தமிழ் - தமிழ் அகரமுதலி - சிறுநெறி முதல் - சிறுவோர் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
சிறுநெறி | அரிய வழி ; தீய வழி . |
சிறுநோக்கு | மதிப்பற்ற பார்வை . |
சிறுப்பம் | இளமை . |
சிறுப்பனை | இழிவு ; வறுமை ; அவமரியாதை ; தொந்தரவு . |
சிறுப்பித்தல் | சிறுகப்பண்ணுதல் ; மரியாதைக் குறைவு காட்டுதல் . |
சிறுப்பிள்ளை | வேலையாள் . |
சிறுப்பெரியார் | சிறுமைக் குணங்கொண்டு பெரியார்போலத் தோன்றுபவர் . |
சிறுபசி | இளம்பசி . |
சிறுபஞ்சமூலம் | கண்டங்கத்தரி , சிறுமல்லிகை , பெருமல்லிகை , சிறுவழுதுணை , சிறுநெருஞ்சி இவற்றின் வேர்கள் சேர்ந்த மருந்து ; ஒருநூல் . |
சிறுபட்டி | கட்டுக்கடங்காத இளைஞன் . |
சிறுபதம் | வழி ; தண்ணீராகிய உணவு . |
சிறுபயறு | பச்சைப்பயறு ; பனிப்பயறு . |
சிறுபயிர் | குறுகிய காலத்தில் விளையும் பயிர் ; புன்செய்ப் பயிர் . |
சிறுபருப்பு | பச்சைப்பயற்றம்பருப்பு . |
சிறுபறை | கைம்மேளம் , தோற்கருவிவகை ; காண்க : சிறுபறைப்பருவம் . |
சிறுபறைப்பருவம் | தலைவன் சிறுபறை வைத்துக்கொண்டு அடித்து விளையாடும் பருவத்தைச் சிறப்பிக்கும் ஆண்பாற் பிள்ளைத்தமிழ்ப் பகுதி . |
சிறுபான்மை | சிலவிடங்களில் ; கொஞ்சம் ; அருகிவழங்கும் வழக்கு . |
சிறுபிராயம் | இளம்பருவம் . |
சிறுபிள்ளை | இளம்பிள்ளை . |
சிறுபுறம் | பிடரி ; சிறுகொடை ; முதுகு . |
சிறுபுள்ளடி | ஒரு செடிவகை . |
சிறுபூளை | நடைவழியில் முளைக்கும் ஒரு பூண்டுவகை . |
சிறுபெண் | இளம்பெண் . |
சிறுபொழுது | நாளின் பிரிவாகிய பொழுதுகள் ; அவை : மாலை , இடையாமம் , விடியல் , காலை , நண்பகல் , எற்பாடு . |
சிறுமகன் | அறிவற்றவன் ; சிறுவன் ; இழிந்தவன் . |
சிறுமட்டம் | சிறு குதிரை ; சிற்றளவு ; சிறுவாழை மரம் ; யானைக்கன்று ; குள்ளமானவன்(ள்) . |
சிறுமணி | காராமணிவகை ; சதங்கை ; ஒரு நெல்வகை . |
சிறுமல் | தண்ணீர்விட்டான்கிழங்கு . |
சிறுமலை | குன்று , பொற்றை . |
சிறுமாரோடம் | செங்கருங்காலிமரம் . |
சிறுமி | இளம்பெண் ; மகள் . |
சிறுமியம் | சேறு . |
சிறுமீன் | அருந்ததி ; அயிரைமீன் . |
சிறுமுத்தன் | ஆண்பொம்மை . |
சிறுமுதுக்குறைமை | இளமையிற் பேரறிவுடைமை . |
சிறுமுதுக்குறைவி | இளம்பருவத்தே பேரறிவினையுடையவள் . |
சிறுமுறி | கைச்சீட்டு . |
சிறுமூசை | உலோகங்களை உருக்க உதவும் சிறிய மண்குகை . |
சிறுமூலகம் | பூண்டுவகை ; திப்பிலி . |
சிறுமூலம் | சிறுகிழங்குச்செடி ; திப்பிலி . |
சிறுமை | இழிவு ; கயமைத்தனம் , கீழ்மை ; இளமை ; நுண்மை ; எளிமை ; குறைபாடு ; வறுமை ; பஞ்சம் ; பிறர் மனத்தை வருத்துகை ; இளப்பம் ; குற்றம் ; நோய் ; துன்பம் ; மிக்க காமம் ; கயமை . |
சிறுமைத்தனம் | இளமை ; கயமைத்தனம் ; நுண்மை ; குறைபாடு ; வறுமை . |
சிறுமைப்படுதல் | வறுமைப்படுதல் ; எளிமைப்படுதல் ; இடைஞ்சற்படுதல் ; கீழ்நிலை அடைதல் . |
சிறுமையர் | கீழ்மக்கள் . |
சிறுவதும் | சிறிதும் . |
சிறுவம் | இளமை . |
சிறுவயது | காண்க : சிறுபிராயம் . |
சிறுவயல் | காண்க : சிறுசெய் . |
சிறுவரை | சிறிது நேரம் ; சிறுமூங்கில் ; அற்பம் . |
சிறுவல் | குழந்தை ; இளம்பருவம் ; தடை . |
சிறுவழுதுணை | கத்திரிச்செடிவகை ; கண்டங்கத்தரி . |
சிறுவன் | இளைஞன் ; சிறியன் ; மகன் ; சிறு புள்ளடிவகை . |
சிறுவாடு | ஜமீனுக்குரிய பண்ணைநிலங்கள் ; சில்வானம் , சிறுதேட்டு ; பற்றடைப்பு நிலம் . |
சிறுவாள் | கைவாள் . |
சிறுவி | மகள் . |
சிறுவிடு | கொள்ளுத் தானியம் . |
சிறுவித்தம் | சூதாட்டத்தில் பந்தயமாக வைத்த சிறுபொருள் . |
சிறுவிரல் | சுண்டுவிரல் . |
சிறுவிலை | பஞ்சகாலம் ; இளைத்துள்ளது ; விலைமிகுதி . |
சிறுவிலைக்காலம் | வறுமைக்காலம் , பஞ்சகாலம் . |
சிறுவிலைநாள் | வறுமைக்காலம் , பஞ்சகாலம் . |
சிறுவீடு | சிறிய இல்லம் ; அதிகாலையில் பால் கறக்குமுன் மாடுகளை மேயவிடுதல் ; சிறுமியர் கட்டியாடும் மணல்வீடு . |
சிறுவெண்காக்கை | கழுத்தில் சிறு வெண்மை நிறமுடைய காகம் . |
சிறுவோர் | சிறுபிள்ளைகள் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 466 | 467 | 468 | 469 | 470 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறுநெறி முதல் - சிறுவோர் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், இளமை, காண்க, பஞ்சகாலம், வறுமை, சிறு, சிறிய, மகள், கயமைத்தனம், வறுமைக்காலம், குறைபாடு, நுண்மை, சிறுவன், திப்பிலி, இளம்பருவம், இளைஞன், சிறுவழுதுணை, கண்டங்கத்தரி, இழிவு, பயிர், சிறுபறை, பூண்டுவகை, சிறுபிராயம், சிறுபறைப்பருவம், இளம்பெண்