முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » சத்தவருக்கம் முதல் - சத்தியோசாதம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - சத்தவருக்கம் முதல் - சத்தியோசாதம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| சத்திதரன் | முருகன் ; வேற்படையை உடையவன் . |
| சத்திதீட்சை | வேண்டும் சாதனங்களையும் கிரியைகளையும் குரு தமது பாவனையால் செய்துகொள்ளும் ஔத்திரி தீட்சைவகை . |
| சத்திநாதம் | பொன்னிறம் ; பொன்னிமிளை ; ஏமாப்பிரகம் . |
| சத்திநிபாதம் | பக்குவமுடைய ஆன்மாக்களிடம் திருவருள் பொருந்துதல் . |
| சத்திநிபாதன் | திருவருள் பதியப்பெற்றவன் . |
| சத்திப்பு | கக்கல் , வாந்தி . |
| சத்திபீடம் | சத்தியின் நிலைபேறுடைய ஆலயம் . |
| சத்திபூசை | காண்க : சக்திபூசை . |
| சத்திமத்து | ஞானவதி , காண்க : சக்திதீட்சை . |
| சத்திமான் | சத்தியையுடையோன் , ஆற்றல் படைத்தவன் ; காரியத்திற்குத் தகுதியாகும் படி சுத்தமாயை நோக்கி நிற்கும் சிவன் ; சிவன் நோக்கி நின்றவழிக் காரியப்படுதற்குத் தகுதியாகும் சுத்த மாயையின் பகுதி . |
| சத்திமுகம் | அரசனது ஆணைப்பத்திரம் . |
| சத்தியசந்தன் | உண்மை பேசுபவன் . |
| சத்தியஞ்செய்தல் | பிரமாணம் பண்ணுதல் . |
| சத்தியஞானம் | மெய்யுணர்வு . |
| சத்தியநிருவாணம் | பிறவியறுத்தல் ; மாணாக்கனை உடனே வீடுபேறு எய்துவிக்கும் நிருவாண தீட்சைவகை . |
| சத்தியப்பிரமாணம் | சத்தியப்பிரமாணிக்கம் , சத்தியஞ்செய்கை . |
| சத்தியப்பொருள் | உள்பொருள் . |
| சத்தியம் | உண்மை ; பிரமாணம் , துக்கம் , துக்கோற்பத்தி , துக்க நிவாரணம் , துக்க நிவாரணமார்க்கம் ஆகிய நான்கு வகைப்பட்ட பௌத்த தத்துவங்கள் ; குறிஞ்சாக்கொடி . |
| சத்தியம்பண்ணுதல் | காண்க : சத்தியஞ்செய்தல் . |
| சத்தியயுகம் | கிரேதாயுகம் , உண்மையே நிகழ்ந்த யுகம் . |
| சத்தியலோகம் | மேலேழு உலகத்துள் பிரமன் வசிக்கும் உலகம் . |
| சத்தியவசனம் | உண்மைமொழி ; உண்மை பேசுகை . |
| சத்தியவந்தன் | காண்க : சத்தியசந்தன் . |
| சத்தியவாசகம் | காண்க : சத்தியவசனம் . |
| சத்தியவாதி | காண்க : சத்தியசந்தன் . |
| சத்தியவான் | உண்மையே பேசுபவன் ; சாவித்திரியின் கணவன் . |
| சத்தியவிரதன் | உண்மை பேசுதலையே விரதமாக உடையவன் ; தருமபுத்திரன் . |
| சத்தியவேதம் | மெய்வேதம் , விவிலிய நூல் . |
| சத்தியானிருதம் | மெய்யும் பொய்யும் கலந்தது ; வாணிகத் தொழில் . |
| சத்தியோசாதம் | சிவபிரானுடைய ஐம்முகங்களுள் மேற்கு நோக்கிய முகம் ; ஒரு சைவ மந்திரம் . |
