தமிழ் - தமிழ் அகரமுதலி - தடவுநிலை முதல் - தடைபண்ணுதல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| தடவுநிலை | துறக்கம் . |
| தடவுவாய் | மலைச்சுனை . |
| தடவை | முறை ; தவணை . |
| தடறு | ஆயுத உறை . |
| தடா | பானை ; மிடா ; கணப்புச்சட்டி ; பருமை ; மிடாவினும் பெரிய கலம் . |
| தடாககருமம் | மலங்கழிக்கை . |
| தடாகம் | குளம் . |
| தடாகவாதாரம் | ஏரிப் பாய்ச்சலுள்ள நிலம் . |
| தடாதகை | தடுத்தற்கரிய தகையுடைய மீனாட்சிதேவி . |
| தடாதடி | குழப்பம் . |
| தடாதடிக்காரன் | நியாயமின்றிப் பலவந்தஞ் செய்வோன் , அடாவடிக்காரன் . |
| தடாபுடாவெனல் | கோபித்துப் பேசுங்குறிப்பு ; கீழ்விழும் ஒலிக்குறிப்பு ; பகட்டுக்குறிப்பு . |
| தடாம் | வளைவு . |
| தடாரம் | ஈரொத்துத் தாளம் ; சின்னம்மை . |
| தடாரி | உடுக்கை ; கிணைப்பறை ; பம்பை ; வாத்தியப்பொது . |
| தடாரித்தல் | ஊடுருவுதல் ; மிகக் கண்டித்தல் . |
| தடாவுதல் | வளைதல் . |
| தடி | கழி ; தண்டாயுதம் ; தடிக்கொம்பு ; மரம் முதலியவற்றின் பிளந்த துண்டம் ; அளவுகோல் ; ஆற்றங்கரை ; உலக்கை ; பருமைவில் ; வயல் ; பாத்தி ; தசை ; கருவாடு ; உடும்பு ; மிதுனராசி ; கீறற் கையெழுத்து ; மின்னல் . |
| தடிக்கம்பு | கைக்கழி . |
| தடிக்கொம்பு | தடிக்கம்பு ; மாட்டுக் குற்றவகை . |
| தடிகாரன் | தடியையுடையவன் ; அழிப்பவன் . |
| தடித்தல் | பெருத்தல் ; மிகுதல் ; உறைதல் ; திரளுதல் ; தாமதித்தல் ; மரத்தல் ; உரப்பாதல் ; வீங்குதல் , பருத்தல் , சித்தம் கடினமாதல் ; நச்சுக்கடியினால் தடிப்புண்டாதல் . |
| தடித்தனம் | முருட்டுத்தனம் ; மட்டித்தனம் ; சோம்பேறித்தனம் . |
| தடித்து | மின்னல் . |
| தடிதல் | வெட்டுதல் ; அழித்தல் ; குறைத்தல் . |
| தடிப்பம் | பருமை ; வீக்கம் . |
| தடிப்பயல் | கொழுத்தவன் ; முரடன் ; மட்டி . |
| தடிப்பு | கடினம் ; வீக்கம் ; உடல் தழும்பு ; பூரிப்பு ; கனம் ; செருக்கு . |
| தடிபிணக்கு | அடிதடி . |
| தடிபோடுதல் | நிலம் அளத்தல் ; தேரை மரக்கட்டையால் நெம்பிக் கிளப்புதல் ; இடையூறுசெய்தல் ; வருத்தி முயன்று ஒருவனை வேலையில் ஈடுபடும்படி செய்தல் . |
| தடிமன் | நீர்க்கோவை ; பருமை . |
| தடிமாடு | கொழுத்தவன் , பருத்தவன் , முரடன் . |
| தடிமிண்டன் | கொழுத்தவன் , பருத்தவன் , முரடன் . |
| தடியன் | கொழுத்தவன் , பருத்தவன் , முரடன் . |
| தடிவு | வெட்டு ; அழிக்கை ; கொலை . |
| தடினி | ஆறு . |
