தமிழ் - தமிழ் அகரமுதலி - சிறை முதல் - சின்னி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சிறை | காவல் ; காவலில் அடைக்கை ; சிறைச்சாலை ; அடிமைத்தனம் ; அடிமையாள் ; பெண்டாகச் சிறைபிடிக்கப்பட்ட இளம் பெண் ; அழகுள்ளவள் ; அணை ; நீர்நிலை ; இடம் ; பக்கம் ; கரை ; மதில் ; வரம்பு ; இறகு ; யாழ்நரம்புக் குற்றவகையுள் ஒன்று . |
| சிறைக்கணித்தல் | புறக்கணித்தல் . |
| சிறைக்களம் | காவற்கூடம் , சிறைச்சாலை . |
| சிறைக்கூடம் | காவற்கூடம் , சிறைச்சாலை . |
| சிறைக்கோட்டம் | காவற்கூடம் , சிறைச்சாலை . |
| சிறைகாவல் | சிறையிலிட்டுக் காக்குங் காப்பு . |
| சிறைகொள்ளுதல் | காவலில் வைக்கப் பிடித்துச் செல்லுதல் . |
| சிறைச்சாலை | காண்க : சிறைக்கூடம் . |
| சிறைச்சோறு | முப்பத்திரண்டு அறங்களுள் சிறைப்பட்டார்க்கு உணவளிக்குஞ் செயல் . |
| சிறைசெய்தல் | சிறையில் வைத்தல் ; நீரைத்தடுத்தல் ; நீரைக் கட்டுதல் . |
| சிறைத்தல் | சிறையில் வைத்தல் ; நீரைத்தடுத்தல் ; நீரைக் கட்டுதல் . |
| சிறைதல் | நிறங்கெடுதல் . |
| சிறைநோய் | சிறைத்துன்பம் . |
| சிறைப்படுதல் | சிறையில் அடைபடுதல் ; தடைபடுதல் ; அகப்படுதல் ; மறக்கப்படுதல் . |
| சிறைப்பள்ளி | காண்க : சிறைக்கூடம் . |
| சிறைப்பாடு | சிறை ; தடை ; தவறி விழுந்த இடத்தில் பண்டங்கிடக்கை ; பக்கம் . |
| சிறைப்புறம் | ஒதுக்கிடம் ; தோழி தலைவியர்க்குள் நிகழும் செய்திகளைத் தலைவன் மறைந்தறிதற்கு அனுகூலமாய்க் காவல் மனைப்புறமாயுள்ள இடம் ; வேலிப்புறம் ; சிறைச்சாலை . |
| சிறைபிடித்தல் | அடிமையாக்குதல் ; மனைவியாகவேனும் காமக்கிழத்தியாகவேனும் கொள்ளுமாறு பெண்ணைச் சிறைப்படுத்திக் கொண்டுபோதல் . |
| சிறைமீட்டல் | சிறையிலிருந்து விடுவித்தல் . |
| சிறைமீள்தல் | சிறையினின்றும் நீங்குதல் . |
| சிறைமீளுதல் | சிறையினின்றும் நீங்குதல் . |
| சிறையெடுத்தல் | காண்க : சிறைபிடித்தல் ; பெண்ணைத் தன்வசத்தே சேர்த்தல் . |
| சிறைவன் | காவற்பட்டவன் . |
| சிறைவீடு | சிறையினின்றும் வெளிவிடுகை . |
| சிறைவைத்தல் | காவலில் வைத்தல் . |
| சின் | ஓர் அசைச்சொல் . |
| சின்மதி | ஏழைப்புத்தி . |
| சின்மயம் | அறிவுமயம் . |
| சின்மயன் | அறிவுமயமாக உள்ள உயிர் . |
| சின்முத்திரை | சுட்டுவிரல் நுனியைப் பெருவிரல் நுனியுடன் சேர்த்துக் காட்டும் ஞானமுத்திரை . |
| சின்மை | சிறுமை , இழிவு ; குரலின் மென்மை . |
| சின்மொழி | சில சொல் ; இழிவான சொல் . |
| சின்ன | சிறிய ; இழிந்த ; இளைய . |
| சின்னகை | புன்னகை . |
| சின்னச்சாதி | கீழ்ச்சாதி . |
