முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » சதுரித்தல் முதல் - சந்தனச்சாந்து வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - சதுரித்தல் முதல் - சந்தனச்சாந்து வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சந்தசு | யாப்புவகை ; வேதாங்கங்களுள் ஒன்றாய் யாப்பிலக்கணம் கூறும் நூல் ; வேதம் . |
| சந்தஞ்சம் | நாட்டியத்தில் காட்டும் ஆண்மக்கட்குரிய கைவகைகளுள் ஒன்று . |
| சந்தடி | இரைச்சல் ; ஆரவாரம் ; கூட்டம் . |
| சந்தடைப்பன் | மாட்டுநோய்வகை . |
| சந்தணி | சந்தனம் . |
| சந்தணுகி | இடுகிய சந்துகளில் வாழும் பாம்பு . |
| சந்தத்தாண்டகம் | சந்தவடியும் தாண்டகவடியும விரவி ஓசைகொண்டு வருஞ் செய்யுள் . |
| சந்ததம் | எப்பொழுதும் . |
| சந்ததி | வழித்தோன்றல் ; மகன் ; மரபு . |
| சந்தப்பா | நான்கெழுத்து முதல் இருபத்தாறெழுத்து வரையுள்ள அடிகள் நான்கு கொண்ட பாவகை . |
| சந்தப்பாட்டு | நான்கெழுத்து முதல் இருபத்தாறெழுத்து வரையுள்ள அடிகள் நான்கு கொண்ட பாவகை . |
| சந்தப்பாணம் | புண்கட்டிக்கு இடும் ஒரு கலவை மருந்து . |
| சந்தம் | அழகு ; நிறம் ; செய்யுள்வண்ணம் ; வடிவு ; சுகம் ; பழக்கம் ; வேதத்தில் வரும் யாப்பைப் பற்றிக்கூறும் நூல் ; சந்தப்பாட்டு ; சந்தனம் ; துளை ; கருத்து . |
| சந்தமாமா | சந்திரன் ; கூத்தில் கோமாளி தன்னோடு பேசுபவரைக் குறித்தற்கு கூறுஞ் சொல் . |
| சந்தயம் | ஐயம் ; ஐயவணி . |
| சந்தர்ப்பணம் | நிறைவுசெய்தல் ; மகிழ்வித்தல் . |
| சந்தர்ப்பம் | வாய்ப்பு ; சமயம் ; முன்பின்னமைவு . |
| சந்தரி | துளசி . |
| சந்தவடி | நான்கு முதல் இருபத்தாறு வரையுள்ள எழுத்துக்களால் இயன்ற விருத்தத்தின் அடி . |
| சந்தவாக்கு | இயற்கைக்குணம் ; இழிந்த பழக்கம் . |
| சந்தவிருத்தம் | இனிய ஓசையுடைய பாடல் . |
| சந்தனக்கட்டை | உரைத்தற்குரிய சந்தனமரக்கட்டை . |
| சந்தனக்கல் | சந்தனம் உரைக்குங் கல் . |
| சந்தனக்காப்பு | சந்தனத்தை கடவுளின் திருமேனியில் அப்புகை . |
| சந்தனக்குடம் | முகமதியரின் ஒரு திருவிழா . |
| சந்தனக்குழம்பு | இழைத்த சந்தனம் ; கலவைச்சாந்து . |
| சந்தனக்குறை | கலவைச்சாந்தில் பயன்படுத்தும் சந்தனக் கட்டைத் துண்டு . |
| சந்தனக்கூட்டு | கலவைச்சந்தனம் . |
| சந்தனச்சாந்து | கலவைச்சந்தனம் . |
| சதுரித்தல் | சரிசதுரமாக்கல் ; மரம் முதலியவற்றை நான்கு பட்டையாகச் செதுக்குதல் ; கட்டடத்தின் அமைப்பெல்லையைப் பூமியில் வரையறுத்துக் குறித்தல் ; எண்களை வர்க்கமாக்குதல் . |
| சதுரித்திருத்தல் | கவனமாயிருத்தல் . |
