முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » சந்திரகாசரசம் முதல் - சந்திவேளை வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - சந்திரகாசரசம் முதல் - சந்திவேளை வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
சந்திரிகம் | ஓலையின் உறைச்சுருள் . |
சந்திரிகை | நிலவு ; பேரேலம் ; ஓலைச்சுருள் . |
சந்திரேகம் | கார்போக அரிசிவிதை . |
சந்திரோதயம் | நிலவினுதயம் ; குளிர்ச்சியைத் தரும் ஒருவகை மாத்திரை . |
சந்திரோபாலம்பனம் | காதலருள் பிரிந்தோர் விரக வேதனையால் சந்திரனைப் பழித்துக் கூறுதல் . |
சந்தில் | சனி ; மூங்கில் . |
சந்திவந்தனம் | காண்க : சந்தியாவந்தனம் . |
சந்திவந்தனை | காண்க : சந்தியாவந்தனம் . |
சந்திவழு | எழுத்திலக்கணத்திற்குரிய புணர்ச்சிக்கு வழுவாய்த் தொடுப்பது . |
சந்திவிக்கிரகம் | அடுத்துக்கெடுத்தல் ; நட்புக் கொண்டு கெடுத்தல் . |
சந்திவிளக்கு | கோயிலில் மாலைக்காலத்து ஏற்றும் விளக்கு . |
சந்திவேளை | சாயங்காலம் . |
சந்திராயுதம் | பிறைவடிவான அம்பு . |
சந்திரகாந்தி | ஒரு பூச்செடிவகை . |
சந்திரகாம்புயம் | வெண்டாமரை . |
சந்திரகாவி | செங்காவிமண் ; சிவப்புச் சாயவகை ; ஒரு புடைவைவகை . |
சந்திரகாவிச்சேலை | ஒரு புடைவைவகை . |
சந்திரகி | மயில் . |
சந்திரகிரகணம் | சூரியன் , பூமி , சந்திரன் மூன்றும் நேர்கோட்டில் வரும் நிறைநிலாக்காலத்து இரவில் பூமியின் நிழல்பட்டுச் சந்திரன் இருளுதல் ; இராகுவால் சந்திரன் பிடிக்கப்படுதல் . |
சந்திரகுரு | வெண்முத்து ; வெண்ணிறமுடைய அசுரகுரு ; சுக்கிரன் . |
சந்திரகுலம் | சந்திரனைக் குலமுதல்வனாகக் கொண்ட அரசகுலம் . |
சந்திரசம்பவன் | சந்திரனிடம் தோன்றியவனான புதன் . |
சந்திரசாலிகை | நிலாமுற்றம் . |
சந்திரசாலை | நிலாமுற்றம் . |
சந்திரசூடன் | சந்திரனை முடியில்கொண்ட சிவன் . |
சந்திரசேகரன் | சந்திரனை முடியில்கொண்ட சிவன் . |
சந்திரஞானம் | ஒரு சைவாகமம் . |
சந்திரதரிசனம் | குழந்தைக்கு நல்ல வேளையில் சந்திரனை முதன்முதலாக் காட்டுஞ் சடங்கு ; வளர்பிறையில் சந்திரன் முதன்முதலில் தெரிதல் . |
சந்திரதிசை | குபேரனது திசையாகிய வடக்கு . |
சந்திரதிலகம் | சந்தனம் ; சந்தனப்பொட்டு . |
சந்திரநாடி | பெண்குறிவாயினிற் படிந்திருக்கும் சவ்வு . |
சந்திரநாதம் | இராகு ; ஒரு மருந்துச்சரக்கு . |
சந்திரப்பிரபை | நிலவு ; மகளிர் தலையணிகளுள் ஒன்று ; சந்திரன் வடிவாய் அமைந்த ஊர்தி வகை . |
சந்திரப்பிறை | மகளிர் அணியும் பிறைபோன்ற கழுத்தணி ; மகளிர் தலையணிகளுள் ஒன்று . |
சந்திரபாணி | வயிரக்கல் . |
சந்திரபூரம் | பச்சைக் கருப்பூரம் . |