| சின்னஞ்சிறிய | மிகச் சிறிய . |
| சின்னத்தட்டு | பொற்கொல்லர் தராசின் தட்டு . |
| சின்னத்தனம் | கயமைத்தனம் ; சிறுபிள்ளைத்தனம் . |
| சின்னத்துரை | இளவரசர் . |
| சின்னது | சிறியது . |
| சின்னப்பட்டம் | பெரிய மடாதிபதிக்கு அடுத்த நிலையில் உள்ளவர் ; குருவின் வாரிசு . |
| சின்னப்படுத்தல் | பங்கப்படுத்தல் , குறைப்படுத்தல் . |
| சின்னப்படுதல் | பங்கப்படுதல் ; பழுதடைதல் , சிதைவடைதல் , பின்னமுறுதல் ; இகழ்ச்சியடைதல் . |
| சின்னப்புத்தி | அற்பபுத்தி ; பிள்ளைப்புத்தி . |
| சின்னப்பூ | நூறு , தொண்ணூறு , எழுபது , ஐம்பது , முப்பது இவற்றுள் ஓரெண்கொண்ட நேரிசை வெண்பாக்களால் அரசனது தசாங்கத்தைப் புகழ்ந்து கூறும் நூல்வகை ; விடுபூ ; கிள்ளுப்பூ . |
| சின்னபின்னம் | கண்டதுண்டம் . |
| சின்னம் | அடையாளம் ; பெண்குறி ; காளம் ; அற்பம் ; சிறியது ; முறம் ; மழைத்தூறல் ; இகழ்ச்சி ; முறிவுற்றது ; விடுபூ ; கிள்ளுப்பூ ; பொடி ; காசு ; வீரர்கள் போர்க்காலத்தில் தம்வாயில் இட்டுக்கொள்ளும் பொன்தகடு ; சீந்திற்கொடி ; துண்டு . |
| சின்னம்படுதல் | இகழ்ச்சியடைதல் . |
| சின்னம்மா | தாயின் தங்கை ; தந்தையின் தம்பி மனைவி ; திருமகள் . |
| சின்னம்மை | தாயின் தங்கை ; தந்தையின் தம்பி மனைவி ; அம்மைநோய்வகை . |
| சின்னமலர் | விடுபூ . |
| சின்னமனிதன் | கயமைத்தனமுள்ளவன் . |
| சின்னமுத்து | அம்மைநோய்வகை . |
| சின்னமூதி | அரசன் ஆணையைச் சின்னமூதிக் கொண்டு படைக்குச் சாற்றுவோன் . |
| சின்னமேளம் | துருத்தி முதலிய வாத்தியங்களுடன் தாசிகள் பாடிக்கொண்டு ஆடுதற்குரிய சதிர்மேளம் . |
| சின்னல் | பகட்டு . |
| சின்னன் | சிற்றுயிர் ; சிறுபொருள் . |
| சின்னாபின்னம் | காண்க : சின்னபின்னம் . |
| சின்னாயி | தாயின் தங்கை ; தந்தையின் தம்பி மனைவி . |
| சின்னாருகம் | சீந்திற்கொடி . |
| சின்னி | சிறியது ; முகத்தலளவை ; காண்க : சின்னிபொம்மை ; செடிவகை ; புரட்டுக்காரி ; இலவங்கம் ; குன்றிமணி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 467 | 468 | 469 | 470 | 471 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறை முதல் - சின்னி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சிறைச்சாலை, காண்க, தங்கை, வைத்தல், தாயின், சொல், சிறியது, சிறையினின்றும், மனைவி, சிறையில், தம்பி, காவலில், விடுபூ, தந்தையின், சிறைக்கூடம், காவற்கூடம், கிள்ளுப்பூ, சீந்திற்கொடி, அம்மைநோய்வகை, சின்னபின்னம், சிறைபிடித்தல், பக்கம், இடம், காவல், சிறை, நீரைத்தடுத்தல், நீரைக், சிறிய, நீங்குதல், கட்டுதல், இகழ்ச்சியடைதல்

