தமிழ் - தமிழ் அகரமுதலி - சதமுனைஇடி முதல் - சதுட்பாதம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சதிருக்குவருதல் | வெளிப்படையாதல் . |
| சதிருசம் | ஒப்பு . |
| சது | நான்கு : சத்தமிடாது இருக்கவேண்டும் என்று குறிக்கும் சொல் . |
| சதுக்கபூதர் | நாற்சந்திக்கண் குடிகொண்டுள்ள பூதங்கள் . |
| சதுக்கம் | நான்கு தெருக்கள் கூடுமிடம் , நாற்சந்தி ; சந்து ; தலையிற் கட்டும் உருமால் . |
| சதுக்கல் | வழுக்கல் . |
| சதுட்டயம் | நான்கு மடங்குகொண்டது ; கேந்திரம் . |
| சதுட்பாதம் | நாற்கால் விலங்கு ; நாய் ; கரணம் பதினொன்றனுள் அமாவாசையின் முற்பகுதியில் நிகழும் காலக்கூறு . |
| சதவுருத்திரம் | உருத்திரமூர்த்திக்கு உரிய வேத மந்திரம் . |
| சதளக்காரன் | பெருங்குடும்பக்காரன் . |
| சதளம் | கூட்டம் . |
| சதனம் | இலங்கையில் வழங்கும் செப்பு நாணயம் ; வீடு . |
| சதா | எப்பொழுதும் ; மரக்கலம் ; பழுது ; தாமதம் . |
| சதாக்கினி | தேள் . |
| சதாகதி | இடைவிடாமல் இயங்கும் காற்று ; சூரியன் . |
| சதாகாலம் | எப்பொழுதும் . |
| சதாங்கம் | தேர் . |
| சதாசர்வகாலம் | எப்பொழுதும் . |
| சதாசாரம் | நல்லொழுக்கம் . |
| சதாசிவதத்துவம் | சுத்த தத்துவங்கள் ஐந்தனுள் ஒன்றாகவும் சாதாக்கியத்துக்கு இடமாகவும் ஞானமுங் கிரியையும் ஒத்து நிற்கும் நிலை . |
| சதாசிவம் | ஐந்து கர்த்தாக்களுள் முதல்வராய் உயிர்களுக்கு அருள் செய்யும்பொருட்டுச் சிவன் மேற்கொள்ளும் மூர்த்தம் ; உருவாய் விளங்குதற்குமுன் உயிர்களின்பொருட்டுச் சிவன் மேற்கொள்ளும் அருவுருவாகிய மூர்த்தம் . |
| சதாசிவன் | அநுக்கிரக சிவமூர்த்தி . |
| சதாசேர்வை | எப்பொழுதும் ஊழியம் செய்கை . |
| சதாட்டகம் | நூற்றெட்டு . |
| சதாபடம் | எருக்கஞ்செடி . |
| சதாபதி | என்றுமுள்ள கடவுள் ; மரவட்டை . |
| சதாபலம் | எலுமிச்சைமரம் . |
| சதாபிடேகம் | எண்பது ஆண்டுக்கு மேற்பட்டு வாழ்ந்து ஆயிரம்பிறை கண்டவர்க்குச் செய்யும் சடங்கு . |
| சதாபுசம் | வண்டுவகை . |
| சதாபுட்பம் | வெள்ளெருக்கு ; முல்லை . |
| சதாபுட்பி | காண்க : சதாபடம் . |
| சதாபூடம் | காண்க : சதாபடம் . |
| சதாமூர்க்கம் | பாம்புகொல்லிப்பூண்டு , காண்க : அருவதா . |
| சதாமூலம் | கொடிவகை . |
| சதாய்த்தல் | கேலிபண்ணுதல் , எள்ளுதல் . |
| சதாயுசு | முதிர்ந்தவன் ; நூறுவயதுள்ளோன் . |
| சதாரம் | நூறு முனைகளையுடைய வச்சிரப் படை . |
| சதாவிருத்தி | சத்திரம் முதலியவற்றில் வழிப்போக்கர் முதலானவர்க்குத் தினந்தோறும் அளிக்கும் உணவுப்பொருள் . |
| சதாவுதல் | பழுதாதல் . |
| சதாவேரி | காண்க : சதாமூலம் . |
| சதானந்தம் | நிலையான மகிழ்ச்சி . |
| சதி | வஞ்சனை ; சோறு ; தீயுண்டாக்கும கருவி ; சீக்கிரம் ; தாளவொத்து ; கற்புடையாள் ; உரோகிணி ; பார்வதி ; இறந்த கணவனோடு மனைவி உடன்கட்டையேறுதல் ; வட்டம் ; கூட்டமாய்ச் செல்லுதல் . |
| சதிகாரன் | மோசக்காரன் . |
| சதிகொலை | படுகொலை . |
| சதிங்கி | கப்பற்பாயின் மூலைகளைப் பாய்மரத்தின் மேலாக இழுத்துக் கட்டுவதற்கு உதவுங் கருவி . |
| சதித்தல் | அழித்தல் ; வஞ்சித்தல் . |
| சதிபதி | சிவன் ; கணவன்மனைவியர் . |
| சதிபாய்தல் | நாட்டியமாடுதல் . |
| சதிபுருடநியாயம் | கணவன்மனைவியரிடையே உள்ள உரிமை . |
| சதிமானம் | வஞ்சனை . |
| சதிமோசம் | படுமோசம் . |
| சதியன் | மோசக்காரன் , தீயோன் . |
| சதியாலோசனை | வஞ்சக ஆலோசனை , தீய அறிவுரை . |
| சதியோசனை | வஞ்சக ஆலோசனை , தீய அறிவுரை . |
| சதிர் | திறமை ; பெருமை ; பேறு ; அழகு ; நிலைமை ; குறைந்த விலை ; செட்டு , சிக்கனம் ; எல்லை ; நாட்டியம் ; பெரும்பயன் அளிக்கும் சிறு முயற்சி . |
| சதிர்க்கச்சேரி | நாட்டியக் கச்சேரி . |
| சதிர்க்கிராமம் | எல்லைப்புறத்திலுள்ள ஊர் . |
| சதிரம் | கக்கரிக்கொடிவகை ; நேர்கோணம் உள்ளதும் அளவொத்த நான்கு எல்லை வரம்புடையதுமான உருவம் ; உடல் . |
| சதிராட்டம் | நாட்டியம் . |
| சதிரி | திறமையுடையவள் . |
| சதவல் | சதுப்புநிலம் ; குப்பை . |
| சதவீரியம் | வெள்ளறுகம்புல் |
| சதவீரு | காண்க : மல்லிகை . |
| சதமுனைஇடி | காண்க : சத்தாரை . |
| சதமூலை | கொடிவகை . |
| சதயம் | ஒரு நட்சத்திரம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 418 | 419 | 420 | 421 | 422 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சதமுனைஇடி முதல் - சதுட்பாதம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, எப்பொழுதும், நான்கு, சதாபடம், சிவன், ஆலோசனை, மோசக்காரன், வஞ்சக, எல்லை, நாட்டியம், கருவி, அறிவுரை, கொடிவகை, மூர்த்தம், மேற்கொள்ளும், சதாமூலம், சொல், அளிக்கும், வஞ்சனை