சந்திரம் | கருப்பூரம் ; பொன் ; இரவின் 15 முகூர்த்தங்களுள் ஒன்பதாவது ; மிருகசீரிடம் ; நீர் . |
சந்திரமண்டலம் | சந்திரனது வட்டம் ; சூரிய மண்டலத்திற்கு மேலுள்ளதும் புவர் உலகத்தைச் சார்ந்ததுமாகிய உலகம் . |
சந்திரமணி | சந்திரன் ஒளியில் நீர் சுரப்பதாகிய கல் . |
சந்திரமானம் | சந்திரன் சஞ்சரிக்கும் அளவு . |
சந்திரமுருகு | மகளிர் காதணிகளுள் ஒன்று . |
சந்திரமௌலி | சந்திரனை முடியில் கொண்ட சிவன் . |
சந்திரரோகம் | பெருநோய்வகை ; பைத்தியம் . |
சந்திரலக்கினம் | சாதகன் பிறந்த காலத்தில் சந்திரனிருக்கும் இராசி . |
சந்திரலோகம் | காண்க : சந்திரமண்டலம் . |
சந்திரவட்டக்குடை | அரசச் சின்னங்களுள் ஒன்றாகிய வெண்கொற்றக்குடை . |
சந்திரவட்டம் | அரசச் சின்னங்களுள் ஒன்றாகிய வெண்கொற்றக்குடை . |
சந்திரவலயம் | சிலம்பு வடிவாயமைந்த வாச்சியவகை . |
சந்திரவளையம் | ஒரு விளையாட்டுக் கருவி ; தோற்கருவிவகை ; சந்திரவலயம் ; தொட்டில் முதலியவற்றைத் தொங்கவிடுவதற்கு மேலிடத்து மாட்டுவதற்குரிய வளையவகை ; கிணற்றுள் வட்டமாக அமைத்து இறக்கப்படும் நெல்லிக்கட்டை . |
சந்திரவாதி | சந்திரலோகம் அடைவதே முத்தியென்று வாதிப்போன் . |
சந்திரவாள் | காண்க : சந்திரகாசம் . |
சந்திரன் | திங்கள் ; குபேரன் ; இடைகலை நாடி . |
சந்திரன்சிப்பி | முத்துச்சிப்பி . |
சந்திரனாள் | திங்கட்கிழமை . |
சந்திராதபம் | நிலவு . |
சந்திராதித்தம் | அருகன் முக்குடைகளுள் ஒன்று . |
சந்திராதித்தவரை | சந்திரர் சூரியர் உள்ள வரையில் . |
சந்திராதித்தவல் | சந்திரர் சூரியர் உள்ள வரையில் . |
சந்திராபீடன் | சந்திரனை முடியில் கொண்ட சிவன் . |
சந்திரகாசரசம் | நீர்வடிவமான ஒரு மருந்துவகை . |
சந்திரகாந்தக்கல் | காண்க :சந்திரமணி ; வெள்ளாம்பல் . |
சந்திரகாந்தச்சிலை | காண்க :சந்திரமணி ; வெள்ளாம்பல் . |
சந்திரகாந்தம் | காண்க :சந்திரமணி ; வெள்ளாம்பல் . |
சந்திரகாந்தமணி | காண்க :சந்திரமணி ; வெள்ளாம்பல் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 422 | 423 | 424 | 425 | 426 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சந்திரகாசரசம் முதல் - சந்திவேளை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, சந்திரன், சந்திரமணி, சந்திரனை, மகளிர், ஒன்று, சிவன், வெள்ளாம்பல், நிலவு, கொண்ட, வெண்கொற்றக்குடை, ஒன்றாகிய, சின்னங்களுள், வரையில், சூரியர், அரசச், சந்திரர், உள்ள, சந்திரவலயம், நீர், நிலாமுற்றம், புடைவைவகை, சந்தியாவந்தனம், முடியில்கொண்ட, தலையணிகளுள், முடியில், சந்திரமண்டலம், கருப்பூரம், சந்திரலோகம்