| சதுருபாயம் | அரசர்க்கென நீதிநூல்களில் கூறப்பட்டுள்ள சாமம் , தானம் , பேதம் , தண்டம் என்னும் நான்குவகை உபாயங்கள் . |
| சதுரூடியங்கள் | யானை , குதிரை , தேர் , காலாள் என்னும் நால்வகைப் படைகள் . |
| சதுவகை | நால்வகை . |
| சதுவல் | காண்க : சதக்கல் . |
| சதுனி | வௌவால் . |
| சதேகமுத்தி | சீவன்முத்தி . |
| சதேகரு | இலவங்கப்பட்டை . |
| சதேகை | சீவன்முத்தித் தன்மையில் நிட்டை பொருந்தியிருக்கை . |
| சதேந்திரர் | 42 பவணந்திரரும் , 32 வியந்தரேந்திரரும் , 22 கற்பேந்திரரும் , சந்திரன் , சூரியன் , நரேந்திரன் , மிருகேந்திரன் என்னும் நால்வரும் ஆகிய இந்திரர் நூற்றுவர் . |
| சதேரன் | பகைவன் . |
| சதை | ஊன் ; பழத்தின் தசை ; முன்னைமரம் ; பாலைமரம் ; இணை . |
| சதைக்குந்தம் | கருவிழியிற் படரும் நோய்வகை . |
| சதைக்குவை | கடைக்கண்ணில் வரும் நோய் வகை . |
| சதைக்கொழுப்பு | உடம்பு கொழுத்திருக்கை ; தடித்தனம் . |
| சதைத்தல் | சதைப்பற்றுதல் ; நசுக்குதல் ; நெரித்தல் . |
| சதைதல் | நசுங்குதல் ; நெரிதல் . |
| சதைப்படர்த்தி | கணணோய்வகை . |
| சதைப்பற்று | பழத்தின் தசை ; உடைமை ; ஊன் . |
| சதைப்புற்று | வெள்விழியிற் காணும் நோய் வகை . |
| சதையம் | காண்க : சதயம் . |
| சதையல் | மூங்கில் பிளப்பு . |
| சதைவலி | சதையில் வலி உண்டாக்கும் நோய் வகை . |
| சதைவளர்ச்சி | சதைவளரும் நோய்வகை . |
| சதைவுகாயம் | நசுங்கலால் உண்டாகும் காயம் . |
| சதைவைத்தவள் | மலடானவள் . |
| சதோகரு | இலவங்கப்பட்டை . |
| சதோகுரு | இலவங்கப்பட்டை . |
| சதோடம் | குற்றத்துடன் கூடியது . |
| சந்தக்கவி | காண்க :சந்தப்பா . |
| சந்தக்குழம்பு | மணமூட்டிக் குழைத்த சந்தனம் . |
| சந்தக்கேடு | மாணிக்கக் குற்றங்களுள் ஒன்று . |
| சந்தகபுட்பம் | கிராம்பு . |
| சந்தகம் | இடியப்பம் ; மகிழ்ச்சி . |
| சந்தகன் | சந்திரன் . |
| சந்தகை | இடியப்பக்குழல் . |
| சந்தகைப்பலகை | இடியப்பக்குழல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 420 | 421 | 422 | 423 | 424 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சதுரித்தல் முதல் - சந்தனச்சாந்து வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சந்தனம், நான்கு, காண்க, என்னும், சந்திரன், வரையுள்ள, இலவங்கப்பட்டை, நோய், கலவைச்சந்தனம், இடியப்பக்குழல், நோய்வகை, பழத்தின், வரும், பாவகை, நான்கெழுத்து, சந்தப்பா, ஒன்று, நூல், இருபத்தாறெழுத்து, அடிகள், சந்தப்பாட்டு, சொல், கொண்ட, பழக்கம்

