தமிழ் - தமிழ் அகரமுதலி - கொண்டைமாறு முதல் - கொதுகு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கொத்துமாலை | பல சரங்கள் சேர்த்து ஒன்றாகக் கட்டிய பூமாலை . |
| கொத்துமானம் | நகாசுவேலை . |
| கொத்துவேலை | கொத்திச்செய்யும் சித்திர வேலை ; கட்டட வேலை . |
| கொத்தை | சொத்தை ; ஈனம் ; நூற்சிம்பு ; அரைகுறை ; குருடன் ; அறியாமை ; பாவி . |
| கொதி | நீர் முதலியவற்றின் கொதிப்பு ; வெப்பம் ; உடம்பிற் காணும் சூடு ; காய்ச்சல் ; கொதிக் கழிச்சல் ; கோபம் ; கடுமை ; வருத்தம் ; செருக்கு ; ஆசை . |
| கொதிகஞ்சி | உலைநீரில் கொதிக்கும் அரிசியினின்று வடிக்குங் கஞ்சி . |
| கொதிகருப்பநீர் | சுடவைத்த இனிப்புச் சாராயம் . |
| கொதிகொதித்தல் | உலைப்பெய்த அரிசி முதலியவற்றிலிருந்து கொதியெழும்புதல் . |
| கொதித்தல் | நீர் முதலியன கொதித்தல் ; சூடுடையதாதல் ; சினத்தல் ; வருத்தமுறுதல் ; வெப்பமாதல் ; கடுக்கல் ; ஆசைமிகக் கொள்ளுதல் ; சூட்டு மிகுதியால் வயிறு கழிதல் . |
| கொதிநீர் | சூடுள்ள நீர் ; வெந்நீர் ; கொதிக்கும் உலைநீர் . |
| கொதிப்பு | பொங்குகை ; வெப்பம் ; காய்ச்சல் ; கோபம் ; வயிற்றெரிச்சல் ; பரபரப்பு . |
| கொதிமந்தம் | வெப்பமந்தம் . |
| கொதியல் | கொதிப்பு ; நெகிழ்ந்த ஆபரண உறுப்பை இறுகச் செய்யும் வேலை . |
| கொதியன் | உணவில் ஆசைமிக்கவன் . |
| கொதியெண்ணெய் | கொதிக்க வைத்தெடுத்த மருந்தெண்ணெய்வகை . |
| கொதுகு | கொசு . |
| கொத்துப்பசளை | கொடிப் பசளைக்கீரை . |
| கொண்டைமாறு | மரத்தின் உச்சியிலிருந்து எடுக்கும் சுள்ளி ; கொண்டையுள்ள விளக்குமாறு . |
| கொண்டைமுசு | பெரிய கருங்குரங்குவகை . |
| கொண்டைமேற் காற்றடிக்க | உல்லாசமாய் . |
| கொண்டையன் | உச்சிக்கொண்டையுள்ள பருந்துவகை . |
| கொண்டையூசி | மகளிர் தலையில் செருகும் ஊசிவகை ; குண்டூசி . |
| கொண்டோன் | கணவன் ; பொருள் முதலியன கொண்டோன் . |
| கொண்மூ | வானம் ; மேகம் . |
| கொணசில் | கோணல் , வளைவு . |
| கொணர்தல் | கொண்டுவருதல் . |
| கொணாதல் | கொண்டுவருதல் . |
| கொத்தடிமை | குடும்பத்தோடு அடிமையாதல் . |
| கொத்தம் | எல்லை ; கொத்துமல்லி . |
| கொத்தமல்லி | ஒரு செடிவகை . |
| கொத்தமுரி | ஒரு செடிவகை . |
| கொத்தல் | பறவை முதலியன கொத்துகை . |
| கொத்தலரி | ஓர் அலரிவகை . |
| கொத்தவரை | செடிவகை , சீனியவரை . |
| கொத்தவால் | நகரத்தின் கடைத்தெரு முதலியவற்றின் காவல் தலைவன் . |
| கொத்தழிதல் | அடியோடழிதல் . |
| கொத்தளத்தல் | கூலியாகத் தவசங் கொடுத்தல் . |
| கொத்தளம் | கோட்டை மதிலுறுப்பு . |
| கொத்தளி | புற்பாய் . |
| கொத்தளிப்பாய் | புற்பாய் . |
| கொத்தன் | கட்டட வேலைக்காரன் ; கொல்லத்துக்காரன் . |
| கொத்தனார் | தலைமைக் கொத்தன் . |
| கொத்தானை | கூட்டமாகச் செல்லும் சிறுமீன்வகை . |
| கொத்தாள் | வயலில் கூலிக்கு வேலைசெய்யும் ஆள் ; அடிமை . |
| கொத்தான் | காண்க :கொற்றான் |
| கொத்தித்தழி | சரக்கொன்றை . |
| கொத்திதின்னுதல் | மிகுதியாகத் துன்பப்படுத்துதல் . |
| கொத்திப்பிடுங்குதல் | மிகுதியாகத் துன்பப்படுத்துதல் . |
| கொத்து | கொத்துகை ; கொத்துவேலை ; கொத்தனது ஒருநாள் வேலை ; கொல்லத்துக்காரன் ; களைபறிக்க உதவும் சிறுமண்வெட்டி ; பூ முதலியவற்றின் கொத்து ; திரள் ; குடும்பம் ; ஆடையின் மடி ; தானியமாகக் கொடுக்குங்கூலி ; சோறு ; கைப்பிடியளவு ; நாழி . |
| கொத்துக்கணக்கு | பரம்பரைக் கணக்குவேலை ; கொத்தன் சம்பளக் கணக்கு . |
| கொத்துக்கரண்டி | கொத்துவேலைக்குரிய அரசிலைக் கரண்டி . |
| கொத்துக்காடு | உழவின்றிக் கொத்திப் பயிரிடும் நிலம் . |
| கொத்துக்காரன் | கொத்துவேலை செய்வோன் ; வேலையாள்களின் தலைவன் . |
| கொத்துக்காரி | மரபுவழியுரிமையுடைய கோயில் தேவடியாள் . |
| கொத்துக்குறகு | நண்டு . |
| கொத்துக்கூலி | வேளாண்மை வேலையின் பொருட்டுக் கொடுக்குங் கூலி ; கொத்தருக்குக் கொடுக்கும் கூலி . |
| கொத்துங்குறையுமாய் | அரைகுறையாய் . |
| கொத்துச்சரப்பணி | மகளிர் கழுத்தணிவகை . |
| கொத்துச்சரப்பளி | மகளிர் கழுத்தணிவகை . |
| கொத்துதல் | இரை கொத்தியெடுத்தல் ; மண்வெட்டுதல் ; பூமியைத் தோண்டுதல் ; குத்திக் கடித்தல் ; வெட்டுதல் ; தறித்தல் ; எழுத்து முதலியன செதுக்குதல் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 387 | 388 | 389 | 390 | 391 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கொண்டைமாறு முதல் - கொதுகு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், முதலியன, வேலை, கொத்துவேலை, கொத்தன், செடிவகை, மகளிர், முதலியவற்றின், கொதிப்பு, நீர், மிகுதியாகத், கொல்லத்துக்காரன், கட்டட, துன்பப்படுத்துதல், கொத்து, கழுத்தணிவகை, கூலி, புற்பாய், தலைவன், காய்ச்சல், கோபம், கொதித்தல், கொண்டோன், கொண்டுவருதல், கொத்துகை, வெப்பம், கொதிக்கும்

