தமிழ் - தமிழ் அகரமுதலி - கொக்கரை முதல் - கொஞ்சுநடை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கொக்கைச்சால் | உழவுபடாத தரை . |
| கொக்கோவெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| கொங்கணம் | ஒரு நாடு ; ஒரு மொழி . |
| கொங்கணர் | கொங்கண நாட்டார் ; பண்டைத் தமிழ்ச்சித்தருள் ஒருவர் . |
| கொங்கணி | கொங்குநாட்டான் ; மழையைத் தாங்க உடலில் கவிக்கும் சம்பங்கூடை . |
| கொங்கரி | ஏல அரிசி . |
| கொங்கன் | கொங்கநாட்டான் ; சேரன் . |
| கொங்காணி | காண்க : கொங்கணி . |
| கொங்காரம் | குங்குமமரம் . |
| கொங்காளன் | ஒரு குதிரைவகை . |
| கொங்கு | கோயமுத்தூர் , சேலம் , நீலகிரி , தருமபுரி , பெரியார் மாவட்டத்தின் ஒரு பகுதியும் கருநாடக மாநிலத்தின் ஒரு பகுதியும் இணைந்த ஒரு பழந்தமிழ்நாட்டுப் பகுதி ; பூந்தாது ; மணம் ; தேன் ; கள் ; கருஞ் சுரைக்கொடி ; புறத்தோல் . |
| கொங்கை | முலை ; மரக்கணு ; கம்புத் தானியத்தின் உமி . |
| கொச்சகக்கயிறு | தெங்கின் கதம்பை நாராற் செய்யப்படுங் கயிறு . |
| கொச்சகக்கலிப்பா | தரவு , தரவிணை , சிஃறாழிசை , பஃறாழிசை , மயங்கிசை என்னும் ஐம்பிரிவுடைய கலிப்பாவகை . |
| கொச்சகம் | கொச்சகக்கலிப்பா ; ஆடையுள் ஒரு வழிக் கொய்தடக்கிக் கட்டுவது ; அம்போதரங்க உறுப்புகளுள் ஒன்று ; இழிவு . |
| கொச்சம் | காண்க : கொச்சகக்கயிறு . |
| கொச்சன் | சிறுபையன் . |
| கொச்சி | ஓர் ஊர் ; சேரநாட்டிலுள்ள ஒரு நகரம் ; விளாம்பழத்தின் உள்ளீடு ; ஊசிமிளகாய் ; நெருப்பு ; இளங்கொட்டாங்கச்சி . |
| கொச்சிக்குழந்தை | வைப்பரிதாரம் . |
| கொச்சிமிளகாய் | ஊசிமிளகாய் . |
| கொச்சு | குஞ்சம் ; கத்தரிக்காய் முதலிய காய்கறிகள் சேர்ந்த குழம்புவகை ; சிறிய . |
| கொச்சை | இழிவு ; இழிந்தவன் ; சீகாழி ; திருந்தாத சொல் ; ஆடு ; வெள்ளாடு ; பால் முதலியவற்றின் முடைநாற்றம் . |
| கொச்சைச்சொல் | திருந்தாப் பேச்சு ; இழிசொல் . |
| கொச்சைநாற்றம் | ஆட்டுப்பால் நாற்றம் ; பால் முதலியவற்றின் முடைநாற்றம் . |
| கொச்சையர் | இடையர் ; இளைஞர் . |
| கொச்சைவயம் | சீகாழி என்னும் ஊர் . |
| கொசமசக்கு | குழப்பம் ; செயற்சிக்கல் . |
| கொசவம் | கொய்சகம் , ஓரங்கொய்து சுருக்கப்பட்ட உடை . |
| கொசுவம் | கொய்சகம் , ஓரங்கொய்து சுருக்கப்பட்ட உடை . |
| கொசிகம் | ஆடை . |
| கொசு | சிறுகொதுகு ; பெருங்கொதுகு ; கச்சம் . |
