முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » கொடுப்புப்பல் முதல் - கொண்டல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - கொடுப்புப்பல் முதல் - கொண்டல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கொடும்பு | சிம்பு ; தவிட்டுப்பொடி ; கொடுமை . |
| கொடும்புரி | கொடுமுறுக்கு ; கடுஞ்சூழ்ச்சி . |
| கொடும்புலி | சிங்கம் ; சிங்கராசி . |
| கொடும்பை | நீர் அருவி ; குன்றம் ; குளம் ; தூம்பு ; தாம்பு ; பச்சிலைப் பூண்டுவகை ; கொடும்பாளுர் . |
| கொடுமடி | பண்டம் இடுதற்கு வளைத்துக் கட்டிய மடி . |
| கொடுமரம் | வில் ; தனுராசி ; ஏணிப்பழு . |
| கொடுமலையாளம் | அரிதிற் பொருள்படும் மலையாள மொழிவகை ; கொடுமலையாளம் பேசும் மலைநாட்டு பகுதி . |
| கொடுமுடி | மலையினுச்சி ; கோபுரத்தினுச்சி ; உப்பரிகை ; பாண்டிக் கொடுமுடி . |
| கொடுமுடிச்சு | அவிழ்க்க இயலாத முடிச்சு ; கேடு சூழும் சூழ்ச்சி . |
| கொடுமுறுக்கு | நூலில் ஏறிய அதிக முறுக்கு . |
| கொடுமூலை | எளிதில் அறிந்து செல்ல முடியாத மூலையிடம் . |
| கொடுமை | கடுமை ; முருட்டுத்தன்மை ; தீமை ; வளைவு ; மனக்கோடடம் ; அநீதி ; பாவம் ; வேண்டாத சொல் . |
| கொடுமைசொல்லுதல் | கடுமையான சொல்லால் பேசுதல் . |
| கொடுமைத்தானம் | இலக்கினத்திற்கு எட்டாமிடம் . |
| கொடுவரி | புலி . |
| கொடுவருதல் | கொண்டுவருதல் . |
| கொடுவாய் | வாள் முதலியவற்றின் வளைந்த வாய் ; குறளை ; பழிச்சொல் ; ஒரு மீன் வகை ; புலிவகை ; வாயினின்று வடியும் நீர் . |
| கொடுவாயிரும்பு | தூண்டில் முதலியவற்றிலுள்ள இரும்புக் கொக்கி . |
| கொடுவாள் | வளைந்த வாள் ; அறுவாள் ; மழு . |
| கொடுவினை | முற்பிறப்பிற் செய்த தீவினை . |
| கொடுவேலி | காண்க : கொடிவேலி . |
| கொடுவை | முருட்டுதனம் ; துட்டத்தனம் . |
| கொடூரம் | கொடுமை ; குரூரம் . |
| கொடை | ஈகம் , தியாகம் , ஈகை ; உதவிப்பொருள் ; கைக்கொண்ட ஆநிரையை இரவலர்க்கு வரையாது கொடுக்கும் புறத்துறை ; ஊர்த்தேவதைக்கு மூன்றுநாள் செய்யும் திருவிழா ; வசவு ; அடி . |
| கொடைக்கடம் | கொடையாகிய கடமை . |
| கொடைக்கை | கொடைகொடுக்கும் கை ; வீட்டின் முகடு . |
| கொடைநேர்தல் | மகளை மணஞ் செய்து கொடுக்க உடன்படுதல் ; தேவதைக்கு விழாச் செய்யத் தீர்மானித்தல் . |
| கொடைமடம் | அளவின்றிக் கொடுத்தல் . |
| கொடைமுடி | சரக்கொன்றை . |
| கொடைமை | கொடைத்தொழில் . |
| கொடையாளன் | ஈகையாளன் . |
| கொடையாளி | ஈகையாளன் . |
| கொடையெதிர்தல் | கொடுத்தலை மேற்கொள்ளுதல் ; கொடுத்ததைப் பெற்றுக்கொள்ளுதல் . |
