முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » சூத்திரம் முதல் - சூர்துங்கராகம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - சூத்திரம் முதல் - சூர்துங்கராகம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சூத்திரம் | பஞ்சுநூல் ; இயந்திரம் ; நுண்ணிய வேலை ; தந்திரம் ; இரகசியம் ; சில்லெழுத்திற் பலபொருள் தெரிவிக்கும் யாப்புச் செய்யுளாகிய நுற்பா ; சூத்திர வடிவில் அமைந்த நூல் ; இயக்குவிக்குங் கயிறு ; பெயர் , விதி , விலக்குதல் , நியமம் , அதிகாரம் , ஞாபகம் என்னும் அறுவகைச் சூத்திரங்கள் . |
| சூத்திரன் | புட்பராகம் ,வைடூரியம் ; தச்சன் . |
| சூத்திரி | பொம்மை முதலியவை ஆட்டுபவன் . |
| சூத்திரிகன் | பொம்மை முதலியவை ஆட்டுபவன் . |
| சூத்து | மலவாயில் ; பிட்டம் ; ஆண்குறி ; பெண்குறி . |
| சூத்தை | கேடுற்றது ; சொத்தை . |
| சூதகக்கட்டு | சூதகம் உரிய காலத்து வெளிப்படாமையாகிய நோய் . |
| சூதகசன்னி | மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் சன்னிவகை . |
| சூதகசூலை | காண்க : சூதகவாயு . |
| சூதகப்பாண்டு | சூதகப்பெருக்கு முதலியவற்றால் இரத்தங் குறைந்த பெண்களுக்கு உண்டாகும் நோய்வகை . |
| சூதகப்பெருக்கு | பெரும்பாடுநோய் . |
| சூதகம் | அழுக்கு ; மாதவிடாய் விலக்கம் ; உறவினர்களின் பிறப்பு இறப்புகளில் இருக்கும் தீட்டு ; பிறப்பு ; மாமரம் ; சிறுகிணறு ; முலைக்கண் ; பழைமை . |
| சூதகவாயு | மாதவிடாய்க் காலத்து வாயுமிகுதியால் ஏற்படும் நோய்வகை ; காண்க : சூதகசன்னி . |
| சூதசாலை | மடைப்பள்ளி . |
| சூதடி | வஞ்சகம் . |
| சூதநதி | ஆன்பொருநை ஆறு . |
| சூதநோக்கல் | நீலாஞ்சனக்கல் . |
| சூதம் | மாமரம் : பிறப்பு ; பாதரசம் ; புளிமாமரம் ; காண்க : பவளமல்லிகை ; சூது ; சூதாடு ; கருவி ; வண்டு . |
| சூதர் | அரசர் முன்னின்று அவர்களைப் புகழ்வோர் ; பாணர் . |
| சூதரம் | மாங்கனி . |
| சூதவஞ்சனம் | காண்க : சூதநோக்கல் . |
| சூதவம் | வண்டு . |
| சூதன் | தேரோட்டி ; சூரியன் ; தச்சன் ; சூதமுனிவன் ; சூதாடுவோன் ; தந்திரக்காரன் ; சமையற்காரன் ; புகழ்வோன் ; பாணன் . |
| சூதனம் | அழித்தல் . |
| சூதாட்டம் | சூதாடுடல் ; தந்திரம் . |
| சூதாடி | சூதாடுவோன் . |
| சூதாடுகருவி | தாயக்கட்டை . |
| சூதாளி | தந்திரக்காரன் . |
| சூதானக்காரன் | முன்னெச்சரிக்கை உள்ளவன் . |
| சூதானம் | எச்சரிக்கை ; சேமம் ; பாதுகாப்பு . |
| சூதி | பிள்ளைபெற்றவள் ; அசைவு ; தைத்தல் ; நடை . |
| சூதிதை | மகப்பெற்றவள் ; ஈனில் . |
