முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » அரசானம் முதல் - அரவக்கொடியோன் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - அரசானம் முதல் - அரவக்கொடியோன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அரத்தம் | குருதி ; சிவப்பு ; செம்பஞ்சு ; அரக்கு ; செங்குவளை ; செம்பரத்தை ; நீலோற்பலம் ; தாமரை ; நெற்றித்திலகம் ; பவளம் ; பொன் ; கடுக்காய் ; ஒத்த காதல் . |
| அரத்தன் | செவ்வாய்க் கோள் . |
| அரத்தை | ஒரு மருந்துச் செடிவகை ; முடக்கொற்றான் ; குறிஞ்சியாழிசை . |
| அரத்தோற்பலம் | செங்குவளைக் கொடி ; காண்க : செவ்வாம்பல் . |
| அரதனம் | இரத்தினம் ; மிருதபாடாணம் . |
| அரதனாகரம் | கடல் ; தனுக்கோடிக்குக் கிழக்கேயுள்ள கடல் . |
| அரதி | வேண்டாமை ; துன்பம் . |
| அரதேசி | உள்நாட்டுப் பிச்சைக்காரன் . |
| அரந்தை | துன்பம் , வருத்தம் ; குறிஞ்சிப்பண் ; நீர்நிலை . |
| அரப்பிரியை | சிவனுக்கு விருப்பமான உமை . |
| அரப்பு | எண்ணெய்க் குளியலுக்குத் தேய்த்துக் கொள்ளும் சிகைக்காய் முதலியன . |
| அரப்பொடி | இரும்புத்தூள் . |
| அரபி | காண்க : கடுக்காய் ; ஒரு நாடு ; ஒரு மொழி . |
| அரபுத்தமிழ் | அரபுச் சொற்களைத் தமிழில் எழுதிய குரான் ; அரபுச் சொற்கள் கலந்து வழங்கும் தமிழ் . |
| அரம் | இரும்பைத் தேய்க்கப் பயன்படும் கருவி ; விரைவு ; வண்டி ; பாதலம் ; தோல் . |
| அரம்பன் | குறும்பு செய்வோன் . |
| அரம்பு | குறும்பு ; விரும்பியதை நிறைவேற்றும் ஆற்றல் . |
| அரம்பை | காண்க : ஓமம் ; வாழைமரம் ; தேவருலகத்துள்ள நாடகமகளிருள் ஒருத்தி |
| அரம்பையர் | தெய்வமகளிர் . |
| அரமகள் | தெய்வப்பெண் . |
| அரமனை | காண்க : அரண்மனை . |
| அரமாதர் | தெய்வப்பெண்டிர் . |
| அரமாரவம் | காண்க : நாயுருவி . |
| அரமி | கடுக்காய் . |
| அரமியம் | அரண்மனை ; நிலாமுற்றம் ; பிரமிப்பூண்டு ; நாயுருவி . |
| அரயன் | அரசன் . |
| அரரி | கதவு . |
| அரலை | கழலைக்கட்டி ; கடல் ; மரற்செடி ; கற்றாழை ; விதை ; கொடுமுறுக்கு ; பொடிக்கல் ; கனி ; குற்றம் ; கோழை . |
| அரவக்கிரி | வேங்கடமலை . |
| அரவக்கொடியோன் | துரியோதனன் . |
| அரசானம் | அரசமரம் ; அரத்தைப் பூண்டு . |
| அரசி | அரசன் மனைவி ; அரசாளுபவள் . |
| அரசிகன் | சுவையறியாதவன் . |
| அரசியல் | அரசாளும் முறை ; காண்க : அரசங்கம் . |
| அரசிருக்கை | அரசன் வீற்றிருக்கும் அவை ; அரியணை . |
| அரசிலை | அரசமரத்தின் இலை ; விலங்குகளுக்கு இடும் அரசிலைக்குறி ; அரைமூடி . |
| அரசிறை | அரசாங்க வரி ; அரசர்க்கு அரசன் . |
| அரசு | அரசன் ; இராச்சியம் ; அரசியல் , அரசாட்சி ; அரசமரம் ; திருநாவுக்கரச நாயனார் . |
| அரசுகட்டில் | அரியணை . |
| அரசுவா | பட்டத்து யானை . |
| அரசோனம் | காண்க : வெள்ளைப்பூண்டு . |
| அரட்சி | மனக்குழப்பம் . |
| அரட்டடக்கி | செருக்குள்ளவர்களை அடக்குபவன் . |
| அரட்டம் | பாலைநிலம் ; பொழுதுவிடிகை . |
| அரட்டமுக்கி | காண்க : அரட்டடக்கி ; குறும்பர்களை ஒடுக்குபவன் ; திருமங்கையாழ்வார் . |
| அரட்டல்புரட்டல் | நோய் முற்றலால் நிகழும் நோவு . |
| அரட்டன் | குறும்பன் ; சிற்றரசன் ; மிடுக்கன் ; கொள்ளையடிப்பவன் ; வீண்பேச்சுப் பேசுவோன் . |
| அரட்டி | அச்சம் . |
| அரட்டு | ஆணவம் ; மிடுக்கு ; குறும்பர் ; குறும்பு ; அச்சம் . |
| அரட்டுதல் | அச்சுறுத்தல் . |
| அரட்டையடித்தல் | வீண்பேச்சுப் பேசுதல் . |
| அரண் | பாதுகாப்பு , காவல் ; கோட்டை ; சுற்றுமதில் ; காவற்காடு ; கவசம் ; வேலாயுதம் ; செருப்பு ; அழகு ; அச்சம் . |
| அரண்மணை | மதிலால் காவல் செய்யபட்ட மாளிகை ; அரசன் இருப்பிடம் . |
| அரணம் | அரண் , கொத்தளம் ; பாதுகாப்பு , காவல் ; கவசம் ; செருப்பு ; கருஞ்சீரகம் ; மஞ்சம் தொடுதோல் . |
| அரணம்வீசுதல் | கவசம் அணிதல் . |
| அரணி | முன்னைமரம் ; தீக்கடைகோல் ; நெருப்பு ; சூரியன் ; கவசம் ; கோட்டைமதில் ; வேலி ; காடு . |
| அரணித்தல் | காவல் செய்தல் ; அலங்கரித்தல் ; கடினப்படுதல் . |
| அரணியம் | காடு . |
| அரணியன் | காட்டிலிருப்பவன் ; அடைக்கலமானவன் . |
| அரணியா | காட்டுக் கருணைக்கிழங்கு . |
| அரணை | பல்லி போன்ற ஓர் உயிர்வகை , பாம்பரணை . |
| அரத்தகம் | செம்பஞ்சு . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 38 | 39 | 40 | 41 | 42 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரசானம் முதல் - அரவக்கொடியோன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, அரசன், காவல், கவசம், அச்சம், குறும்பு, கடுக்காய், கடல், செருப்பு, அரண், பாதுகாப்பு, வீண்பேச்சுப், காடு, அரசமரம், அரண்மனை, அரபுச், துன்பம், நாயுருவி, செம்பஞ்சு, அரியணை, அரசியல், அரட்டடக்கி

