தமிழ் - தமிழ் அகரமுதலி - அரிகயிறு முதல் - அரிமணல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அரிசம் | அமாவாசை மிகுதியாகவும் பிரதமை குறைவாகவும் கூடியிருக்கும் நாள் ; மகிழ்ச்சி ; மிளகு . |
| அரிசயம் | சரக்கொன்றை ; எலுமிச்சை . |
| அரிசலம் | சரக்கொன்றை ; எலுமிச்சை . |
| அரிசனம் | காண்க : மஞ்சள் ; தாழ்த்தப்பட்டோர் . |
| அரிசா | பெருங்குமிழமரம் . |
| அரிசி | உமி நீக்கப்பட்ட தானியவகை ; தானியமணி ; மூங்கிலரிசி முதலியன ; மஞ்சள் ; கடுக்காய் . |
| அரிசிக்கம்பு | கம்புப் பயிர்வகை . |
| அரிசிக்காடி | புளித்த கஞ்சி . |
| அரிசிப்பல் | சிறுபல் |
| அரிசிப்புல் | செஞ்சாமை ; காண்க : மந்தங்காய்ப்புல் . |
| அரிசு | மிளகு ; வேம்பு . |
| அரிட்டம் | கேடு ; பிள்ளை பெறும் இடம் ; நன்மை ; சாக்குறி ; மிளகு ; வெள்ளுள்ளிப் பூண்டு ; கடுகுரோகிணிப் பூண்டு ; வேப்பமரம் ; மோர் ; கள் ; முட்டை ; காகம் . |
| அரிட்டித்தல் | கொல்லல் . |
| அரிட்டை | தீங்கு ; கடுகுரோகிணிப் பூண்டு . |
| அரிடம் | காண்க : அரிட்டம் . |
| அரிணம் | மான் ; யானை ; பொன் ; சந்தனம் ; வெண்மை ; சிவப்பு . |
| அரிணி | அழகிய பெண் ; பெண்மான் ; அப்சரசுகளுள் ஒரு சாரார் ; பச்சை நிறத்தினள் ; வஞ்சிக்கொடி . |
| அரிணை | கள் . |
| அரித்தல் | தினவெடுத்தல் ; மேய்தல் ; கொழித்தெடுத்தல் ; தூசு போக்கல் ; கூட்டுதல் ; நீர் அறுத்துச் செல்லுதல் ; நீரில் கழுவிப் பிரித்தல் ; பூச்சி தின்னுதல் ; வருத்துதல் ; இடைவிடுதல் ; சிறிது சிறிதாகக் கவர்தல் . |
| அரித்திரம் | மஞ்சள் ; பொன்னிறம் ; சுக்கான் . |
| அரித்திராபம் | மஞ்சள் ; பொன்னிறம் ; சுக்கான் . |
| அரித்து | பசுமை ; பசும்புல் ; பசும்புரவி ; சிங்கம் ; சூரியன் . |
| அரித்தை | நடுக்கம் ; துன்பம் . |
| அரித்தை | (வி) அரித்தாய் எனப் பொருள்படும் ஒரு முன்னிலை வினைமுற்று . |
| அரிதகி | காண்க : கடுக்காய் . |
| அரிதட்டு | சல்லடை . |
| அரிதம் | பசும்புரவி ; மஞ்சள் ; பூமி . |
| அரிதல் | அறுத்தல் . |
| அரிதாட்புள்ளி | கதிர் அறுத்த தாளைக்கொண்டு கணிக்கும் தானிய மதிப்பு . |
| அரிதாரம் | தாளகபாடாணம் ; கத்தூரி ; மஞ்சள் ; திருமகள் . |
| அரிதாலம் | பொன்னரிதாரம் ; மஞ்சள் நிறமான ஒருவகைப் புறா . |
| அரிதாள் | கதிரறுத்த தாள் ; திருமால் திருவடி . |
| அரிதாளம் | நவதாளத்துள் ஒன்று ; பொன்னரி தாரம் . |
| அரிதினம் | ஏகாதசி . |
| அரிது | அருமை ; பசுமை . |
| அரிதொடர் | தொட்டால் கையை அரியும் சங்கிலிப் பொறி . |
| அரிந்தமன் | பகைவரையடக்குவோன் ; திருமால் . |
| அரிநூற்பொறி | தொட்ட கையை அறுக்கும் நூற்பொறி . |
| அரிப்பரித்தல் | கொழித்து எடுத்தல் . |
| அரிப்பறை | செவிப்பறையைத் தாக்கும் ஒலியையுடைய பறை . |
| அரிப்பன் | காண்க : அரிப்புக்காரன் . |
| அரிப்பனி | இடைவிட்ட துளி . |
| அரிப்பிரியம் | கடம்பு ; கடுகுரோகிணி ; சங்கு . |
| அரிப்பிரியை | திருமாலால் விரும்பப்பட்டவள் , திருமகள் . |
| அரிப்பு | பிரித்தெடுக்கை ; குற்றம் ; சினம் ; தினவு . |
| அரிப்புக்காரன் | அரித்துப் பொருள் தேடுவோன் . |
| அரிப்புக்கூடை | சல்லடை . |
| அரிப்புழுக்கல் | அரிசிச்சோறு . |
| அரிப்பெட்டி | சல்லடை . |
| அரிபாலுகம் | தக்கோலச்செடி . |
| அரிமஞ்சரி | குப்பைமேனிப் பூண்டு . |
| அரிமணல் | நுண்மணல் . |
| அரிகயிறு | தொட்ட கையை அரியும் நூற்பொறி . |
| அரிகரகுமரன் | ஐயனார் |
| அரிகரபுத்திரன் | ஐயனார் |
| அரிகரன் | திருமாலும் சிவனும் கூடிய மூர்த்தி . |
| அரிகல் | மேருமலை . |
| அரிகால் | காண்க : அரிதாள் . |
| அரிகிணை | மருதநில வாத்தியம் . |
| அரிகுரல் | கரகரத்த குரல் . |
| அரிகூடம் | கோபுரவாயில் மண்டபம் . |
| அரிகேசரி | பாண்டிய மன்னரின் பட்டப்பெயர் . |
| அரிச்சாவி | காண்க : அரிசா . |
| அரிச்சிகன் | சந்திரன் . |
| அரிச்சுவடி | அகரச் சுவடி என்பதன் மரூஉ ; பிள்ளைகளின் தொடக்க நூல் ; எழுத்துக் கற்பிக்கும் புத்தகம் ; அரிவரியேடு ; நெடுங்கணக்கு எழுதப்பட்ட புத்தகம் . |
| அரிசந்தனம் | தேவருலக ஐந்து மரங்களுள் ஒன்று ; செஞ்சந்தனம் ; தாமரைப் பூந்தாது ; மஞ்சள் ; நிலவு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 40 | 41 | 42 | 43 | 44 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரிகயிறு முதல் - அரிமணல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், மஞ்சள், காண்க, பூண்டு, மிளகு, கையை, சல்லடை, அரிதாள், திருமால், ஒன்று, தொட்ட, ஐயனார், புத்தகம், அரிப்புக்காரன், நூற்பொறி, திருமகள், அரியும், பசும்புரவி, கடுக்காய், அரிசா, எலுமிச்சை, சரக்கொன்றை, அரிட்டம், கடுகுரோகிணிப், பசுமை, சுக்கான், பொன்னிறம், அரித்தை