| சூது | சூதாட்டம் ; சூதாடுகருவி ; உபாயம் ; வெற்றி ; இரகசியம் ; தாமரை ; காண்க : சூரியகாந்தி ; சூழ்ச்சி . |
| சூதுகருவி | காண்க : சூதாடுகருவி . |
| சூதுகளி | சூதாடுகை ; சூழ்ச்சி . |
| சூதுகாரன் | சூழ்ச்சியாளன் . |
| சூதுபொருதல் | சூதாடுதல் . |
| சூதுவாது | கள்ளங்கபடு . |
| சூதுவென்றி | சூதாட்டத்தில் நேர்ந்த வெற்றியைக் கூறும் புறத்துறை . |
| சூந்துமம் | சிலந்திநாயகப்பூடு . |
| சூப்பி | குழந்தைகளை வாயில் சுவைத்தற்கேற்ப முலைக்காம்புபோல் அமைந்த குமிழ்க்கருவி ; ஒரு சிற்றுண்டிவகை ; திரிந்து வாங்கித்தின்பவன் ; ஆண்குறியின் நுனித்தோல் . |
| சூப்பிக்கலியாணம் | காண்க : சுன்னத்துச்செய்தல் . |
| சூப்பு | கறிரசம் ; கோழிக்குஞ்சு முதலியவற்றின் சத்தைக்கொண்டு சமைத்த ரசம் . |
| சூப்புதல் | சப்புதல் ; உமிழ்ந்தெடுத்தல் ; சுருக்குதல் . |
| சூபகன் | சமையற்காரன் . |
| சூபகாரன் | சமையற்காரன் . |
| சூம்படைதல் | நிலைகெடுதல் ; சோம்பல் கொள்ளுதல் . |
| சூம்படைந்தவன் | சுறுசுறுப்பற்றவன் ; நிலை கெட்டவன் . |
| சூம்புதல் | மெலிந்துவாடுதல் ; இரத்தம் முதலியன சுண்டிச் சிறுத்தல் ; சுவைத்தல் . |
| சூமம் | வானம் ; நீர் ; பால் . |
| சூர் | அச்சம் ; துன்பம் ; நோய் ; கடுப்பு ; வஞ்சகம் ; கொடுமை ; கொடுந்தெய்வம் ; தெய்வப்பெண் ; மிளகு ; வால்மிளகு ; சூரபதுமன் ; வீரம் ; அஞ்சாமை ; சூரியன் . |
| சூர்ணம் | பொடி . |
| சூர்ணி | செய்யுட்கருத்தைவிளக்கி நிற்கும் இனிய சொற்றொடர் . |
| சூர்ணிகை | செய்யுட்கருத்தைவிளக்கி நிற்கும் இனிய சொற்றொடர் . |
| சூர்த்தநோக்கு | கொடுமை . |
| சூர்த்தம் | நடுக்கம் . |
| சூர்த்தல் | அச்சுறுத்தல் ; கொடுமைசெய்தல் ; சுழலுதல் . |
| சூர்தல் | பிரித்தல் ; மயிர் முதலியன வகிர்தல் ; பறித்தல் . |
| சூர்துங்கராகம் | குறிஞ்சி யாழ்த்திறவகைகளுள் ஒன்று . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 492 | 493 | 494 | 495 | 496 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சூத்திரம் முதல் - சூர்துங்கராகம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சமையற்காரன், சூதாடுகருவி, பிறப்பு, தந்திரக்காரன், அமைந்த, சூதாட்டம், சூதாடுவோன், சூரியன், சூது, வண்டு, இரகசியம், சூழ்ச்சி, இனிய, சொற்றொடர், நிற்கும், செய்யுட்கருத்தைவிளக்கி, முதலியன, கொடுமை, சூதநோக்கல், வஞ்சகம், நோய், சூதகசன்னி, காலத்து, சூதகம், முதலியவை, ஆட்டுபவன், மாதவிடாய்க், ஏற்படும், தந்திரம், மாமரம், நோய்வகை, சூதகப்பெருக்கு, தச்சன், சூதகவாயு, பொம்மை

