முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » கொட்குதல் முதல் - கொட்டைநூற்றல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - கொட்குதல் முதல் - கொட்டைநூற்றல் வரை
சொல் | அருஞ்சொற்பொருள் |
கொட்டை | விதை ; தாமரைக்கொட்டை ; பலாப்பிஞ்சு ; உருண்டை வடிவம் ; மகளிர் தலையணிவகை ; கொட்டைக்கரந்தை ; பாதக் குறட்டின் குமிழ் ; ஆடைத்தும்பினைத் திரள முடிந்த முடிச்சு ; கிடுகு தாங்கும் கால் முதலியவற்றின் பகுதி ; நூற்குங் கதிரின் கொட்டை ; பஞ்சுச் சுருள் ; யானையின் அணி விசேடம் ; சும்மாடு ; சிறு தலையணை ; நெல்வகை . |
கொட்டைக்கரந்தை | ஒரு கரந்தைச்செடிவகை . |
கொட்டைக்காய்ச்சி | சதைப்பற்றுக் குறைந்து கொட்டை பருத்துள்ள காய்காய்க்கும் மா ; பனைமரம் . |
கொட்டைநூற்றல் | பஞ்சு நூற்றல் ; பயனற்ற வேலை செய்தல் ; வீண்காலம் போக்குதல் . |
கொட்டடி | சமையல் அறை ; மாட்டுக்கொட்டில் ; சிறைச்சாலை அறை ; சேலைவகை . |
கொட்டணக்காரி | கூலிக்கு நெற்குற்றுபவள் . |
கொட்டணம் | நெற்குற்றுகை ; பஞ்சு கொட்டுகை . |
கொட்டணை | ஒரு பூண்டுவகை . |
கொட்டம் | இறுமாப்பு ; சேட்டை ; கடுகடுப்பு ; முழக்கம் ; நீர் முதலியன ஒழுகுகை ; மாடுகளுக்கு மருந்து கொடுக்கும மூங்கிற் குழாய் ; நூற்குங் கொட்டை ; சிறிய ஓலைப்பெட்டி ; மாட்டுத்தொழுவம் ; ஒரு மணப்பண்டவகை ; வீடு . |
கொட்டமடித்தல் | மனம் போனபடி அரட்டையடித்தல் . |
கொட்டறை | காண்க : கொட்டடி . |
கொட்டன் | கொட்டாப்புளி ; பருத்தவன் ; பருத்தது ; தேங்காய் . |
கொட்டாப்பிடி | உளிமேல் அடிக்கும் ஆயுதம் , மரச்சுத்தியல் . |
கொட்டாப்புளி | உளிமேல் அடிக்கும் ஆயுதம் , மரச்சுத்தியல் . |
கொட்டாய் | காண்க : கொட்டகை . |
கொட்டாரம் | தானியக்களஞ்சியம் ; நெல் முதலிய தானியங் குற்றும் இடம் ; யானைக்கூடம் ; அரண்மனை ; அரண்மனை முதலியவற்றின் தலைவாயில் . |
கொட்டாவி | வாயைத் திறந்து வெளிவிடும் நெட்டுயிர்ப்பு . |
கொட்டாவிவிடுதல் | வாயால் நெட்டுயிர்த்தல் ; இறத்தல் ; களைத்துப்போதல் . |
கொட்டாறு | உப்பளம் . |
கொட்டி | நீர்க்கொடிவகை ; கொடுகொட்டி ; தாளம் ; வாயில் ; கூட்டம் ; கோயில்வாசல் . |
கொட்டிக்கொடுத்தல் | அதிகமாகக் கொடுத்தல் ; அதிகமாக கண்டித்தல் . |
கொட்டிக்கொள்ளுதல் | நிரம்ப உண்ணுதல் ; மேற்போட்டுக் கொள்ளுதல் . |
கொட்டிச்சேதம் | பதினோர் ஆடல்களுள் திரிபுரம் எரித்த காலை சிவனாடிய கூத்து . |
கொட்டிப்பேசுதல் | குத்திப்பேசுதல் . |
கொட்டிமத்தளம் | பெரிய மத்தளம் . |
கொட்டியம் | எருது ; பொதிமாட்டுத் திரள் . |
