை | குரு முதலிய பெரியோருக்குக் கொடுக்கும் பொருள் ; பரிதானம் ; சிட்சை . |
தட்டகப்பை | தட்டையாக இருக்கும் தோசை திருப்பி என்னும் கருவி . |
தட்டத்தானி | தன்னந்தனி ; முற்றும் தனித்திருக்கை . |
தட்டம் | உண்கலம் ; தாம்பாளம் ; துயிலிடம் ; படுக்கை ; கச்சு ; கைகொட்டுகை ; பரந்த இதழுடைய பூ ; நீர்நிலை ; பல் ; பாம்பின் நச்சுப்பல் ; நிலத்தில் வீழ்ந்து வணங்குகை ; யானை செல்லும் வழி ; மோவாய் ; அல்குல் ; வயல் . |
தட்டம்மை | அம்மைநோய்வகை . |
தட்டல் | கை முதலியவற்றால் தட்டுதல் ; தாளம் போடல் ; தடுத்தல் ; முட்டுப்பாடு ; ஐந்து என்பதன் குழூஉக்குறி ; தாலம் ; ஒன்றில் உள்ளதை வெளியில் கொட்டுகை . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 528 | 529 | 530 | 531 | 532 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தசமூலம் முதல் - தட்டல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, பத்து, என்னும், ஒன்று, தடுத்தல், தஞ்சம், தசைவளர்ச்சி, தெற்கு, வலப்பக்கம், தட்சிணை, தக்கணாயனம், தட்சிணாமூர்த்தி, தட்சிணாமூர்த்தம், நரம்பு, பொன், யானை, உறுப்புகள், அரசியல், பண்வகை, பத்தில், குடம், கோளின், உச்சிக்குடம், கோபுரவிமானங்களின், மிடா, அசைவுகொடுக்கும்