முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » சுண்ணமொழிமாற்று முதல் - சுத்தன் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - சுண்ணமொழிமாற்று முதல் - சுத்தன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சுண்ணமொழிமாற்று | மொழிமாற்றுப் பொருள் கோள்களுள் ஒன்று , ஈரடி எண்சீர்களில் பொருள்முறைக்கு ஏற்பச் சொற்களை மாற்றிக் கூட்டுதல் . |
| சுண்ணவட்டு | சுண்ணங் கலந்த நீரைவீசுங்கருவி . |
| சுண்ணவாசி | காட்டுமல்லிகை . |
| சுண்ணாம்படித்தல் | வெள்ளையடித்தல் . |
| சுண்ணாம்பு | சுட்டசுண்ணாம்புக் கல் ; நீற்றின சுண்ணாம்பு ; சன்னச் சாந்தாக அரைத்த சுண்ணாம்பு . |
| சுண்ணாம்புக்கல் | சுண்ணாம்புச் சத்துள்ள கல் . |
| சுண்ணாம்புக்கரை | கட்டடத்திற்குரிய சுண்ணாம்புச் சாந்து ; காய்ந்த சாந்து . |
| சுண்ணாம்புக்காளவாய் | சுண்ணாம்பு நீற்றுஞ்சூளை . |
| சுண்ணாம்புத்துடுப்பு | கரண்டகத்தினின்று சுண்ணாம்பு எடுக்குங் கருவி . |
| சுண்ணாம்புதடவுதல் | வெற்றிலை முதலியவற்றிற்குச் சுண்ணந் தடவுதல் ; ஏமாற்றுதல் . |
| சுண்ணாம்புப்பட்டை | நல்ல செம்மண் பட்டையை இடையிட்டு அடிக்கும் சுண்ணாம்புக்கோலம் ; ஓடு விலகாதிருக்கும் பொருட்டுப் போடும் சாந்துப்பட்டை . |
| சுண்ணித்தல் | நீற்றுதல் . |
| சுணக்கம் | பிணக்கம் ; தாமதம் ; வாட்டம் ; முடை ; சோர்வு ; சரசவிளையாட்டு . |
| சுணக்கன் | நாய் ; நாய்போலத் திரிகிறவன் ; இழிந்தோன் . |
| சுணக்குதல் | தாமதப்படுத்தல் . |
| சுணங்கத்திசை | தென்மேற்றிசை . |
| சுணங்கம் | நாய் . |
| சுணங்கல் | வாட்டம் ; தாமதம் ; சோம்பேறி ; சரச விளையாட்டு . |
| சுணங்கழிதல் | செருக்குக் குறைதல் . |
| சுணங்கறை | புணர்ச்சி . |
| சுணங்கன் | காண்க : சுணங்கம் . |
| சுணங்கு | மெலிவு ; அழகுதேமல் ; பசலை ; படர்புண் ; நாய் ; பூந்தாது . |
| சுணங்குதல் | சோர்தல் ; தாமதித்தல் ; தடைப்படுதல் ; விடாமல் கெஞ்சுதல் ; மனநிறை வின்மையாதல் ; சரச விளையாட்டுப் புரிதல் . |
| சுணங்கை | ஒருவிதப் பேய்க்கூத்து ; துணங்கைக் கூத்து . |
| சுணம் | அழகுதேமல் ; நறுமணப்பொடி . |
| சுணை | சுரணை ; அறிவு ; கூர்மை ; தினவு ; வைசூரியால் உடலில் தங்கும் அம்மைப்பால் ; இலை காய்களின்மேலுள்ள சிறுமுட்கள் . |
| சுணைக்கேடன் | சுறுசுறுப்பு அற்றவன் ; மானமில்லாதவன் ; சுரணை இல்லாதவன் . |
| சுணைக்கோரை | ஒரு புல்வகை . |
| சுணைகெட்டவன் | காண்க : சுணைக்கேடன் . |
| சுணைத்தல் | தினவெடுத்தல் . |
| சுணைப்பு | சுரணை ; அறிவு . |
| சுத்தக்கட்டி | கலப்பற்ற வெள்ளி தங்கங்களின் கட்டி . |
| சுத்தக்கிரயம் | எல்லா உரிமையையும் விலைக்குக் கொடுத்துவிடுகை . |
| சுத்தகாந்தாரம் | பதினாறு சுரங்களுள் ஒன்று ; ஆசான் என்ற வகையைச் சார்ந்த ஒரு பண்வகை . |
| சுத்தசாந்தம் | இன்பவடிவ சத்தி . |
| சுத்தசாரி | நாட்டியவகை . |
| சுத்தசிவபதம் | பரமுத்தி . |
| சுத்தசூனியம் | முழுப் பாழ் . |
| சுத்தசைதன்னியம் | அறிவு மாத்திரையாய் உள்ளது . |
| சுத்தஞானம் | வினைக் கலப்பில்லாத வாலறிவு . |
| சுத்ததினம் | ஆண்டுப் பிறப்பு . |
| சுத்தநிருத்தம் | சொக்கம் என்னும் கூத்து . |
| சுத்தநீர்க்கடல் | ஏழு கடல்களுள் நன்னீர் கொண்ட கடல் . |
| சுத்தப்பிரதி | ஒன்றைப் பார்த்துப் பிழையற எழுதப்பட்ட படி ; பரிசோதிக்கப்பட்ட புத்தகம் . |
| சுத்தப்பொய் | முழுதும் பொய் . |
| சுத்தபரிசம் | கிரகணம் பிடிக்குங் காலம் . |
| சுத்தம் | தூய்மை ; உண்மை ; முழுமை ; பிழையின்மை ; சூனியம் ; நலம் ; கலப்பின்மை ; கபடமின்மை ; குற்றமற்றது ; சுக்கிலபட்சம் . |
| சுத்தம்பண்ணுதல் | தூயதாக்கல் , துப்புரவாக்கல் . |
| சுத்தமாய் | அடியோடு . |
| சுத்தமாயை | துன்பமின்றி இன்பமே அளிப்பதும் சுத்தப்பிரபஞ்சத்துக்கு முதல் காரணமானதுமான மாயை . |
| சுத்தமார்க்கம் | உண்மையான பத்தி ; மெய்ந்நெறி . |
| சுத்தமூடன் | முழுமுட்டாள் . |
| சுத்தராகம் | நிரம்பிய இலக்கணமுடைய மூலப்பண் . |
| சுத்தவாசனை | நறுமணம் . |
| சுத்தவாளி | நியாய சபையில் குற்றமற்றவனாகத் தீர்ப்பளிக்கப்பட்டவன் ; தூய்மையானவன் . |
| சுத்தவீரன் | போரிற் பின்னிடாத வீரன் . |
| சுத்தன் | தூயன் ; சிவன் ; முத்திபெறும் நிலையிலுள்ள உயிர் ; கபடற்றவன் ; மூடன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 478 | 479 | 480 | 481 | 482 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சுண்ணமொழிமாற்று முதல் - சுத்தன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சுண்ணாம்பு, அறிவு, சுரணை, நாய், கூத்து, சாந்து, சுண்ணாம்புச், சுணைக்கேடன், அழகுதேமல், காண்க, வாட்டம், ஒன்று, சுணங்கம், தாமதம்

