தமிழ் - தமிழ் அகரமுதலி - சம்பளம் முதல் - சம்மானம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சம்மதித்தல் | உடன்படுதல் ; நன்குமதித்தல் . |
| சம்மாரம் | அழிவு . |
| சம்மான் | தோணி . |
| சம்மானம் | உபசாரச்சொல் ; வெகுமதி ; இறையிலியாக விடப்பட்ட நிலம் . |
| சம்பாதித்தல் | தேடிப்பெறுதல் . |
| சம்பாபதி | சம்பாபதியின் இருப்பிடமான காவிரிப்பூம்பட்டினம் ; சம்புத்தீவைக் காவல் செய்யும் தேவதை . |
| சம்பாரங்கூட்டுதல் | கறிக்குக் கூட்டுவர்க்கஞ் சேர்த்தல் . |
| சம்பாரப்பொடி | கறிக்கூட்டுவர்க்கம் |
| சம்பாரம் | கூட்டுவர்க்கம் ; நீர்மோர் ; கைமரந்தாங்கி |
| சம்பாரி | சம்பன் என்ற அசுரனைக் கொன்ற இந்திரன் ; அக்கினி தேவன் . |
| சம்பால் | ஒரு பச்சடிவகை . |
| சம்பாலம் | ஆட்டுக்கடா |
| சம்பாவனை | வெகுமானம் ; மரியாதை |
| சம்பாவிதம் | நிகழக்கூடியது . |
| சம்பான் | தோணி , படகு . |
| சம்பானோட்டி | தோணி வலிப்போன் |
| சம்பிரதம் | விளைவு ; கலம்பக உறுப்புள் ஒன்று , இந்திரசாலம் . |
| சம்பிரதாயம் | குரு பரம்பரையில் வந்த உபதேசம் ; தொன்றுதொட்ட வழக்கம் ; திறமை . |
| சம்பிரதாரணை | ஆராய்ந்து செய்யும் தீர்மானம் |
| சம்பிரதானம் | கொடை ; நான்காம் வேற்றுமைப் பொருள் |
| சம்பிரதி | தலைமைக் கணக்கன் ; ஊர்க்கணக்கனுக்கு உதவி செய்யும் எழுத்தர் ; வட்டத் தலைமைக் கணக்கர் |
| சம்பிரமம் | மகிழ்ச்சி ; பரபரப்பு ; மனக்களிப்பு ; சிறப்பு ; நிறைவு |
| சம்பிராத்தி | பேறு . |
| சம்பிரேட்சியம் | ஆராய்ந்தறிகை . |
| சம்பிளி | காண்க : சம்பளி . |
| சம்பீரம் | எலுமிச்சைமரம் ; கிச்சிலிமரம் . |
| சம்பு | இன்பத்தைத் தருபவனான சிவன் ; திருமால் ; பிரமன் ; அருகன் ; சூரியன் ; நாவல்மரம் ; நாவலந்தீவு ; நாவலந்தீவைக் காக்கும் தேவதை ; சம்புநதி ; செய்யுளும் உரைநடையும் விரவிவரும் நூல்வகை ; எலுமிச்சைமரம் ; வச்சிரப்படை ; நரி ; சம்பங்கோரை ; நெட்டி ; |
| சம்புகம் | நரி . |
| சம்புகன் | நரி . |
| சம்புகேச்சுரம் | திருவானைக்கா என்னுந் தலம் |
| சம்புச்சயனம் | திருமாலின் படுக்கையாகிய ஆலிலை ; |
| சம்புடம் | சிறுசெப்பு ; புத்தகப் பகுதி ; இருக்கை ஒன்பதனுள் ஒன்று . |
| சம்புத்தி | ஒருமை விளி ; நற்புத்தி . |
| சம்புத்தீவு | ஏழு தீவுகளுள் ஒன்றாகிய நாவலந்தீவு . |
| சம்புபட்சம் | சுத்தமாயைப் பிரபஞ்சத்தில் தொழில் புரியும் சிவ பேதங்கள் . |