| தடு | தடுக்கை . |
| தடுக்கல் | தடை . |
| தடுக்கிநிற்றல் | தடையால் நின்றுபோதல் . |
| தடுக்கு | இடறுகை ; தட்டி ; பாய் ; தவிசு . |
| தடுக்குத்தள்ளுதல் | இச்சகம் பேசுதல் . |
| தடுக்குதல் | இடறுதல் ; தடைசெய்தல் . |
| தடுக்குப்பாய் | சிறுபாய் . |
| தடுக்குப்போடுதல் | உட்காரச் சிறுபாய் இடுதல் ; உபசரித்தல் . |
| தடுத்தல் | தடைசெய்தல் ; அடைத்தல் ; வேறுபிரித்தல் ; நிறுத்திவைத்தல் ; அடக்குதல் ; விலக்குதல் ; மறுத்தல் ; எதிர்த்தல் ; பயனறச்செய்தல் ; எண்ணம் மாறச்செய்தல் . |
| தடுத்தாள்தல் | திருத்தி வயமாக்குதல் . |
| தடுத்தாளுதல் | திருத்தி வயமாக்குதல் . |
| தடுப்பு | தடுக்கை ; தடை . |
| தடுமன் | காண்க : தடிமன் . |
| தடுமாற்றம் | ஒழுங்கின்மை ; தள்ளாடுகை ; மனக்கலக்கம் ; ஐயம் ; தவறு . |
| தடுமாற்று | மனக்கலக்கம் . |
| தடுமாறுத்தி | காரியத்தைக் காரணமெனத் தடுமாறக் கூறும் அணிவகை . |
| தடுமாறுதல் | ஒழுங்கீனமாதல் ; நெறியின்றிக் கலந்துகிடத்தல் ; மனங்கலங்குதல் ; துன்பத்துக்குள்ளாதல் ; ஐயுறுதல் ; தவறுதல் ; தள்ளாடுதல் . |
| தடுமாறுவமம் | காண்க : எதிர்நிலையணி . |
| தடுமாறுவமை | காண்க : எதிர்நிலையணி . |
| தடை | தடுக்கை ; இடையூறு ; மறுப்பு ; கவசம் ; காப்பு ; காவல் ; வாசல் ; அணை ; அடைப்பு ; மந்திரத் தடை ; காண்க : தடல் ; எண்பதுபலங் கொண்ட அளவு ; நிறுக்கப்போகும் பொருளை வைத்திருக்கும் பாத்திரம் முதலியவற்றிற்குரிய எடை . |
| தடைஇய | திரண்ட ; பெருத்த . |
| தடைக்கட்டு | நிறை அளவுகளைப் பரிசோதிக்கும் உத்தியோகம் . |
| தடைகட்டுதல் | பாம்பு முதலியவற்றை மந்திரத்தால் தடுத்தல் ; தராசில் எடைத் தடையமிடுதல் . |
| தடைத்தல் | தடுத்தல் . |
| தடைதல் | தடுத்தல் . |
| தடைபடுத்துதல் | இடையூறுசெய்தல் ; காவற்படுத்துதல் ; தடுத்துதல் . |
| தடைபண்ணுதல் | இடையூறுசெய்தல் ; காவற்படுத்துதல் ; தடுத்துதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 531 | 532 | 533 | 534 | 535 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தடவுநிலை முதல் - தடைபண்ணுதல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கொழுத்தவன், முரடன், தடுத்தல், காண்க, இடையூறுசெய்தல், தடுக்கை, பருமை, பருத்தவன், நிலம், வயமாக்குதல், மனக்கலக்கம், எதிர்நிலையணி, தடுத்துதல், காவற்படுத்துதல், திருத்தி, தடிக்கொம்பு, தடிக்கம்பு, தடிமன், மின்னல், தடைசெய்தல், சிறுபாய், வீக்கம்

