முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » சிற்றில் முதல் - சிறாங்கித்தல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - சிற்றில் முதல் - சிறாங்கித்தல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சிற்றில் | சிறு குடில் ; சிறு வீடு ; சிறுமியர் கட்டி விளையாடும் மணல் வீடு ; காண்க : சிற்றிற்பருவம் ; கந்தை . |
| சிற்றிலக்கம் | கீழ்வாயிலக்கம் . |
| சிற்றிலிழைத்தல் | சிறுமியர் மணல் வீடு கட்டி விளையாடுதல் . |
| சிற்றிலை | கடுக்காய் ; குன்றிமணி ; நெய்ச்சிட்டி . |
| சிற்றிற்பருவம் | சிறுமியர் கட்டிய மணற்சிற்றிலைத் தலைவன் சிதைக்கும் பருவத்தைப் புனைந்து கூறும் ஆண்பாற் பிள்ளைத்தமிழ் . |
| சிற்றின்பம் | இம்மைக்குரிய இன்பம் , காமவின்பம் . |
| சிற்றினம் | அறிவும் ஒழுக்கமும் அற்றோர் கூட்டம் ; நல்லறிவு இல்லாத தாழ்ந்தோர் . |
| சிற்றுண்டி | சிறு அளவான உணவு , எளிய உணவு ; இனிப்பு உணவுவகை ; பலகாரவகை , பண்ணிகாரம் . |
| சிற்றுணவு | சிற்றுண்டி ; கறி முதலியன . |
| சிற்றுதல் | சஞ்சலப்படுதல் . |
| சிற்றுயிர் | குறுகிய காலமே வாழும் உயிர் ; இழிந்த உயிர் . |
| சிற்றுரு | சின்னவுரு ; தாலியுடன் கோக்கும் உரு . |
| சிற்றுள் | சரக்கறை . |
| சிற்றுளி | தச்சுக்கருவி . |
| சிற்றூண் | காண்க : சிற்றுண்டி . |
| சிற்றூர் | சிறிய ஊர் , குக்கிராமம் ; குறிஞ்சி நிலத்தூர் . |
| சிற்றூறல் | சின்ன நீருற்று . |
| சிற்றெண் | கீழெண் ; இருசீர் ஓரடியாய் வரும் அம்போதரங்கவகை ; பரிபாடல் உறுப்புகளுள் ஒன்று . |
| சிற்றெலி | சுண்டெலி . |
| சிற்றெறும்பு | எறும்புவகை . |
| சிறக்கணித்தல் | கண்ணைச் சுருக்கிப் பார்த்தல் ; கடைக்கண்ணாற் பார்த்தல் ; அவமதித்தல் . |
| சிறகடித்தல் | பறத்தற்பொருட்டு இறக்கையடித்தல் . |
| சிறகர் | இறகு . |
| சிறகறுதல் | வலியழிதல் . |
| சிறகாற்றுதல் | சிறகை விரித்தடித்து இளைப்பாற்றிக்கொள்ளுதல் . |
| சிறகி | பறவைவகை ; ஒருமீன்வகை . |
| சிறகிமீன் | பறவைமீன் . |
| சிறகு | இறகு ; மீன்சிறகு ; படை முதலியவற்றின் உறுப்பு ; தெருவின் பக்கம் ; தெரு ; கிளை வாய்க்கால் ; பனையோலையிற் பாதி ; கதவு முதலியவற்றின் இலை . |
| சிறகுகட்டிப்பறத்தல் | விரைந்துசெல்லுதல் . |
| சிறகுகதவு | இரட்டைக்கதவு . |
| சிறகுகுடில் | தூக்குங்குடிசை . |
| சிறகுகோதுதல் | சிறகை அலகால் வகிர்தல் ; சிறகை உலர்த்துதல் . |
| சிறகுகோழி | காட்டுக்கோழிவகை . |
| சிறகுதெரித்தல் | காண்க : சிறகுகோதுதல் . |
| சிறகுமுளைத்தல் | தற்காத்துக்கொள்ளும் வலி பெறுகை ; வெளியேறிவிடுகை . |
