முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » அருங்கலைவிநோதன் முதல் - அரும்பதம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - அருங்கலைவிநோதன் முதல் - அரும்பதம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அருந்ததி | வசிட்டரின் மனைவி ; ஒரு நட்சத்திரம் . |
| அருந்தல் | அருமை ; பருகுதல் . |
| அருந்திறல் | அரிய திறமை உடையவன் ; அரிய திறமை . |
| அருந்துதல் | உண்ணுதல் ; குடித்தல் ; விழுங்குதல் ; அனுபவித்தல் . |
| அருந்துதன் | வேதனை செய்வோன் . |
| அருந்துதி | காண்க : அருந்ததி . |
| அருநிலை | கடந்து செல்லற்கரிய நிலை ; ஆழமான நீர்நிலை . |
| அருநெல்லி | சிறுநெல்லிமரம் . |
| அருநெறி | செல்லுதற்கரிய வழி ; மனைவாயில் ; நரகம் ; பாலைவனம் . |
| அருப்பம் | அருமை ; அற்பம் ; துயரம் ; ஒரு நோய் ; திண்மை ; வழுக்குநிலம் ; மருதநிலத்தூர் ; மலைஅரண் ; காட்டரண் ; சோலை ; நெற்கதிரின் கரு ; தொடரிச் செடி ; கள் ; மோர் ; மா ; முதலில் முளைக்கும் மீசை ; பனி . |
| அருப்பலம் | அனிச்சமரம் . |
| அரும்பதம் | சிறந்த உணவு ; அரிய செவ்வி ; விளங்கற்கு அரிய சொல் . |
| அருங்கலைவிநோதன் | நூலாராய்ச்சியையே பொழுதுபோக்காக உடையவன் . |
| அருங்கிடை | கடும்பட்டினி ; நோய்வாய்ப்பட்டிருக்கை . |
| அருங்கு | அருமை . |
| அருங்கோடை | கடுவெயிற்காலம் ; முதுவேனில் ; வறட்சிக்காலம் . |
| அருச்சகன் | கோயில்பூசை செய்வோன் , பூசாரி . |
| அருச்சனை | காண்க : அர்ச்சனை . |
| அருச்சி | பூசி ; ஒளி ; தீக்கொழுந்து ; கதிர் . |
| அருச்சிக்கை | காண்க : அருச்சித்தல் . |
| அருச்சிகன் | சந்திரன் . |
| அருச்சித்தல் | பூசித்தல் ; கடவுளின் திருப்பெயர் சொல்லி மலர் முதலியன இடுதல் . |
| அருச்சுனம் | எருக்கஞ்செடி ; மருதமரம் ; புல் ; பொன் ; பந்து ; வெள்ளையரிசியோடு அறுகையும் சேர்த்து இடுகை ; வெண்மை ; மயில் . |
| அருச்சுனன் | ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை ; நெல் வகை ; பஞ்சபாண்டவருள் ஒருவன் ; கார்த்த வீரியன் . |
| அருச்சுனி | பசு ; உஷாதேவி ; ஓர் ஆறு ; அடிமைப் பெண் . |
| அருச்சை | பூசை . |
| அருசி | சுவையின்மை ; விருப்பின்மை . |
| அருஞ்சிறை | கடுங்காவல் ; நரகம் . |
| அருஞ்சுரம் | நிழலற்ற ; நீளிடம் . |
| அருஞ்சோதி | ஒருவகை நெல் . |
| அருட்குடையோன் | அருள் தன்மையைக் குடையாக உடையவன் ; அருகன் ; கடவுள் . |
| அருட்குறி | சிவலிங்கம் . |
| அருட்சித்தி | பாதரசம் . |
| அருட்செல்வம் | கருணையாகிய செல்வம் ; இரக்க உணர்வு ; கடவுளின் அருள் . |
| அருட்சோதி | கடவுள் ; கௌரிபாடாணம் . |
| அருட்டம் | கடுகுரோகிணி ; வேம்பு ; மிளகு . |
| அருட்டி | அச்சம் ; நடுக்கம் . |
| அருட்டுதல் | எழுப்புதல் ; அச்சுறுத்தல் ; மயக்குதல் . |
| அருட்பா | கடவுளின் அருள்பெற்றோர் பாடிய பாடல்கள் ; இராமலிங்க அடிகள் அருளிய பாடல்களின் தொகுதி . |
| அருட்புரி | குறிஞ்சியாழ்த் திறவகை . |
| அருணகிரி | திருவண்ணாமலை ; அருணகிரிநாதர் . |
| அருணம் | சிவப்பு ; பொன் ; செவ்வானம் ; சிந்தூரம் ; ஒரு மொழி ; ஒரு நாடு ; எலுமிச்சை ; முதிராத மாதுளை ; செம்மறி ஆடு ; யானை ; மான் ; நீர் ; செங்குட்டநோய் ; வெண்மை . |
| அருணமணி | மாணிக்கம் . |
| அருணவம் | கடல் . |
| அருணவூரி | இந்திரகோபப் பூச்சி . |
| அருணன் | சூரியன் ; சூரியனின் தேர்ப்பாகன் ; புதன் . |
| அருணாசலம் | திருவண்ணாமலை . |
| அருணி | மான்சாதிப் பெண் . |
| அருணினம் | நன்னாரி ; திருநாமப்பாலைக் கொடி . |
| அருணை | காண்க : அருணாசலம் . |
| அருணோதயம் | சூரியனின் தோற்றம் ; விடியற்காலம் . |
| அருத்தபாகம் | பாதிப் பங்கு . |
| அருத்தபாகை | வேத நூற்பொருள் வகை . |
| அருத்தம் | சொற்பொருள் ; கருத்து ; சாத்திரம் ; செல்வப் பொருள் ; பொன் ; விவகாரம் ; காரணம் ; முறை ; நீக்கல் ; பயன் ; பாதி ; குங்கிலியம் . |
| அருத்தயாமம் | காண்க : அர்(ரு)த்தசாமம் ; நடு இரவு . |
| அருத்தலக்கணை | காண்க : விட்டும் விடாத இலக்கணை . |
| அருத்தி | ஆசை ; விருப்பப் பொருள் ; செல்வன் ; இரவலன் ; பணியாளன் ; உண்பி ; கள் ; கூத்து . |
| அருத்தித்தல் | இரத்தல் ; வேண்டுதல் ; பாதியாக்கல் . |
| அருத்தியன் | விருப்பம் உடையவன் . |
| அருத்து | சொற்பொருள் . |
| அருத்துதல் | உண்பித்தல் ; நுகரச் செய்தல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 42 | 43 | 44 | 45 | 46 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அருங்கலைவிநோதன் முதல் - அரும்பதம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, உடையவன், அரிய, பொன், கடவுளின், அருமை, திருவண்ணாமலை, கடவுள், சூரியனின், அருள், அருணாசலம், பொருள், சொற்பொருள், பெண், நெல், நரகம், செய்வோன், அருச்சித்தல், சொல், வெண்மை, அருந்ததி, திறமை

