தமிழ் - தமிழ் அகரமுதலி - அவதிகத்தம் முதல் - அவலம்பம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அவபிருதம் | வேள்வி முடிவில் நீராடுகை . |
| அவபுத்தி | கெடுமதி . |
| அவம் | வீண் ; பயனின்மை ; கேடு ; ஆணை ; அழைப்பு ; வேள்வி ; ஆகாயத்தாமரை . |
| அவமதி | அவமானம் ; நிந்தனை ; இகழ்ச்சி . |
| அவமதிச்சிரிப்பு | இகழ்ச்சி நகை . |
| அவமதித்தல் | இகழ்தல் . |
| அவமதிப்பு | இகழ்ச்சி . |
| அவமரணம் | காண்க : அகாலமிருத்து . |
| அவமரியாதை | மரியாதைக் குறைவு . |
| அவமழை | கேடு விளைக்கும் மழை . |
| அவமாக்குதல் | வீணாக்குதல் . |
| அவமானம் | காண்க : அவமதிப்பு . |
| அவமானித்தல் | இகழுதல் . |
| அவமிருத்து | காண்க : அகாலமிருத்து . |
| அவயங்காத்தல் | காண்க : அடைகாத்தல் . |
| அவயம் | அடைக்கலம் புகுவோன் ; புகலிடம் ; அடைகாக்கை ; வெட்டிவேர் ; இரைச்சல் . |
| அவயவம் | உடலின் உறுப்பு ; அங்கம் ; இலாமிச்சைச் செடி . |
| அவயவி | உறுப்புள்ளது ; உடல் ; அவை உறுப்பினன் . |
| அவயோகம் | தீய நிகழ்ச்சி . |
| அவர் | அவன் , அவள் என்பதன் பன்மைச் சொல் ; ஒருவரைக் குறிக்கும் பன்மைச் சொல் . |
| அவர்கள் | காண்க : அவர் ; ஒருவர் பெயரை அடுத்து வழங்கும் மரியாதைச் சொல் . |
| அவர்ணியம் | உவமானம் . |
| அவர்வயின்விதும்பல் | பிரிவின்கண் தலைமகனும் தலைமகளும் வேட்கை மிகுதியால் ஒருவரிடம் ஒருவர் செல்ல விரைதல் . |
| அவரகாத்திரம் | கால் . |
| அவரசன் | தம்பி . |
| அவரசை | தங்கை . |
| அவரம் | பிந்தியது ; யானையின் பின்னங்காற் புறம் . |
| அவராகம் | இச்சையின்மை . |
| அவராத்திரி | வீணான இரவு . |
| அவரூபம் | உருவக்கேடு , விகாரவடிவம் . |
| அவரை | அவரைக்கொடி . |
| அவரைப்பிராயம் | குழந்தைப்பருவம் . |
| அவரோகணம் | இறங்குகை ; விழுது ; இசை முறையில் வரும் கமகம் பத்தனுள் ஒன்று ; வேதத்தைத் திருப்பிச் சொல்லுகை . |
| அவரோகம் | இறங்குகை ; விழுது ; இசை முறையில் வரும் கமகம் பத்தனுள் ஒன்று ; வேதத்தைத் திருப்பிச் சொல்லுகை . |
| அவரோகி | ஆலமரம் . |
| அவரோதம் | அந்தப்புரம் ; அரண்மனை ; மறைவு ; வேலி ; முற்றுகை . |
| அவரோதனம் | அந்தப்புரம் ; அரண்மனை ; மறைவு ; வேலி ; முற்றுகை . |
| அவரோபணம் | இறக்குதல் ; வேரோடு பிடுங்கல் . |
| அவல் | நெல் இடியல் ; விளைநிலம் ; பள்ளம் ; குளம் . |
| அவலச்சுவை | ஒன்பான் சுவைகளுள் ஒன்று , துன்பச்சுவை . |
| அவலச்சுழி | தீவினை . |
| அவலட்சணம் | அழகின்மை . |
| அவலம் | துன்பம் ; வறுமை ; பலவீனம் ; கவலை ; கேடு ; குற்றம் ; நோய் ; அழுகை ; அவலச்சுவை ; மாயை ; பயன்படாது ஒழிதல் ; இடப்பக்கம் . |