| சிறங்கணித்தல் | காண்க : சிறக்கணித்தல் . |
| சிறங்கித்தல் | அவமதித்தல் ; சிறங்கையால் அளத்தல் . |
| சிறங்கை | கைந்நிறையளவு . |
| சிறத்தல் | மேன்மையாதல் ; மேற்படுதல் ; கனத்தல் ; இன்றியமையாதிருத்தல் ; மங்கலமாதல் ; அன்பாதல் ; மகிழ்தல் ; அழகாதல் . |
| சிறந்தோர் | உயர்ந்தோர் ; தேவர் ; உறவினர் ; துறந்தோர் . |
| சிறப்பணி | சாதி , குணம் , செயல் என்பவற்றால் ஒரு பொருளைச் சிறப்பித்துக் கூறும் அணி ; ஒப்புமையால் பொதுமையுற்றிருந்த இரண்டு பொருள்களுக்கு ஒரு காரணத்தால் வேறுபாடு தோன்றுவதைக் கூறும் அணி . |
| சிறப்பாங்கல் | மாணிக்கவகை . |
| சிறப்பாடு | மேம்பாடு . |
| சிறப்பித்தல் | அலங்கரித்தல் ; பெருமைப்படுத்தல் ; புகழ்தல் . |
| சிறப்பிலாதாள் | மேம்பாடு இல்லாதவளாகிய மூதேவி . |
| சிறப்பிலாள் | மேம்பாடு இல்லாதவளாகிய மூதேவி . |
| சிறப்பு | பெருமை ; திருவிழா ; செல்வம் ; அன்பளிப்பு ; மதிப்பு ; தலைமை ; பகட்டு ; காண்க : சிறப்பணி ; இன்பம் ; ஒன்றற்கேயுரியது ; வரிசை ; போற்றுகை ; மிகுதி ; வீடுபேறு . |
| சிறப்புச்செய்தல் | ஒப்பனைசெய்தல் ; போற்றுதல் ; விழாக்கொண்டாடுதல் . |
| சிறப்புடைக்கிளவி | அன்பான சொல் . |
| சிறப்புப்பாயிரம் | ஒரு நூலுக்குச் சிறப்பாக அமைக்கப்பட்ட முன்னுரை , நூற்பெயரும் காரணமும் ஆக்கியோன் பெயரும் அளவும் பயனுமுரைப்பது . |
| சிறப்புப்பெயர் | ஒன்றற்கே உரிமைபூண்டு வரும் பெயர் ; திணை , நிலம் , சாதி , குடி , உடைமை , குணம் , தொழில் , கல்வி என்னும் எண்வகையாலும் பொருள்களுக்குச் சிறப்பாகக் கூறும் பெயர் ; அரசன் கொடுக்கும் பட்டப்பெயர் . |
| சிறப்புரை | சிறப்புச் சொற்பொழிவு . |
| சிறப்புவிதி | ஒன்றற்குரிய சிறப்பான முறை . |
| சிறப்பெடுத்தல் | திருவிழாக் கொண்டாடுதல் . |
| சிறப்பெழுத்து | ஒரு மொழிக்குச் சிறப்பாக அமைந்துள்ள எழுத்து . |
| சிறவு | சிறந்த செயல் . |
| சிறாங்கணித்தல் | காண்க : சிறக்கணித்தல் . |
| சிறாங்கித்தல் | உள்ளங்கையளவாக்குதல் ; உரிமையாக்குதல் ; இரத்தல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 464 | 465 | 466 | 467 | 468 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிற்றில் முதல் - சிறாங்கித்தல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, கூறும், சிற்றுண்டி, சிறகை, மேம்பாடு, சிறக்கணித்தல், வீடு, சிறுமியர், சிறு, சாதி, சிறப்பணி, சிறகுகோதுதல், பெயர், குணம், செயல், சிறப்பாக, இல்லாதவளாகிய, முதலியவற்றின், மூதேவி, இறகு, உணவு, இன்பம், கட்டி, சிற்றிற்பருவம், உயிர், வரும், அவமதித்தல், பார்த்தல், சொல், மணல்

