தமிழ் - தமிழ் அகரமுதலி - சின்னிபொம்மை முதல் - சீகம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சின்னிபொம்மை | பின்னல்மயிருள்ள தலையும் மரத்தால் செய்யப்பட்ட கைகளும் நீண்டு தொங்கும் சட்டையும் கொண்டதாய் ஒருசில பிச்சைக்காரிகள் தம் பாட்டுக்கு ஏற்பத் தாளம் இடும்படி செய்து கையில் வைத்தாட்டும் ஒருவகைப் பொம்மை . |
| சின்னீர் | கலங்கலான நீர் ; மூத்திரம் . |
| சின்னூல் | சிறு நூல் ; நேமிநாதம் என்னும் இலக்கண நூல் . |
| சின்னெறி | கள்ளச் சிறுவழி . |
| சின்னை | பெரிய கடல்மீன்வகை . |
| சினகர் | சைனர் , சமணர் . |
| சினகரம் | கோயில் ; சமணக்கோயில் ; சிறுகோயில் ; அரண்மனை . |
| சினத்தல் | கோபித்தல் ; புண் முதலியன சிவத்தல் . |
| சினந்தவிர்ந்தோன் | கோபம் தவிர்ந்தவனாகிய புத்தன் ; அருகன் . |
| சினப்பு | கோபம் ; புண் முதலியவற்றின் வீக்கம் ; வேனற்கட்டி ; வெப்பத்தால் உடலில் உண்டாகும் வியர்க்குரு . |
| சினம் | கோபம் ; நெருப்பு ; போர் ; வெம்மை . |
| சினவர் | பகைவர் . |
| சினவரன் | சினத்தை அடக்கியவன் ; புத்தன் ; அருகன் . |
| சினவல் | போர் . |
| சினவுதல் | கோபிதல் ; கொதித்தெழுதல் ; பொருதல் . |
| சினவுநர் | பகைவர் . |
| சினன் | புத்தன் ; அருகன் . |
| சினா | வட்டத்திருப்பிச்செடி ; பங்கம்பாளைச்செடி . |
| சினாடி | மூக்கிரட்டைக்கொடி . |
| சினாடிகா | மூக்கிரட்டைக்கொடி . |
| சினாது | மெலிந்தது ; மெலிவு . |
| சினாவில் | தும்பைப்பூண்டு . |
| சினீவாலி | சந்திரகலை தோன்றும் அமாவாசை நாள் . |
| சினேகபலம் | தைலத்தைக் கொண்ட எள் . |
| சினேகம் | நட்பு ; எண்ணெய் . |
| சினேசம் | சாதிக்காய் . |
| சினேந்திரன் | புத்தன் ; அருகன் . |
| சினை | விலங்கு முதலியவை கருக்கொண்டிருத்தல் ; கருப்பம் ; முட்டை ; பூவரும்பு ; உறுப்பு ; மூங்கில் ; மொட்டு ; மரக்கிளை . |
| சினைகொள்ளுதல் | கருக்கொள்ளுதல் . |
| சினைத்தல் | தோன்றுதல் ; பூ அரும்புதல் ; தழைத்தல் ; சிரங்கு புடைத்தல் ; கருக்கொள்ளுதல் ; பருத்தல் . |
| சினைப்படுத்துதல் | காண்க : சினையாக்குதல் . |
| சினைப்படுதல் | காண்க : சினைகொள்ளுதல் . |
| சினைப்பருவம் | கருக்கொள்ளும் பருவம் ; நெற்கதிரில் மணிபிடிக்கும் பருவம் . |
| சினைப்பு | வெப்பத்தால் உடலில் உண்டாகும் வியர்க்குரு ; கருக்கொள்ளுகை ; அரும்புகை ; கொழுப்பு . |
| சினைப்பூ | மரக்கொம்புகளில் தோன்றும் பூ . |
| சினைப்பெயர் | உறுப்பைக் குறிக்கும் பெயர் ; உறுப்புக் காரணமாய் வரும் பெயர் . |
| சினையாக்குதல் | கருவுண்டாக்குதல் ; தொல்லைதருதல் . |
| சினையாகுபெயர் | சினைப்பெயர் அதன் முதலுக்கு ஆகும் பெயர் . |
| சினையாறுபடுகை | வெள்ளம்வருதற் குறியாக ஆற்றுநீர் கசிதல் . |
| சினைவினை | சினையின் தொழிலைக் காட்டி நிற்கும் வினைச்சொல் . |
| சீ | ஓர் உயிர்மெய்யெழுத்து(ச் + ஈ) ; திருமகள் ; சிறப்புக் குறிக்கும் ஓர் அடைமொழி ; சீழ் ; சளி ; இகழ்ச்சி வெறுப்புகளின் குறிப்பு . |
| சீக்கட்டுதல் | சீழ்பிடித்தல் . |
| சீக்கல் | நாவின் நுனியை மடித்துச் செய்யும் ஒலியாகிய சீழ்க்கை ; கல்வகை . |
| சீக்காச்சா | நாய்ப்புடல்கொடி . |
| சீக்காய் | பழுக்காத பனங்காய் ; காண்க : சீழ்க்கை ; சீயக்காய் . |
| சீக்கிரப்படுதல் | விரைவுபடுதல் ; எளிதிற் சினங்கொள்ளுதல் . |
| சீக்கிரபுத்தி | அவசரபுத்தி . |
| சீக்கிரம் | விரைவு ; நோய் முதலியவற்றின் வீறு ; உறைப்பு ; கோபம் ; குதிரை பூட்டிய பெட்டி வண்டி ; அம்பு . |
| சீக்கிரான் | உசிலமரம் . |
| சீக்கிரி | உசிலமரம் . |
| சீக்கிரியன் | உசிலமரம் . |
| சீக்கிரியான் | உசிலமரம் . |
| சீக்குரு | முருங்கைமரம் . |
| சீக்கூட்டுதல் | காண்க : சீக்கட்டுதல் . |
| சீக்கை | கோழை . |
| சீகத்தம் | அழகிய கை . |
| சீகம் | தமரத்தைமரம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 468 | 469 | 470 | 471 | 472 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சின்னிபொம்மை முதல் - சீகம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, புத்தன், அருகன், உசிலமரம், கோபம், பெயர், சினையாக்குதல், கருக்கொள்ளுதல், பருவம், சீக்கட்டுதல், சீழ்க்கை, சினைகொள்ளுதல், குறிக்கும், சினைப்பெயர், மூக்கிரட்டைக்கொடி, உடலில், வெப்பத்தால், முதலியவற்றின், புண், உண்டாகும், வியர்க்குரு, நூல், பகைவர், போர், தோன்றும்