| அவலம்பம் | சார்பு ; பற்றுக்கோடு . |
| அவதிகத்தம் | கடல்நுரை . |
| அவதிகாரகம் | நீக்கப் பொருளைக் காட்டும் உருபுடைப் பெயர் . |
| அவதிஞானம் | முற்பிறப்பை அறியும் அறிவு : சேய்மையில் உள்ளவற்றைப் பொறி உதவியின்றி உணரும் உணர்ச்சி ; முக்காலத்தையும் அறியும் அறிவு . |
| அவதும்பரம் | அத்திப்பழம் . |
| அவதூதம் | நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று முழுத் துறவு அம்மணம் . |
| அவதூதன் | முற்றத் துறந்தவன் நிர்வாண சன்னியாசி . |
| அவதூதி | முற்றத் துறந்தவன் நிர்வாண சன்னியாசி . |
| அவதூறு | பழிச்சொல் . |
| அவந்தரை | சீர்கேடு பயனின்மை ; அநாத நிலை . |
| அவந்தன் | பயனற்றவன் . |
| அவந்தி | முக்திநகர் ஏழனுள் ஒன்றாகிய உச்சயினி ; காடி ; கிளி ; பிள்ளை பெற்றவள் ; காய்க்கும் மரம் ; ஈற்றுப்பசு கோவைக்கொடி . |
| அவந்திக்கண்ணி | வெருகஞ்செடி . |
| அவந்திகை | உச்சயினி ; கிளி . |
| அவந்திசோமம் | காடி ; புளித்த கஞ்சி . |
| அவந்தன் | தலைகுனிந்து வணங்குவோன் . |
| அவநாசி | கலைமகள் . |
| அவநியாயம் | அநியாயம் , நீதியின்மை . |
| அவநீதன் | நீதியற்றவன் . |
| அவநுதி | ஒன்றன் தன்மையை மறுத்துவேறொன்றன் தன்மையை ஏற்றிக் கூறும் அணி புகழ்தல் . |
| அவநெறி | தீயவழி , பாவவழி . |
| அவப்படுதல் | பயனின்றாதல் . |
| அவப்பலம் | தீப்பயன் . |
| அவப்பிரசவம் | ஆறு மாதத்துக்குமேல் நிகழும் கரு அழிவு . |
| அவப்பிரஞ்சம் | ஒருவகைப் பிராகிருத மொழி ; இழிசினர் பேசும் வடமொழி . |
| அவப்பிரஞ்சனம் | ஒருவகைப் பிராகிருத மொழி ; இழிசினர் பேசும் வடமொழி . |
| அவப்பேர் | இகழ்மொழி . |
| அவப்பொழுது | வீண்காலம் . |
| அவபத்தி | பத்தி இன்மை ; மூடபத்தி . |
| அவபத்தியம் | பத்தியக்கேடு . |
| அவபிரதம் | வேள்வி முடிவில் நீராடுகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 49 | 50 | 51 | 52 | 53 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அவதிகத்தம் முதல் - அவலம்பம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, ஒன்று, சொல், கேடு, இகழ்ச்சி, வேள்வி, முற்றத், துறந்தவன், நிர்வாண, சன்னியாசி, முற்றுகை, அறியும், அவந்தன், அறிவு, அவலச்சுவை, கிளி, மொழி, இழிசினர், பேசும், வடமொழி, பிராகிருத, ஒருவகைப், காடி, வேலி, தன்மையை, உச்சயினி, சொல்லுகை, அகாலமிருத்து, அவர், பன்மைச், ஒருவர், அவமதிப்பு, அவமானம், முடிவில், நீராடுகை, பயனின்மை, இறங்குகை, விழுது, திருப்பிச், அந்தப்புரம், அரண்மனை, வேதத்தைத், பத்தனுள், முறையில், வரும், கமகம், மறைவு

