முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » கொட்டைப்பயறு முதல் - கொடிமுந்திரிகை வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - கொட்டைப்பயறு முதல் - கொடிமுந்திரிகை வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
கொடிஞ்சிற்பலகை | எருதுகளைக்கொண்டு ஆற்றுக்கால் தோண்டும் பலகை . |
கொடித்தடம் | ஒற்றையடிப்பாதை . |
கொடித்தண்டு | காண்க : கொடிக்கம்பம் . |
கொடித்தம்பம் | காண்க : கொடிக்கம்பம் . |
கொடித்தரம் | சூரியன் தோன்றும்போது உச்சியில் தோன்றும் எட்டாம் நாள் சந்திரன் . |
கொடித்தாலி | சரட்டுத் தாலி . |
கொடித்தீ | கொடிவேலி . |
கொடிது | காண்க : கொடியது . |
கொடி நரம்பு | வெளியே தெரியும்படி ஒடியுள்ள உடல் நரம்பு . |
கொடிநிலை | மும்மூர்த்திகளின் கொடிகளுள் ஒன்றனோடு அரசன் கொடியை உவமித்துப் புகழும் புறத்துறை ,கீழ்த்திசையில் நிலையாக உதிக்கும் சூரியன் . |
கொடிப்படை | படையின் முன்னணி . |
கொடிப்பந்தர் | கொடிகள் படர்ந்த பந்தல் . |
கொடிப்பயறு | பயறுவகை . |
கொடிப்பவழம் | பவழம் . |
கொடிப்பாதை | காண்க : கொடித்தடம் . |
கொடிப்பாலை | பாலைவகை ; பாலை யாழ்த்திறவகை . |
கொடிப்பிணை | வங்கமணல் . |
கொடிப்பிள்ளை | காக்கைக்குஞ்சு ; பள்ளையாடு . |
கொடிப்புல் | அறுகம்புல் . |
கொடிப்பூ | கொடிகளிற் பூக்கும் பூ . |
கொடிமரம் | கோயில்களின் முன்னால் கொடியேற்றுவதற்காக நடும் மரம் ; கொடி கட்டும் நீண்ட தடி . |
கொடிமல்லிகை | மல்லிகை ; சாதிமல்லிகை . |
கொடிமாசிகள் | நிலையற்றோடும் மேகங்கள் . |
கொடிமாதுளை | ஒருவகை மாதுளைமரம் . |
கொடிமின்னல் | கொடிபோல வீசி ஒளிரும் மின்னல் . |
கொடிமுந்திரி | திராட்சை . |
கொடிமுந்திரிகை | திராட்சை . |
கொட்டைப்பயறு | ஒரு பயறுவகை . |
கொட்டைப்பாக்கு | வேகவைக்காமல் உணக்கிய முழுப் பாக்கு . |
கொட்டைப்பாசி | நீர்ப்பாசிவகை . |
கொட்டைப்புளி | விதை எடுக்காத புளி . |
கொட்டைபரப்புதல் | பகைவரது நாட்டை அழித்துத் தரைமட்டமாக்குதல் . |
கொட்டைபோடுதல் | விதை விதைத்தல் ; கடலைக் கொட்டை போடுதல் ; பலாமரம் பிஞ்சு பிடித்தல் ; தொழிலில் பழக்கப்படுதல் ; சாதல் . |
கொட்டைமுத்து | சிற்றாமணக்கு விதை . |
கொட்டைமுந்திரி | ஒரு முந்திரிவகை . |
கொட்டைமுந்திரிகை | ஒரு முந்திரிவகை . |
கொட்டையாடுதல் | பஞ்சு பன்னுதல் , பஞ்சைப் பிரித்தெடுத்தல் . |
கொட்டையிடுதல் | பஞ்சுச் சுருள் செய்தல் . |
கொட்பு | சுழற்சி ; சுற்றித்திரிகை ; மனச் சுழற்சி ; சரராசி ; வளைவு ; கருத்து ; நிலையின்மை . |
கொட்பேரன் | கொள்ளுப்பேரன் . |
கொடாக்கண்டன் | சிறிதும் ஈயாதவன் . |
கொடாரி | காண்க : கோடரி . |
கொடி | படர்க்கொடி ; ஆடையுலர்த்துங் கொடி ; கொப்பூழ்க்கொடி ; மகளிர் கழுத்தணி ; அரைஞாண் ; ஒழுங்கு ; நீளம் ; சிறு கிளைவாய்க்கால் ; கொடி ; காற்றாடி ; கலத்துவசம் என்னும் யோகம் ; கேது ; காக்கை ; கிழக்குத்திசை . |
கொடிக்கம்பம் | காண்க : கொடிமரம் . |
கொடிக்கயிறு | முறுக்கேறின கயிறு ; கொடியாகக் கட்டின கயிறு . |
கொடிக்கரும்பு | நேராக வளர்ந்த கரும்பு . |
கொடிக்கவி | கொடியைப்பற்றிய் பாட்டு ; கொடியேறும்படி பாடிய பாட்டு ; சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்று . |
கொடிக்கழல் | கழற்சிக்கொடி . |
கொடிக்கள்ளி | கொடிவகை ; கள்ளிச்செடிவகை . |
கொடிக்கால் | வெற்றிலை ; வெற்றிலைத் தோட்டம் ; காய்கறித் தோட்டம் ; வெற்றிலைக்கொடி ; படருங்கொம்பு ; கொடிக்கம்பம் . |
கொடிக்கால்மூலை | ஊரின் வடமேற்கு மூலை . |
கொடிக்கூடை | நாணற்கூடை . |
கொடிகட்டிநிற்றல் | கொடிகட்டுதல் ; உறுதிப்பாட்டுடன் முயற்சியை மேற்கொள்ளுதல் ; நோயாளி முதலியோர் கயிற்றைப் பிடித்துக் கொண்டு நிற்றல் . |
கொடிகட்டிவாழ்தல் | மிகுந்த செல்வ வாழ்க்கையில் இருத்தல் . |
கொடிகட்டுதல் | கொடியெடுத்தல் ; போருக்கு வருதல் ; கொடியேற்றுதல் . |
கொடிச்சி | குறிஞ்சிநிலப் பெண் ; கொடிவேலி ; காமாட்சிப்புல் ; கன்னம் ; புற்றாங்சோறு . |
கொடிச்சிவால் | நுனி வெளுத்த பசுவின் வால் . |
கொடிசுற்றிப்பிறத்தல் | பெற்றோர்க்கும் தாய் மாமனுக்கும் தீங்கு விளைதற்கு அறிகுறியாகக் கொப்பூழ்க்கொடி சுற்றிக்கொண்டு குழந்தை பிறத்தல் . |
கொடிஞ்சி | கைக்குதவியாகத் தேர்த்தட்டின் முன்னே உள்ள அலங்கார உறுப்பு ; தேர் . |
கொடிஞ்சில் | எருதுகளைக்கொண்டு ஆற்றுக்கால் தோண்டும் பலகை . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 383 | 384 | 385 | 386 | 387 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கொட்டைப்பயறு முதல் - கொடிமுந்திரிகை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், காண்க, கொடி, கொடிக்கம்பம், விதை, தோட்டம், முந்திரிவகை, சுழற்சி, கொப்பூழ்க்கொடி, கயிறு, திராட்சை, கொடிகட்டுதல், பாட்டு, நரம்பு, பலகை, தோண்டும், ஆற்றுக்கால், கொடித்தடம், சூரியன், பயறுவகை, எருதுகளைக்கொண்டு, கொடிவேலி, கொடிமரம்