தமிழ் - தமிழ் அகரமுதலி - சிகரிகை முதல் - சிங்காரநடை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சிகரிகை | நேர்வாளச்செடி . |
| சிகரிநிம்பம் | மலைவேம்பு . |
| சிகரியந்தம் | புல்லுருவி . |
| சிகல் | குறைவு ; கேடு . |
| சிகல்தல் | குறைதல் ; கெடுதல் . |
| சிகலுதல் | குறைதல் ; கெடுதல் . |
| சிகலோகம் | காண்க : அகில் . |
| சிகழி | தலைமயிரின் முடிப்பு . |
| சிகழிகை | மயிர்முடிப்பு ; தலையைச் சூழ அணியும் மாலைவகை ; மாலை . |
| சிகா | எலி ; முத்திரை ; முடி . |
| சிகாமணி | தலையில் அணியும் மணி ; சிறந்தோன் . |
| சிகாரி | வேட்டை ; வேட்டைக்காரன் . |
| சிகாரியான் | வேட்டைக்காரன் ; வேட்டையில் உதவி ஆள் . |
| சிகாவர்க்கம் | சுவாலைக் கூட்டம் . |
| சிகாவரம் | பலாமரம் . |
| சிகாவலம் | மயில் ; பாசி . |
| சிகாவளம் | மயில் . |
| சிகாவிம்பம் | வட்டவடிவாகிய தலை . |
| சிகி | மயில் ; நெருப்பு ; கேது ; ஆமணக்கு ; புத்தர்களுள் ஒருவர் ; அம்பு ; எருது ; குதிரை ; சிலம்பு ; சேவல் ; விளக்கு . |
| சிகிக்கிரீவம் | மயில்துத்தம் . |
| சிகிகண்டம் | மயில்துத்தம் . |
| சிகிச்சை | நோய்க்குச் செய்யும் பரிகாரம் , மருத்துவம் . |
| சிகிடிமா | கொட்டைமுந்திரிகைமரம் . |
| சிகிமுனி | காண்க : சிக்கிமுக்கிக்கல் . |
| சிகில் | ஆயுதங்களைத் துலக்குகை . |
| சிகிலம் | சேறு . |
| சிகிவாகனன் | மயில்வாகனன் , முருகக்கடவுள் . |
| சிகுரம் | மயிர்ப்பொது . |
| சிகுவை | நாக்கு ; பத்து நாடிகளுள் ஒன்று ; வாக்கு . |
| சிகை | குடுமி ; தலைமயிர்முடி ; தலையின் உச்சி ; மயிற்கொண்டை ; பந்தம் ; சுடர் ; உண்டிக்கவளம் ; வட்டி ; நிலுவை . |
| சிகைக்காய் | சீயக்காய் . |
| சிகைதாடு | சீயக்காய் ; தலையணிவகை . |
| சிகைதாடுகுச்சு | சீயக்காய் ; தலையணிவகை . |
| சிகைமாலை | தலைமாலை ; வாசிகை . |
| சிங்கங்கீறுதல் | அக்கிநோய்க்குச் செம்மண்ணால் சிங்கவடிவம் எழுதுதல் ; கிட்டிப்புள்ளு விளையாட்டில் எண் குறித்தல் . |
| சிங்கச்சுவணம் | உயர்தரப் பொன் . |
| சிங்கடியப்பன் | சிங்கடி என்னும் பெண்ணுக்குத் தந்தையொத்த சுந்தரமூர்த்திநாயானார் . |
| சிங்கத்திசை | தெற்கு . |
| சிங்கநகக்கை | ஒரு கையின் விரல்களைச் சிங்க நகங்கள்போல் அகற்றி வளைத்தலாகிய அபிநயக்கைவகை . |
| சிங்கநகம் | ஒரு கையின் விரல்களைச் சிங்க நகங்கள்போல் அகற்றி வளைத்தலாகிய அபிநயக்கைவகை . |
| சிங்கநாதம் | அரிமா முழக்கம் ; வீராவேசத்தால் ஆரவாரித்தல் ; ஊதுகொம்பு ; போரில் வீர்ர் செய்யும் முழக்கம் ; தொந்தரவு . |