| சம்புரோட்சனம் | தூய்மைக்காக கோயிலகளில் செய்யுஞ் சடங்கு . |
| சம்புரோட்சணை | தூய்மைக்காக கோயிலகளில் செய்யுஞ் சடங்கு . |
| சம்புளி | காண்க : சம்பளி . |
| சம்பூகம் | கிளிஞ்சில் வகை . |
| சம்பூரணம் | நிறைவு ; முடிவு ; மிகுதி ; சம்பூரண ராகம் ; பல பெண்குழந்தைகளைப் பெற்றுச் சலித்தோர் மேலும் பெறுதலில் வெறுப்புற்று இதுவே கடைப்பெண்ணாகுக என்று பிறந்த பெண்குழந்தைக்கு இடும் பெயர் . |
| சம்பூரணராகம் | எல்லாச் சுரங்களும் அமைந்த பண் . |
| சம்பை | சம்பங்கோரைப்புல் ; மட்டச் சரக்கு ; எளிதில் அழியக்கூடிய பண்டங்கள் ; மீன் ; மின்னல் ; எழுவகைத்தாளத்துள் ஒன்று ; செழிப்பு . |
| சம்பைச்சரக்கு | மட்டச்சரக்கு ; எளிதில் அழியக்கூடிய பண்டங்கள் . |
| சம்பைதாளம் | எழுவகைத்தாளத்துள் ஒன்று . |
| சம்போக்கு | கப்பற் கூட்டம் . |
| சம்போகம் | புணர்ச்சி . |
| சம்போதனம் | பன்மை விளி . |
| சம்போதனை | விளிவேற்றுமை . |
| சம்போர் | பூதம் . |
| சம்மட்டி | குதிரையோட்டுங்கருவி ; சுத்தியல் வகை ; ஒரு பூண்டுவகை . |
| சம்மணம் | காண்க : சப்பணம் . |
| சம்மதம் | உடன்பாடு ; நட்பு ; கொள்கை . |
| சம்மதன் | நண்பன் ; மைத்துனன் . |
| சம்மதி | உடன்பாடு . |
| சம்பளம் | வழியுணவு ; வழிப்பொருள் ; மாத உழைப்பிற்குக் கிடைக்கும் ஊதியம் ; கரை ; எலுமிச்சை மரம் ; பள்ளிக்கூடச் சம்பளம் . |
| சம்பளி | வெற்றிலைப் பை ; பொருள் வைக்கும் பை . |
| சம்பன்னம் | நிறைவு |
| சம்பன்னன் | செல்வமுள்ளவன் ; நிறைந்தவன் . |
| சம்பா | ஓர் உயர்ந்த நெல் வகை ; மிளகு , சீரகங் கலந்து சுவாமிக்குப் படைக்கும் அன்னம் ; ஒரு விளையாட்டு ; தாயவகை ; நால் விரலளவு . |
| சம்பாகம் | நாடு ; நன்றாய்ச் சமைத்தது . |
| சம்பாடணை | உரையாடல் . |
| சம்பாத்தியம் | பொருள் ஈட்டுகை . |
| சம்பாதனம் | பொருள் ஈட்டுகை . |
| சம்பாதனை | பொருள் ஈட்டுகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 425 | 426 | 427 | 428 | 429 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சம்பளம் முதல் - சம்மானம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், பொருள், ஒன்று, சம்பளி, தோணி, நிறைவு, காண்க, செய்யும், ஈட்டுகை, பண்டங்கள், அழியக்கூடிய, எளிதில், எழுவகைத்தாளத்துள், சடங்கு, உடன்பாடு, சம்பளம், விளி, தலைமைக், தேவதை, எலுமிச்சைமரம், நாவலந்தீவு, கோயிலகளில், தூய்மைக்காக, செய்யுஞ்

