தமிழ் - தமிழ் அகரமுதலி - அங்காரக்கிரந்தி முதல் - அகதி வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| அகத்தடிமை | இறைவன் அருகிலிருந்து செய்யும் அணுக்கத் தொண்டு ; வீட்டுப் பணியாளர் . |
| அகத்தடியாள் | வீட்டு வேலைக்காரி . |
| அகத்தமிழ் | அகத்திணைபற்றிய இலக்கியம் . |
| அகத்தாழம் | மாலைப்பொழுது . |
| அகத்தான் | உள்ளிடத்தில் இருப்பவன் ; மனத்தில் தங்கி இருப்பவன் ; இல்வாழ்வான் ; உறவினன் ; முற்றுகைக்குட்பட்டவன் ; மதில்காத்து உள்ளிருப்பவன் . |
| அகத்திடுதல் | செருகுதல் ; உள்ளிடுதல் ; கையால் உள்ளணைத்தல் . |
| அகத்திணை | அகவொழுக்கம் , உள்ளொழுக்கம் ; கணவன் மனைவியரிடையே உள்ளத்தே நிகழும் இன்பவொழுக்கம் ; குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை எனப்படும் ஐந்திணை ஒழுக்கம் . |
| அகத்திணைப்புறம் | இன்ப வாழ்க்கைக்கு மாறுபட்டது ; கைக்கிளை பெருந்திணை ஒழுக்கங்கள் . |
| அகத்தியம் | கட்டாயம் ; அகத்தியர் செய்த ஓர் இலக்கண நூல் . |
| அகத்தியல் | உள்ளத்து இயற்கை , மனப்பாங்கு . |
| அகத்திருத்துவம் | செயலின்றி நிற்கும் கடவுள் தன்மை . |
| அகத்தீடு | உளளீடு ; எண்ணம் ; அன்பு ; கையால் உள்ளணைக்கை ; உள்ளடக்குதல் . |
| அகத்துரைப்போன் | கடவுள் ; மனச்சாட்சி . |
| அகத்துவங்கொள்ளுதல் | அடிப்படைக்காகத் தோண்டுதல் . |
| அகத்துழிஞை | கோட்டையின் அகத்து உள்ளாரைப் புறத்தார் வெல்லும் புறத்துறை . |
| அகத்தொண்டர் | வீட்டுப்பணிபுரிவோர் . |
| அகத்தோர் | உள்ளிருப்போர் ; ஊரார் ; ஒத்த உள்ளத்தராம் நண்பர் . |
| அகதகாரன் | மருத்துவன் . |
| அகதம் | அழிவற்றது ; குளிகை ; மருந்து ; இன்பம் . |
| அகதன் | நோயிலி . |
| அகதி | போக்கற்றவன் , கதியிலி ; வறியவன் ; தில்லைமரம் ; வேலமரம் . |
| அங்காரக்கிரந்தி | ஆணவமறைப்பு ; தத்துவங்களைத் தான் எனக் கொள்ளும் உயிரின் தொடர்பு . |
| அகங்காரம் | ' நான் ' என்னும் செருக்கு , ஆணவம் ; உட்கரணம் நான்கனுள் ஒன்று . |
| அகங்காரி | செருக்குள்ளவன் ( ள்) . |
| அகங்காழ் | காண்க : அகக்காழ் . |
| அகங்கை | ( அகம் - கை ) உள்ளங்கை . |
| அகச்சமயம் | சைவசமயத்தின் உட்பிரிவுகள் ; அவை : பாடாணவாத சைவம் , பேதவாத சைவம் , சிவசமவாத சைவம் , சிவசங்கிராந்தவாத சைவம் , ஈசுர அவிகாரவாத சைவம் , சிவாத்துவித சைவம் . |
| அகச்சுட்டு | சொல்லின் முதனிலையாய்ப் பிரிவின்றி இணைந்து நிற்கும் சுட்டு . |
| அகச்சுவை | அகப்பொருள் நெறிக்குரிய சுவை ; சத்துவம் முதலிய முக்குணம் வெளிப்பட நடிக்கும் நடிப்பு . |
| அகசன் | கேது என்னும் கோள் . |
| அகசியம் | ஏளனச்சிரிப்பு ; வேடிக்கை ; பகடி . |
| அகசு | பொழுது ; பகல் ; இராப்பகல் கொண்டநாள் . |
| அகசை | மலையில் பிறந்தவள் , பார்வதி . |
| அகடச்சக்கரம் | வயிற்றைச் சுற்றிக் கட்டும் உதரபந்தனம் என்னும் அணி , இடுப்பணி , அரைப்பட்டிகை ; கொடுங்கோல் மன்னன் . |
| அகடம் | பொல்லாங்கு ; அநீதி ; கபடம் . |
| அகடியம் | பொல்லாங்கு ; அநீதி ; கபடம் . |
| அகடவிகடம் | சிரிக்கவைக்கும் பேச்சு ; வேடிக்கை ; தட்டுமாற்று ; இரண்டகம் ; வஞ்சகம் ; தந்திரம் . |
| அகடிதகடனாசாமர்த்தியம் | செய்யக்கூடாதனவற்றைச் செய்விக்கும் வன்மை . |
| அகடிதம் | நிறைவேற்றற்கரியது . |
| அகடு | உள் ; வயிறு ; நடு ; மேடு ; நடுவுநிலை ; பொல்லாங்கு . |
| அகடூரி | வயிற்றால் ஊர்ந்து செல்வது , பாம்பு . |
| அகண் | அண்மை , பக்கம் . |
| அகண்டபரிபூரணம் | எங்கும் நிறைந்திருக்கை ; வேறுபாடின்றி எங்கும் நிறைந்திருக்கும் பரம் பொருள் . |
| அகண்டம் | துண்டிக்கப்படாதது ; பிளவுபடாதது ; முழுமை , முழுப் பொருள் ; பெரிய அகல்விளக்கு ; கடவுள் . |
| அகண்டிதம் | துண்டிக்கப்படாதது ; பிளவுபடாதது ; முழுமை , முழுப் பொருள் ; பெரிய அகல்விளக்கு ; கடவுள் . |
| அகண்டதீபம் | எப்பொழுதும் எரியும் விளக்கு , நந்தாவிளக்கு . |
| அகண்டாகண்டன் | பரம்பொருள் ; எதற்கும் அஞ்சாதவன் . |
| அகண்டாகாரஞானம் | முற்றறிவு . |
| அகண்டாகாரம் | அளவுபடாத வடிவம் , பெருவடிவம் ; பெருவெளி . |
| அகண்டி | ஓர் இசைக்கருவி . |
| அகண்டிதன் | பிளவுபடா இயல்பினன் ; முழுமையன் , கடவுள் . |
| அகணி | உள் ; உட்பட்டது ; நம்பத்தக்க நட்பினர் ; தெங்கு , பனை முதலியவற்றின் மட்டைகளின் அகவாயிலிருந்து உரிக்கும் நார் ; வயல் ; மருதநிலம் . |
| அகணிப்பாய் | மூங்கிலாலான பாய் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அங்காரக்கிரந்தி முதல் - அகதி வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சைவம், கடவுள், பொல்லாங்கு, என்னும், பொருள், பிளவுபடாதது, துண்டிக்கப்படாதது, முழுமை, பெரிய, முழுப், அகல்விளக்கு, அநீதி, நிற்கும், கையால், வேடிக்கை, இருப்பவன், கபடம், எங்கும்