| சிங்கநோக்கு | சிங்கத்தைப்போல் கழுத்தைத் திருப்பிப் பின்னும் முன்னும் பார்த்தல் , அரிமா நோக்கம் . |
| சிங்கப்பல் | முன்புறம் நீண்டுள்ள துணைப்பல் . |
| சிங்கப்பிரான் | நரசிங்கமூர்த்தி . |
| சிங்கப்பெருமாள் | நரசிங்கமூர்த்தி . |
| சிங்கம் | மிக்க வன்மையுள்ள ஒரு விலங்கு ; சிம்மராசி ; ஆடாதோடை ; கொம்பு ; வாழையின் இளங்கன்று ; ஒரு விளையாட்டு அளவு ; வேளாளரின் பட்டப்பெயர் ; சரகாண்டபாடாணம் ; மணப்பண்டவகை . |
| சிங்கம்புள் | கிட்டிப்புள் என்னும் ஒரு விளையாட்டுக் கருவி . |
| சிங்கமடங்கல் | சிங்கக்குட்டி . |
| சிங்கமடித்தல் | கிட்டியடித்தல் . |
| சிங்கமதாணி | வெற்றிவேந்தன் மார்பில் அணியும் சிங்கமுகப் பதக்கம் . |
| சிங்கமுகம்வைத்தல் | கோபங்கொண்டிருத்தல் . |
| சிங்கமுகவோடம் | சிங்கத்தின் உருவை முகப்பிற் கொண்ட தோணி . |
| சிங்கல் | குறைதல் ; இளைத்தல் . |
| சிங்கவல்லி | தூதுளைக்கொடி . |
| சிங்கவாகினி | துர்க்கை . |
| சிங்கவாதனம் | காண்க : சிங்காசனம் . |
| சிங்கவிளக்கெரிக்கை | பகைவர் தலையிலே சாணத்தையிட்டு விளக்கேற்றி அவமதிக்கை . |
| சிங்கவேரம் | சுக்கு ; இஞ்சி ; ஒரு மருந்துவகை . |
| சிங்கவேறு | ஆண்சிங்கம் ; வீரன் . |
| சிங்களம் | இலங்கை ; சிங்களமொழி ; ஒரு கூத்து . |
| சிங்களர் | ஈழநாட்டிலுள்ள சிங்களமொழி பேசுவோர் . |
| சிங்கன் | குறவன் . |
| சிங்கன்வாழை | ஒரு வாழைவகை . |
| சிங்காசனம் | அரியணை , சிங்கம் தாங்குவது போல் அமைக்கபட்ட இருக்கை ; தவிசு . |
| சிங்காடி | காண்க : சிங்காணி . |
| சிங்காணம் | மூக்குச்சளி . |
| சிங்காணி | உண்டை வைத்து அடிக்கும் ஒரு வில்வகை . |
| சிங்காதனம் | காண்க : சிங்காசனம் . |
| சிங்காரக்காரன் | அலங்கார உடையுள்ளவன் . |
| சிங்காரத்தோட்டம் | பூந்தோட்டம் ; அடிசில் தோட்டம் . |
| சிங்காரத்தோப்பு | பூந்தோட்டம் ; அடிசில் தோட்டம் . |
| சிங்காரநடை | ஒய்யாரநடை , பெருமிதநடை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 451 | 452 | 453 | 454 | 455 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிகரிகை முதல் - சிங்காரநடை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, மயில், குறைதல், சிங்காசனம், அணியும், சீயக்காய், சிங்கம், முழக்கம், அரிமா, நரசிங்கமூர்த்தி, சிங்காணி, தோட்டம், அடிசில், பூந்தோட்டம், அபிநயக்கைவகை, சிங்களமொழி, சிங்க, செய்யும், மயில்துத்தம், வேட்டைக்காரன், கெடுதல், தலையணிவகை, என்னும், அகற்றி, நகங்கள்போல், விரல்களைச், கையின், வளைத்தலாகிய