| கொடையோன் | ஈகையுள்ளவன் . |
| கொடைவஞ்சி | போரில் வென்று கொண்ட பொருளைப் பாடிய பாணர்க்கு அரசன் பரிசாக அளிப்பதைக் கூறும் புறத்துறை . |
| கொடைவள்ளல் | அளவில்லாமற் பொருளைக் கொடுப்பவன் . |
| கொடைவினா | வினாவகையுள் ஒன்று , கொடுக்கும் நோக்கத்தோடு கேட்கும் வினா . |
| கொடைவீரம் | பிறருக்குத் தன்னை அளித்தல் . |
| கொண்கன் | கணவன் ; நெய்தல்நிலத்தலைவன் . |
| கொண்கானம் | கொங்கண நாட்டிலுள்ள மலை . |
| கொண்ட | ஓர் உவமச்சொல் . |
| கொண்டக்காரன் | மீன்பிடிப்போருள் ஒரு வகுப்பினன் . |
| கொண்டக்கிரி | ஒரு பண்வகை . |
| கொண்டகுளம் | எட்டிமரம் . |
| கொண்டங்கட்டிப் பாய்ச்சுதல் | அணைகட்டி மேட்டுநிலத்தில் நீர் பாய்ச்சுதல் . |
| கொண்டச்சாணி | நஞ்சறுப்பான் பூண்டு . |
| கொண்டம் | குறிஞ்சாக்கொடி ; நீர் பாய்ச்சுவதற்குத் தேக்கிய நீர்நிலை . |
| கொண்டல் | கொள்ளுதல் ; மேகம் ; காற்று ; கீழ்காற்று ; கிழக்கு ; மேடராசி ; கொண்டற்கல் ; மகளிர் விளையாட்டுவகை . |
| கொடுப்புப்பல் | கடைவாய்ப்பல் . |
| கொடுப்பை | பொன்னாங்காணிக்கீரை . |
| கொடுபடுதல் | கடன் முதலியன செலுத்தப்படுதல் . |
| கொடுபோதல் | கொண்டுசெல்லுதல் . |
| கொடும்பகல் | நண்பகல் . |
| கொடும்பனிக்காலம் | பனி மிகுந்துள்ள மாசி பங்குனி மாதங்கள் . |
| கொடும்பாடன் | கொடியன் , மிகுந்த தீவினையாளன் . |
| கொடும்பாடு | கொடுமைப்பாடு ; மாறுபாடு . |
| கொடும்பாவி | பஞ்சம் முதலியன உண்டான காலங்களில் அவை தீரும்படி ஊர்க்குச் சாந்தியாகத் தெருக்களில் கட்டியிழுத்து கொளுத்தப்படும் வைக்கோல் உருவம் ; தாம் வெறுப்பவர்களைப்போல் செய்யப்படும் பதுமை . |
| கொடும்பாவை | பஞ்சம் முதலியன உண்டான காலங்களில் அவை தீரும்படி ஊர்க்குச் சாந்தியாகத் தெருக்களில் கட்டியிழுத்து கொளுத்தப்படும் வைக்கோல் உருவம் ; தாம் வெறுப்பவர்களைப்போல் செய்யப்படும் பதுமை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 385 | 386 | 387 | 388 | 389 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கொடுப்புப்பல் முதல் - கொண்டல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், நீர், முதலியன, கொடுமை, தெருக்களில், கட்டியிழுத்து, சாந்தியாகத், ஊர்க்குச், தீரும்படி, கொளுத்தப்படும், உருவம், செய்யப்படும், பதுமை, வெறுப்பவர்களைப்போல், தாம், காலங்களில், வைக்கோல், பஞ்சம், வாள், வளைந்த, கொடுமுடி, கொடுமலையாளம், கொடுமுறுக்கு, கொடுக்கும், புறத்துறை, சொல், பாய்ச்சுதல், கொண்ட, ஈகையாளன், உண்டான

