முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » கையுதிர்க்கோடல் முதல் - கைவசம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - கையுதிர்க்கோடல் முதல் - கைவசம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| கையொத்துதல் | வணக்கம் செய்தல் , அஞ்சலி செய்தல் . |
| கையொப்பம் | கையெழுத்து ; கீறற் கையெழுத்து ; கையெழுத்துச் செய்யப்பட்ட தொகை . |
| கையொலி | தெய்வத் திருமேனிகளுக்குச் சாத்தும் சிறிய ஆடை . |
| கையொலியல் | தெய்வத் திருமேனிகளுக்குச் சாத்தும் சிறிய ஆடை . |
| கையொழிதல் | கைதூவுதல் ; கைவேலை நீங்குதல் . |
| கையொழியாமை | முயற்சி நீங்காமை ; நேரமின்மை . |
| கையொறுப்பு | சிக்கனச் செலவு ; இச்சையடக்குகை . |
| கையோங்குதல் | செழித்தோங்குதல் ; மேன்மைப்படுதல் ; அடித்தல் . |
| கையோட்டம் | செல்வநிலைமை ; எழுதுதல் முதலிய வேலைகளிற் கைவிரைவு . |
| கையோடு | உடன் ; பிடித்த பிடியோடு ; சித்தமாய் ; தாமதமின்றி . |
| கையோடுகையாய் | செயலோடு செயலாய் ; தாமதமின்றி . |
| கையோடுதல் | வேகமாக எழுதுதல் ; ஒரு தொழிலின் மனஞ் செல்லுதல் . |
| கையோடே | கைவிடாமல் ; உடனே . |
| கையோலை | ஓலைத்துண்டு , ஓலைச்சீட்டு ; கையுறுதி . |
| கையோலைசெய்தல் | தீர்மானித்தல் . |
| கைரவம் | குமுதம் , வெள்ளாம்பல் . |
| கைரவி | நிலவு ; காந்திப்பூ ; வெந்தயம் . |
| கைராசி | கைபடுவதனால் உண்டாவதாகக் கருதும் நன்மை . |
| கைராட்டு | கையால் நூல் நூற்கும் பொறி , இறாட்டை . |
| கைரிகம் | காவிக்கல் ; பொன் ; பொன்னூமத்தை . |
| கைரேகை | கையில் அமைந்திருக்கும் கோடு . |
| கைலாகு | கைத்தாங்கல் . |
| கைலாகு கொடுத்தல் | அரசர் முதலியோர் நடக்கும்பொழுது மரியாதையாக அவர் கைகளைத் தாங்குதல் ; உடல் வலியற்றவரைக் கைகொடுத்துத் தாங்குதல் . |
| கைலாகை | கைகொடுத்தல் . |
| கைலாசநாதன் | கைலாயத்து இறைவனான சிவன் . |
| கைலாசபதி | கைலாயத்து இறைவனான சிவன் . |
| கைலாசம் | எண்குல பர்வதங்களுள் ஒன்றும் சிவபிரான் வாழ்விடமுமான ஒரு மலை . |
| கைலாயம் | எண்குல பர்வதங்களுள் ஒன்றும் சிவபிரான் வாழ்விடமுமான ஒரு மலை . |
| கைலி | கையொலி ; ஓர் ஆடைவகை . |
| கைலேசு | கைக்குட்டை . |
| கைலை | கயிலைமலை . |
| கைவசம் | தன்னிடம் உள்ளவை ; கைக்குட்படல் . |
| கையுதிர்க்கோடல் | விட்டு விலகுமாறு கையசைத்துக குறிப்பிடுதல் . |
| கையுபகாரம் | கையுதவி . |
| கையுயர்த்துதல் | கையோங்குதல் ; கைதூக்குதல் ; கையெடுத்தல் . |
| கையுயர்தல் | கையோங்கதல் ; அடித்தல் ; மேன்மைப்படுதல் . |
| கையுறுதல் | கையிற் கிடைத்தல் ; அகப்படல் ; தொடுதல் . |
| கையுறுதி | கடனுக்கு வைக்கப்படும் ஈடு ; கையடித்து விலையுறுதி செய்கை ; |
| கையுறை | காணிக்கைப் பொருள் ; மொய்ப்பணம் ; தலைவிக்கு அன்பு பாராட்டித் தலைவன் கொடுக்கும் தழை முதலிய நன்கொடை ; இலஞ்சம் ; கைக்கவசம் . |
| கையுறையெழுதுதல் | திருமணம் முதலியவற்றில் மொய்க்கணக்கு எழுதுதல் . |
| கையூட்டு | இலஞ்சம் . |
| கையூழ் | இசைக்கரணம் எட்டனுள் ஒன்று , வண்ணத்திற் செய்த பாடலெல்லாம் இன்பமாக யாழிற் பாடுகை . |
| கையெடுத்தல் | கும்பிடல் ; இரத்தல் ; கையுயர்த்தித் தம் கருத்தை உணர்த்துதல் . |
| கையெடுப்பு | கையையுயர்த்தி நிற்கம் ஒருவனது உயரத்தினளவு . |
| கையெழுத்து | கையாலெழுதுதல் ; கையொப்பம் ; உடன்படிக்கை ; கைரேகை . |
| கையெழுத்துப் பிரதி | கையால் எழுதிய நூற்படி . |
| கையெழுத்துப்போடுதல் | கையொப்பமிடுதல் . |
| கையெறிதல் | கைகொட்டுதல் ; உறுதிகூறிக் கையடித்தல் ; கோபத்தாற் கைவீசுதல் . |
| கையேடு | நாட்குறிப்புக் கணக்கு ; சிறிய ஏட்டுப் புத்தகம் ; பெருஞ் செலவுவிவரக் கணக்குப் புத்தகம் . |
| கையேந்தி | இரவலன் , பிச்சைக்காரன் . |
| கையேந்துதல் | இரந்து வாங்குதல் , யாசித்தல் . |
| கையேற்பு | பெறுகை ; யாசிக்கை ; களப்பிச்சை வாங்குகை ; ஒரு தொழிலை ஏற்றுக்கொள்கை . |
| கையேற்றம் | செல்வப்பெருக்கான நிலை . |
| கையேறல் | நடுத்தரமான முத்து . |
| கையேறுதல் | கையிற் கிடைத்தல் ; கைமாறுதல் . |
| கையை | தங்கை . |
| கையைக்கடித்தல் | எதிர்பார்த்ததற்குமேல் செலவாதல் ; இழப்பாதல் . |
| கையைக் குறுக்குதல் | செலவைக் குறைத்தல் ; உலோபஞ் செய்தல் . |
| கையைப்பிடித்தல் | திருமணஞ் செய்தல் ; காண்க : கையைக்கடித்தல் ; கையைப் பிடித்து இழுத்தல் . |
| கையொட்டுக்கால் | கருப்பூரவகை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 379 | 380 | 381 | 382 | 383 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கையுதிர்க்கோடல் முதல் - கைவசம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், செய்தல், சிறிய, கையெழுத்து, எழுதுதல், ஒன்றும், பர்வதங்களுள், சிவன், இறைவனான, சிவபிரான், எண்குல, கையெடுத்தல், புத்தகம், கையைக்கடித்தல், இலஞ்சம், கிடைத்தல், கைலாயத்து, கையிற், வாழ்விடமுமான, கைரேகை, சாத்தும், கையோங்குதல், திருமேனிகளுக்குச், தெய்வத், கையொப்பம், கையொலி, மேன்மைப்படுதல், அடித்தல், கையால், கைலாகு, கையுறுதி, தாமதமின்றி, முதலிய, தாங்குதல்