| கொசுகு | சிறுகொதுகு ; பெருங்கொதுகு ; |
| கொசுத்தேன் | சிறு கொசு இனங்கள் சேர்த்து வைக்குந்தேன் . |
| கொசுமூட்டம் | கொசுக்களைப் போக்குவதற்கு மூட்டும் புகை . |
| கொசுவுதல் | ஆடையைக் கொய்து அடுக்குதல் . |
| கொசுறு | பிசுக்கு , கொசுர் . |
| கொஞ்சங்கொஞ்சமாய் | சிறிதுசிறிதாய் . |
| கொஞ்சத்தனம் | எளிமை . |
| கொஞ்சநஞ்சம் | சிறிதளவு . |
| கொஞ்சப்படுத்துதல் | இழிவுபடுத்துதல் ; |
| கொஞ்சப்பேர் | சிலர் ; இகழ் . |
| கொஞ்சம் | சிறிது . |
| கொஞ்சல் | மழலைச்சொல் ; சரசப்பேச்சு ; செல்லமாகப் பேசுதல் . |
| கொஞ்சன் | அற்பன் . |
| கொஞ்சி | காட்டுக்கொஞ்சி , சீமைக்கொஞ்சி ; பூவைமரம் . |
| கொஞ்சுதல் | மழலை பேசுதல் ; இன்பமாய்ப் பேசுதல் ; செல்லங்கொஞ்சுதல் ; இனிதாய் ஒலித்தல் ; முத்தமிடல் . |
| கொஞ்சுநடை | மெதுவான நடை . |
| கொக்கைக்கல் | ஆட்டுக்காற்கல் . |
| கொக்கரை | வளைவு ; வைக்கோல் எடுக்கும் கருவி ; வலம்புரிச்சங்கு ; வாத்தியவகை ; வில் ; வலை ; பரம்பு ; தாளம் ; பனை ; தெங்கு முதலியவற்றின் இளமடல் . |
| கொக்கறை | பனை , தெங்கு முதலியவற்றின் வற்றியுலர்ந்த இளமடல் . |
| கொக்காட்டல் | சீராட்டுவகை . |
| கொக்காம்பாளை | ஒரு செடிவகை . |
| கொக்கான் | ஏழாங்காய் விளையாட்டுவகை . |
| கொக்கி | கொளுவி ; துறட்டிநுனியிற் செருகும் இருப்புக்கருவி . |
| கொக்கிப்பூட்டு | அணியிலுள்ள பூட்டு . |
| கொக்கில் | கொக்கி . |
| கொக்கிறகு | காண்க : கொக்குமந்தாரை . |
| கொக்கிறகுமந்தாரை | காண்க : கொக்குமந்தாரை . |
| கொக்கு | ஒரு பறவைவகை ; மூலநாள் ; மாமரம் ; செந்நாய் ; குதிரை . |
| கொக்குக்கல் | காண்க : சிலமான்கல் , மாந்தளிர்க்கல் . |
| கொக்குமந்தாரை | வெள்ளைமந்தாரை ; ஒரு பூமரம் ; காட்டாத்தி மரம் ; புடைவைவகை . |
| கொக்குவாய் | கொக்கி , அணிகலனிலுள்ள கொக்கி . |
| கொக்கை | கொக்கி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 381 | 382 | 383 | 384 | 385 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கொக்கரை முதல் - கொஞ்சுநடை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கொக்கி, காண்க, முதலியவற்றின், பேசுதல், கொக்குமந்தாரை, சிறுகொதுகு, சுருக்கப்பட்ட, பெருங்கொதுகு, கொசு, தெங்கு, கொங்கணி, இளமடல், ஓரங்கொய்து, கொய்சகம், இழிவு, என்னும், கொச்சகக்கலிப்பா, கொச்சகக்கயிறு, ஊசிமிளகாய், சீகாழி, முடைநாற்றம், சொல், பால், பகுதியும்