கொட்டியான் | சுமைகாரன் ; பயிரில் விழும் நோய்வகை ; கெடுதியை உண்டுபண்ணுவது . |
கொட்டில் | மாட்டுத்தொழுவம் ; வில்வித்தை பயிற்றுமிடம் ; கொட்டகை ; சிறு குடில் . |
கொட்டு | அடி ; வாத்திய அடிப்பு ; வாத்தியம் ; தாளத்தில் அரைமாத்திரைக் காலம் ; தேள் முதலியன கொட்டுகை ; தோண்டு கருவிவகை ; மண்வெட்டி ; கொட்டுகை ; உடல் ; நெற்கூடு ; பிரம்புக்கூடை ; பனந்துண்டு ; மலடி . |
கொட்டுக்காரன் | மத்தளம் முதலியன வாசிப்பவன் ; மேளகாரச் சாதி . |
கொட்டுக்கிடாரம் | பெரிய கொப்பரை . |
கொட்டுக்கிணறு | பனந்துண்டுகளை வைத்துக்கட்டிய கிணறு . |
கொட்டுக்குடவை | உடுக்கைபோல் வடிவமைந்த பாத்திரம் . |
கொட்டுக்கூடை | கிண்ண வடிவமான கூடை ; கூடைபோன்ற வடிவுள்ள உலோக பாத்திரம் . |
கொட்டுதல் | வாத்தியம் முழக்குதல் ; சம்மட்டியால் அடித்தல் ; கையால் தட்டுதல் ; பஞ்சரைத்தல் ; நெற்குற்றுதல் ; அடித்தல் ; தேள் , குளவி முதலியன கொட்டல் ; சொரிதல் ; கூடை முதலியவற்றில் இருந்து பண்டங்களைக் கொட்டுதல் ; அப்புதல் ; அறைந்துகொள்ளுதல் ; பல்லி சொல்லுதல் ; உதிர்தல் ; கண் இமைத்தல் . |
கொட்டுப்பிடி | கொட்டாப்புளி , உளியடிக்கும் ஆயுதம் . |
கொட்டுமுழக்கு | விழாக்காலங்களில் முழக்கும் மேளதாளம் முதலிய வாத்திய இசை . |
கொட்டுமுறி | உயர்ந்த பித்தளைவகை . |
கொட்டுமேளம் | மேளவாத்தியம் . |
கொட்டுரசம் | பருப்பிடாத இரசம் . |
கொட்டுவாய் | தேள் முதலியன கொட்டின இடம் ; நெருக்கடியான சமயம் . |
கொட்டுவான் | தேள் ; கொட்டாப்புள்ளி ; கொட்டு வேலை செய்யுங் கன்னான் . |
கொட்டுவேலை | கொட்டுக் கன்னார் வேலை . |
கொட்குதல் | சுழலுதல் ; சூழவருதல் ; திரிதல் ; வெளிப்படுதல் . |
கொட்டகம் | காண்க : கொட்டகை . |
கொட்டகாரம் | பண்டம் வைக்கும் அறை . |
கொட்டகை | தொழுவம் , மாட்டுக்கொட்டில் , பந்தல்வகை , சிற்றில் . |
கொட்டங்காய் | தேங்காய் . |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 382 | 383 | 384 | 385 | 386 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கொட்குதல் முதல் - கொட்டைநூற்றல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், முதலியன, தேள், கொட்டை, கொட்டகை, காண்க, கொட்டாப்புளி, ஆயுதம், கொட்டுகை, வேலை, கூடை, கொட்டுதல், அரண்மனை, அடித்தல், பெரிய, பாத்திரம், இடம், வாத்தியம், கொட்டு, வாத்திய, மத்தளம், அடிக்கும், சிறு, பஞ்சு, நூற்குங், முதலியவற்றின், கொட்டைக்கரந்தை, கொட்டடி, மாட்டுக்கொட்டில், மரச்சுத்தியல், உளிமேல், தேங்காய், மாட்டுத்தொழுவம், முதலிய