முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » கொண்டல்வண்ணன் முதல் - கொண்டைப்பூ வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - கொண்டல்வண்ணன் முதல் - கொண்டைப்பூ வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கொண்டைக்குச்சு | தலைமயிரோடு பின்னித் தொங்கவிடுவதாய் இரண்டு மூன்று குச்சுகளையுடைய அணி ; கொண்டையிற் செருகும் ஊசிவகை . |
| கொண்டைக்குலாத்தி | காண்க : கொண்டலாத்தி . |
| கொண்டைக்கோல் | தலையிற் கொண்டையுள்ள கொம்பு ; ஆழத்திற்கு அறிகுறியாக நீரிடையில் நடுங்கோல் ; மகிழ்ச்சிக் குறியாக உயர்த்தி அசைக்கும் ஆடை கட்டிய கோல் . |
| கொண்டை குலைந்துபோதல் | அவமானப்படுதல் . |
| கொண்டைத்திருகு | மகளிர் தலையிலணியும் செவ்வந்திப்பூ வடிவினதான திருகாணிவகை . |
| கொண்டைப்பூ | மகளிர் தலையிலணியும் செவ்வந்திப்பூ வடிவினதான திருகாணிவகை . |
| கொண்டவன் | கணவன் . |
| கொண்டாட்டக்காரன் | உற்சாகமுள்ளவன் ; தோழன் . |
| கொண்டாட்டம் | பாராட்டுதல் ; மகிழ்ச்சி ; திருவிழா முதலிய சிறப்புகள் . |
| கொண்டாட்டு | சீராட்டு ; பாராட்டல் . |
| கொண்டாடுதல் | கூடிக்குலாவுதல் ; மெச்சுதல் ; பாராட்டுதல் ; திருவிழா முதலியன கொண்டாடுதல் . |
| கொண்டாரணியம் | நுழைய முடியாத பெருங்காடு . |
| கொண்டான் | மகளிர் விளையாட்டுவகை ; கணவன் . |
| கொண்டான்கொடுத்தான் | பெண் கொடுத்தும் எடுத்தும் சம்பந்தஞ் செய்தோர் . |
| கொண்டானடித்தல் | மகிழ்ச்சியால் கூத்தாடுதல் . |
| கொண்டி | பிறர் பொருள் முதலியவற்றைக் கொள்ளுதல் ; உணவு ; கப்பம் ; சங்கிலி மாட்டும் இரும்பு ; கொள்ளை ; மிகுதி ; அடங்காதவன் ; பரத்தை ; கதவுக்குடுமி ; களவு ; ஏர்க்கொழு முதலியவற்றைக் கொள்ளுதல் ; மன வருத்தம் ; பகைமை ; புறங்கூறுகை . |
| கொண்டிக்கதவு | குடுமிக்கதவு . |
| கொண்டிசொல்லுதல் | பகைமையால் கொடுமை பேசுதல் . |
| கொண்டித்தனம் | அடங்காத்தனம் . |
| கொண்டித்தொட்டி | பட்டிமாட்டை அடைக்கும்தொழுவம் . |
| கொண்டித்தொழு | பட்டிமாட்டை அடைக்கும்தொழுவம் . |
| கொண்டிபேசுதல் | குறைகூறுதல் ; பகைமையால் கொடுமை பேசுதல் ; கோட்சொல்லுதல் ; குற்றம் சுமத்திப் பேசுதல் . |
| கொண்டிமகளிர் | சிறைபிடிக்கப்பட்ட பெண்கள் ; பரத்தையர் . |
| கொண்டிமாடு | பட்டிமாடு . |
| கொண்டியம் | புறங்கூறுதல் ; குறளை . |
| கொண்டியாரம் | நிந்தை ; செருக்கு ; பிறர்செயலில் தலையிடுகை ; சிறப்பு . |
| கொண்டியோட்டி | தொழுவத்திற்குப் பட்டிமாட்டை ஓட்டிச் செல்வோன் . |
| கொண்டின்னி | தும்பைச்செடி . |
| கொண்டு | முதல் ; குறித்து ; மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு ; ஓர் அசைநிலை . |
| கொண்டுகண்மாறுதல் | நட்புக்கொண்டு புறக்கணித்தல் . |
| கொண்டுகூட்டு | பொருள்கோள் வகையுள் ஒன்று , செய்யுளடிகளில் உள்ள சொற்களை ஏற்ற இடங்களில் சேர்த்துப் பொருள் கொள்ளும் முறை . |
| கொண்டுகூற்று | அயலார் நேரிற் சொல்வதாகக் கூறும் மொழி . |
| கொண்டுகொடுத்தல் | பெண்னைக் கொண்டுங் கொடுத்துஞ் சம்பந்தஞ்செய்தல் . |
| கொண்டுசெல்லுதல் | எடுத்துப்போதல் ; நிருவகித்தல் . |
| கொண்டுநடத்துதல் | செயலை வருந்தியும் முடிவுவரை நடத்துதல் ; கொடுக்கல் வாங்கல் செய்தல் . |
| கொண்டுநிலை | குரவைக்கூத்தில் தலைவனது வரைவு வேண்டிப் பாடும் பாட்டு . |
| கொண்டுநிலைக் கூற்று | இறந்துபடாமல் தலைமகனைத் தாங்கிக் கூறுந் தோழியின் சொல் . |
| கொண்டுபோதல் | எடுத்துக்கொண்டு செல்லுதல் ; அழைத்துச் செல்லுதல் ; கவர்ந்துசெல்லுதல் . |
| கொண்டுவிற்றல் | அப்போதைக்கப்போது வாணிகத்துக்காகப் பண்டங்களை வாங்கி விற்றல் . |
| கொண்டேசன் | சுக்கு . |
| கொண்டை | மகளிர் கூந்தலைக் திரளாகச் சேர்த்துக் கட்டும் முடிவகை ; சொருக்கு ; குழந்தைகளுக்கு உச்சிக்கொண்டை கட்ட உதவும் நார்வளையம் ; பறவைச் சூட்டு ; ஆணி முதலியவற்றின் தலை ; இலந்தைப் பழம் . |
| கொண்டைக்கரிச்சான் | உச்சிச்சூட்டுள்ள கரிக்குருவி . |
| கொண்டைக்காரன் | தலைமயிரைத் திரளாக முடித்து கட்டுபவன் ; மேன்மையுடையவன் ; செருக்கன் . |
| கொண்டைக்கிரி | முல்லைநிலப் பண்வகை . |
| கொண்டைக்கிளாறு | காண்க : கொண்டலாத்தி . |
| கொண்டல்வண்ணன் | மேக நிறமுடைய திருமால் . |
| கொண்டலாத்தி | ஒரு குருவிவகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 386 | 387 | 388 | 389 | 390 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கொண்டல்வண்ணன் முதல் - கொண்டைப்பூ வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், மகளிர், பேசுதல், பட்டிமாட்டை, கொண்டலாத்தி, கொள்ளுதல், முதலியவற்றைக், பொருள், பகைமையால், கொடுமை, கொண்டாடுதல், செல்லுதல், அடைக்கும்தொழுவம், பாராட்டுதல், தலையிலணியும், கொண்டை, காண்க, செவ்வந்திப்பூ, வடிவினதான, சொல், கணவன், திருகாணிவகை, திருவிழா

