தமிழ் - தமிழ் அகரமுதலி - அரிமணி முதல் - அருங்கலம் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
அருகுதல் | குறைதல் ; அருமையாதல் ; கிட்டல் ; பெருகுதல் ; அறிதல் ; குறிப்பித்தல் ; நோவுண்டாதல் ; அஞ்சுதல் . |
அருங்கதி | வீடுபேறு . |
அருங்கலச்செப்பு | அணிகலப்பேழை ; ஒரு சமணநூல் . |
அருங்கலம் | அணிகலன் ; அழகு செய்யும் பொருள் ; நற்காட்சி , நல்லறிவு , நல்லொழுக்கம் என்னும் மும்மணிகள் . |
அரிமுகவம்பி | சிங்கமுக ஓடம் . |
அரிய | அருமையான . |
அரியகம் | காற்சரியென்னும் அணி ; கொன்றை மரம் . |
அரியசம் | காண்க : சரக்கொன்றை . |
அரியசாரணை | மாவிலிங்கமரம் . |
அரியணை | சிங்காதனம் . |
அரியணைச்செல்வன் | அருகன் . |
அரியம் | வாத்தியம் . |
அரியமா | பன்னிரு ஆதித்தருள் ஒருவர் ; சூரியன் . |
அரியமான் | பிதிரர் தலைவன் . |
அரியல் | அரிதல் ; கள் . |
அரியாசம் | ஒரு மணப்பொருள் . |
அரியாசனம் | காண்க : அரியணை . |
அரியாயோகம் | அரைப்பட்டிகை ; மருந்து . |
அரியுண்மூலம் | கோரைக்கிழங்கு . |
அரியெடுப்பு | ஊர்த் தொழிலாளருக்குக் களத்தில் கொடுக்கும் இருகை அளவுத் தானியம் . |
அரியேறி | சிங்கத்தை ஊர்தியாகவுடைய கொற்றவை . |
அரியேறு | ஆண்சிங்கம் . |
அரில் | பிணக்கம் ; பின்னல் ; குற்றம் ; குரல் ; கூந்தல் ; சிறுகாடு ; மூங்கில் ; பாயல் ; பலா ; பரல் . |
அரிவரி | காண்க : நெடுங்கணக்கு . |
அரிவருடம் | ஒன்பது கண்டங்களுள் ஒன்று . |
அரிவாள் | வெட்டறுவாள் ; நெல் முதலியன அரியும் கருக்கறுவாள் . |
அரிவாள்மணை | காய்கறிகளை அரியும் கருவி . |
அரிவாள்முனைப்பூண்டு | ஒருவகைப் பூண்டு . |
அரிவிமயிர் | வீரர் வேல்நுனியில் அணியும் பறவை மயிர் . |
அரிவை | இருபது முதல் இருபத்தைந்து ஆண்டு வரை உள்ள பெண் . |
அரீடம் | கடுகுரோகிணிப் பூண்டு . |
அரு | உருவமற்றது ; கடவுள் ; மாயை ; சித்தபதவி ; அட்டை ; புண் . |
அருக்கம் | எருக்கஞ்செடி ; நீர்க்காக்கை ; சுக்கு ; செம்பு ; பளிங்கு ; சூரியன் ; சுருக்கம் . |
அருக்களித்தல் | அஞ்சுதல் ; அருவருத்தல் . |
அருக்களிப்பு | அருவருப்பு . |
அருக்கன் | சூரியன் ; இந்திரன் ; தமையன் ; எருக்கு ; சுக்கு |
அருக்காணி | அருமை ; அழுத்தம் . |
அருக்கு | காண்க : அருமை ; எருக்கு ; அருக்காணி ; அஞ்சுகை . |
அருக்கு | (வி) அருக்கு என் ஏவல் . |
அருக்குதல் | சுருக்குதல் ; காய்ச்சுதல் ; விலக்குதல் ; அருமை பாராட்டுதல் ; அழித்தல் . |
அருகசரணம் | அருகனைச் சரண்புகுதல் . |
அருகசனி | பேரேலப்பூண்டு . |
அருகனி | பிரண்டைக்கொடி . |
அருகணை | நுழைவாயிலின் பக்கம் . |
அருகந்தர் | அருக சமயத்தார் . |
அருகந்தாவத்தை | முத்திநிலை . |
அருகம் | சமணசமயம் ; தகுதி ; பக்குவம் ; அகில் ; அண்மை ; சீந்தில் . |
அருகர் | அருகசமயத்தவர் ; பக்குவ நிலையிலுள்ளவர் ; நிலையாமை ; அண்மை . |
அருகல் | அருகு ; அருமை ; குறைதல் ; சாதல் ; அணைதல் . |
அருகன் | அருகக் கடவுள் ; சமணசமயத்தான் ; தக்கவன் ; தோழன் ; பக்குவி . |
அருகன் எண்குணம் | கடையிலா அறிவு , கடையிலாக் காட்சி , கடையிலா ஆற்றல் , கடையிலா இன்பம் , பெயர் இன்மை , குலம் இன்மை , ஆயுவின்மை , அழியாவியல்பு . |
அருகன் எண்சிறப்பு | அருகதேவனுக்குரிய எட்டு மங்கலப் பொருள்கள் ; அவை : தூபதீபக் காட்சி , தேவதுந்துபி , தெய்வத்துவனி , சிங்காதனம் , பிண்டி , வெண்சாமரை , புட்பமாரி , மும்மைக்குடை . |
அருகனைத்தரித்தாள் | தருமதேவதை . |
அருகாழி | கால்விரல் மோதிரம் . |
அருகி | கள் . |
அருகி | (வி) சிறிது சிறிதாகி , குறைந்து . |
அருகியரத்தம் | பூனைக்காலிப் பூண்டு . |
அருகியல் | சாதிப் பெரும்பண்வகை . |
அருகியவழக்கு | குறைந்த வழக்கு , மிகுதியாய்ப் பயன்படுத்தப்படாதது . |
அருகு | அண்மை ; பக்கம் ; ஓரம் ; இடம் ; தீவட்டி . |
அருகு | (வி) அருகு என் ஏவல் ; குறை . |
அருகுகால் | கதவு நிலை . |
அரிமணி | மரகதம் . |
அரிமந்திரம் | சிங்கம்வாழ் குகை . |
அரிமருகன் | கணபதி ; முருகக்கடவுள் . |
அரிமா | சிங்கம் . |
அரிமாநோக்கம் | சிங்கத்தின் பார்வை ; முன்னும் பின்னும் பார்த்தல் ; சூத்திர நிலையுள் ஒன்று . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 41 | 42 | 43 | 44 | 45 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரிமணி முதல் - அருங்கலம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், அருகு, காண்க, அருமை, அருகன், அண்மை, அருக்கு, பூண்டு, சூரியன், கடையிலா, அருகி, ஏவல், இன்மை, காட்சி, பக்கம், சுக்கு, சிங்காதனம், அரியணை, அஞ்சுதல், ஒன்று, அரியும், எருக்கு, குறைதல், கடவுள், அருக்காணி