தமிழ் - தமிழ் அகரமுதலி - சதுப்பு முதல் - சதுரானன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சதுரச்சிரம் | நிருத்தக்கைவகை ; தாளத்தின் சாதி ஐந்தனுள் ஒன்று . |
| சதுரசிரசாதி | தாளத்தின் சாதி ஐந்தனுள் ஒன்று . |
| சதுரசிரம் | காண்க :சதுரச்சிரம் . |
| சதுரந்தயானம் | சிவிகை ; பல்லக்கு . |
| சதுரப்பலகை | சதுரங்கமாடும் பலகை ; தச்சன் கருவிவகை . |
| சதுரப்பாடு | திறமை ; அறிவுக்கூர்மை ; நேர் கோணமுள்ளதும் அளவொத்த நான்கு எல்லை வரம்புடையதுமான உருவம் ; உடலுழைப்பு . |
| சதுரப்பாலை | பாலை யாழ்த்திறவகை நான்கனுள் ஒன்று . |
| சதுரம் | நேர்கோணமுள்ளதும் அளவொத்த நான்கு எல்லை வரம்புடையதுமான உருவம் ; அகலம் நீளம் ஒத்த நாற்கோணம் ; சதுரக்கள்ளி ; சிறுவிரல் பின்பாக நிமிரப் பெருவிரல் உள்ளே வர மற்றை மூவிரல்களும் தம்முட் சேர்ந்து இறைஞ்சி நிற்கும் இணையா வினைக்கை ; திறமை ; அறிவுக்கூர்மை ; நாகரிகம் ; விரைவு . |
| சதுரமாடம் | நான்குபுறமும் அளவொத்த மாடப்புரை . |
| சதுரவளவு | அகலநீளங்களை பெருக்கிவந்த அளவு . |
| சதுரன் | திறமையுடையவன் ; நகரவாசி ; பேராசைக்காரன் . |
| சதுரானன் | நான்கு முகங்களையுடைய பிரமன் . |
| சதுப்பு | சேற்றுநிலம் . |
| சதுப்புநிலம் | சேற்றுநிலம் . |
| சதுப்புயன் | நான்கு தோள்களையுடைய திருமால் . |
| சதுப்பேதி | நான்கு வேதங்களிலும் வல்ல பார்ப்பனன் . |
| சதும்பை | செடிவகை . |
| சதுமணி | கழலை . |
| சதுமுகன் | நான்கு முகங்களையுடைய பிரமன் ; அருகன் . |
| சதுர் | நான்கு ; திறமை ; விரகு ; உபாயம் ; மலிவு ; நாட்டியம் . |
| சதுர்க்கதி | ஆமை . |
| சதுர்க்கோணம் | நாற்கோணமுள்ள வடிவம் . |
| சதுர்காணுதல் | விலை மலிவாதல் . |
| சதுர்கூலி | ஆவிரைச்செடி . |
| சதுர்த்தசம் | பதினான்கு . |
| சதுர்த்தசி | பதினான்காம் திதி . |
| சதுர்த்தம் | நான்காவது ; நான்கு சுரமுள்ள பண் . |
| சதுர்த்தி | நான்காம் திதி ; நான்காம் வேற்றுமை ; திருமணத்தில் நான்காம் நாள் இருக்கும் நோன்பு . |
| சதுர்த்திகை | காற்பலம் ; நான்காம் திதி . |
| சதுர்த்தியறை | திருமணத்தில் நான்காம் நாள் இரவு மணமக்கள் கூடி உறையும் அறை . |
| சதுர்ப்பதம் | காண்க : சதுர்ப்பாதம் . |
| சதுர்ப்பாகம் | செலுத்தற்குரிய அரசிறையில் காற்பகுதி செலுத்தி அனுபவிக்கும் மானிய நிலம் ; நிலவரியில் நாலில் ஒரு பாகத்தை அரசிடமிருந்து இனாம் பெறுதல் . |
| சதுர்ப்பாடு | காண்க :சதுரப்பாடு . |
| சதுர்ப்பாதம் | கரணம் பதினொன்றனுள் அமாவாசையின் முற்பகுதியில் நிகழும் காலக்கூறு ; சிவாகமங்களில் கூறப்படும் சரியை , கிரியை , யோகம் , ஞானம் என்னும் நான்கு பகுதிகள் . |
| சதுர்ப்புயன் | நான்கு தோள்களை உடைய திருமால் ; சிவன் . |
| சதுர்ப்பேதி | காண்க : சதுர்வேதி . |
| சதுர்முகன் | நான்குமுகன் ; அருகன் . |
| சதுர்யுகம் | கிரேதாயுகம் ,திரேதாயுகம் ,துவாபரயுகம் , கலியுகம் என்னும் நான்கு யுகங்கள் ; நான்கு யுகங்கூடிய பெருங்காலம் . |
| சதுர்விதோபாயம் | காண்க :சதுருபாயம் . |
| சதுர்வேதம் | இருக்கு ; யசுர் ,சாமம் ; அதர்வணம் என்னும் நான்கு வேதங்கள் . |
| சதுர்வேதி | நான்கு மறைகளிலும் வல்லவன் . |
| சதுரக்கம்பம் | நாற்கோணமாய் அமைந்த தூண் வகை . |
| சதுரக்கல் | சதுரவடிவான கல் . |
| சதுரக்கள்ளி | கள்ளிவகை . |
| சதுரகராதி | பெயரகராதி ,பொருளகராதி , தொகையகராதி ,தொடையகராதி என்று நாற்பிரிவுகள் உடையதாகப் பதினெட்டாம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் இயற்றிய அகராதி . |
| சதுரங்கசேனை | யானை , குதிரை , தேர் , காலாள் சேர்ந்த நால்வகைப் படை . |
| சதுரங்கபந்தம் | சதுரங்கக் கட்டத்தில் எழுத்துகள் முறைப்படி அடையப் பாடப்பெறும் மிறைக்கவிவகை . |
| சதுரங்கபலம் | காண்க :சதுரங்கசேனை . |
| சதுரங்கம் | யானைப்படை , குதிரைப்படை , தேர்ப்படை , காலாட்படை எனும் நால்வகைப்படை ; நால்வகை சேனைகளாகக் காய்களை நிறுத்தி விளையாடும் ஒரு விளையாட்டுவகை ; நாற்கோணம் . |
| சதுரச்சந்தி | நாற்சந்தி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 419 | 420 | 421 | 422 | 423 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சதுப்பு முதல் - சதுரானன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், நான்கு, காண்க, நான்காம், திதி, திறமை, அளவொத்த, ஒன்று, என்னும், சேற்றுநிலம், அருகன், திருமால், நாள், சதுரங்கசேனை, சதுர்வேதி, சதுர்ப்பாதம், பிரமன், திருமணத்தில், நாற்கோணம், சதுரப்பாடு, ஐந்தனுள், சாதி, தாளத்தின், அறிவுக்கூர்மை, எல்லை, சதுரக்கள்ளி, சதுரச்சிரம், உருவம், வரம்புடையதுமான, முகங்களையுடைய