| சத்தவருக்கம் | நெல்லி , வெட்டிவேர் இலாமிச்சைவேர் , சடாமாஞ்சில் , இலவங்கம் , ஏலம் , திராட்சை என்னும் ஏழுவகை மருந்துப் பொருள்கள் . |
| சத்தவிடங்கத்தலம் | தியாகராசர் கோயில் கொண்டுள்ள ஆரூர் , நாகை , நள்ளாறு , மறைக்காடு , காறாயில் , வாய்மூர் , கோளிலி என்னும் ஏழு தலங்கள் . |
| சத்தன் | ஆற்றலுடையவன் ; அருவத் திருமேனி கொண்டசிவன் . |
| சத்தாமாத்திரம் | கேவலம் உள்ளதாயிருக்கை . |
| சத்தாய்த்தல் | தொந்தரவுசெய்தல் ; எள்ளுதல் . |
| சத்தார்த்தம் | சொற்பொருள் . |
| சத்தாவத்தை | சீவான்மாவுக்கு நிகழக்கூடிய அறியாமை , ஆவரணம் , விட்சேபம் , பரோட்சஞானம் , அபரோட்ச ஞானம் , சோகநிவர்த்தி , தடையற்ற ஆனந்தம் என்னும் ஏழுவகை நிலைகள் . |
| சத்தாவரணம் | திருவிழா முடிவில் சுவாமி பிராகாரத்துக்குள்ளேயே ஏழுதரஞ் சுற்றுகை . |
| சத்தி | ஆற்றல் ; பிரபுசத்தி , மந்திரசத்தி , உற்சாக சத்தி ஆகிய மூவகை அரசர் ஆற்றல்கள் ; மூன்று பெருங்கொடி ; கொடி நாட்டுங் குழி ; சிவனது அருள் ; உமை ; சத்திதத்ததுவம் ; ஞானவதி ; வேல் ; சூலம் ; சொல்லாற்றல் ; கந்தகம் ; நெல்லிக்காய்க் கந்தகம் ; நீர்முள்ளி ; வாந்திசெய்கை ; வேம்பு ; கொம்மட்டி ; பேய்ப்புடல் ; விருந்து ; குடை ; இசைச்செய்யுள் . |
| சத்திக்குடம் | மாளிகைமேல் வைக்கப்படும் சூலம் நாட்டிய குடம் . |
| சத்திக்கூற்றோன் | நவச்சாரம் . |
| சத்திக்கொடி | தாடிமஞ்சம் என்னுங் கொடிவகை . |
| சத்திகம் | குதிரை . |
| சத்திகர் | கடவுளருளால் அற்புதஞ் செய்வோர் ; தேவதூத வகையினர் . |
| சத்திகுருநாதன் | கஞ்சா . |
| சத்திகோணம் | பார்வதிதேவியைக் குறிப்பதாக வரையும் கோணம் . |
| சத்திசாரணை | மூக்கிரட்டைக்கொடி . |
| சத்திசெய்தல் | வாந்தியெடுத்தல் . |
| சத்தித்தல் | ஒலித்தல் ; கக்குதல் . |
| சத்திதத்துவம் | சுத்த தத்துவங்களுள் ஒன்றாய்ச் சிவனது வினையாற்றலுக்கு இடமாய்ச் சுத்தமாயை செயற்படுவதாயுள்ள விருத்தி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 416 | 417 | 418 | 419 | 420 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்தவருக்கம் முதல் - சத்தியோசாதம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, உண்மை, சத்தியசந்தன், என்னும், சத்தியவசனம், உண்மையே, ஆகிய, துக்க, ஏழுவகை, கந்தகம், சூலம், சிவனது, சத்தி, பிரமாணம், பேசுபவன், தகுதியாகும், ஆற்றல், ஞானவதி, தீட்சைவகை, சுத்தமாயை, நோக்கி, திருவருள், உடையவன், சுத்த, சிவன், சத்தியஞ்செய்தல்

