தமிழ் - தமிழ் அகரமுதலி - குருத்து முதல் - குருவிந்தம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| குருவிக்கண் | சிறு கண் ; சிறு துளை . |
| குருவிக்கல் | ஒருவகைச் செம்மண் . |
| குருவிக்கார் | கார்நெல்வகை . |
| குருவிக்காரன் | குருவி பிடிப்போன் ; குருவி பிடிக்கும் ஓர் இனத்தவன் . |
| குருவிக்கடல் | அடிக்கடி உண்டாகும் உணவு விருப்பம் . |
| குருவிச்சி | புல்லுருவிப்பூடு ; ஒருவகை மரம் . |
| குருவிச்சை | புல்லுருவிப்பூடு ; ஒருவகை மரம் . |
| குருவிஞ்சி | ஒரு பூண்டு ; காட்டுவெற்றிலை . |
| குருவித்தலை | வில்லாளிகள் மறைந்திருந்து அம்பெய்தற்குறிய மதிலுறுப்பு ; சிறிய தலை . |
| குருவிந்தக்கல் | குருவிந்தம் ; சாணைக்கல் செய்வதற்குதவும் ஒருவகைக் கல் ; காவிக் கல் . |
| குருவிந்தம் | தாழ்ந்த தர மாணிக்கவகை ; குன்றிமணி ; வாற்கோதுமை ; சாதிலிங்கம் ; முத்தக்காசு . |
| குருத்தோலை ஞாயிறு | கிறித்தவர்களின் ஒரு திருநாள் , ஞாயிறன்று கிறித்துநாதர் எருசலேம் நகருக்குள் வெற்றிமுழக்கோடு நுழைந்ததைக் கொண்டாடும் திருநாள் . |
| குருத்தோலைப் பெருநாள் | கிறித்தவர்களின் ஒரு திருநாள் , ஞாயிறன்று கிறித்துநாதர் எருசலேம் நகருக்குள் வெற்றிமுழக்கோடு நுழைந்ததைக் கொண்டாடும் திருநாள் . |
| குருதட்சினை | படிப்பு முடிந்தபின் குருவுக்குச் சீடன் கொடுக்கும் காணிக்கை . |
| குருதி | இரத்தம் ; சிவப்பு ; செவ்வாய் ; மூளை . |
| குருதிப்பலி | வீரன் தன் இரத்தத்தைக் கொற்றவைக்குக் கொடுக்கும் பலி . |
| குருதிப்புனல் | செந்நீர் ; உதிரநீர் . |
| குருதியூட்டுதல் | விலங்குப் பலிகொடுத்தல் . |
| குருதிவாரம் | செவ்வாய்க்கிழமை . |
| குருது | தானியக்குதிர் ; நெய் . |
| குருந்தக்கல் | மணிவகையுள் ஒன்று , குருவிந்தக்கல் . |
| குருந்தம் | குருந்தக்கல் ; குருந்தமரம் . |
| குருந்து | வெண்குருந்து ; குழந்தை ; காட்டெலுமிச்சை ; ஒருவகைச் சிறுமரம் ; குருக்கத்தி ; குருந்தக்கல் . |
| குருநாத்தகடு | ஒளியுள்ள ஒருவகை மெல்லிய வண்ணத்தகடு . |
| குருநாதன் | பரமகுரு , முருகக்கடவுள் . |
| குருநாள் | வியாழக்கிழமை ; பூசநாள் . |
| குருநிந்தை | ஐம்பெரும் குற்றங்களுள் ஒன்றாகிய குருவைப் பழித்தல் . |
| குருநோய் | அம்மைநோய் . |
| குருப்பித்தல் | பருவுண்டாதல் . |
| குருப்பு | பரு . |
| குருப்பூச்சி | காண்க : குருவண்டு . |
| குருபத்தி | குருவின்மேல் கொள்ளும் அன்பு . |
| குருபத்திரம் | துத்தநாகம் ; புளியமரம் . |
| குருபரம்பரை | குருவமிசவழி ; ஆழ்வார் ஆசாரியார்களின் வரலாறு கூறும் நூல் . |
| குருபரன் | பரமகுரு . |
| குருபன்னி | குருபத்தினி . |
| குருபாரம்பரியம் | குருவமிசவழி ; ஆசாரியபரம்பரை . |
| குருபீடம் | குருவினது இடம் . |
| குருபூசை | சமாதியடைந்த குருவின் (பெரியாரின்) வருட நட்சத்திரந்தோறும் மடங்களில் மகேசுவர பூசையுடன் அக் குருவிற்குச் செய்யும் ஆராதனை . |
| குரும்பட்டி | தென்னை பனைகளின் இளங்காய் . |
| குரும்பி | புற்றாஞ்சோறு . |
| குரும்பை | பனை தெங்குகளின் பிஞ்சு ; இளநீர் ; புற்றாஞ்சோறு ; காதினுள் திரளும் குறும்பி . |
| குருமகன் | குரு ; குருவின் புதல்வன் . |
| குருமணி | பரமகுரு . |
| குருமன் | ஒருசார் விலங்குபறவைகளின் இளமைப் பெயர் . |
| குருமான் | ஒருசார் விலங்குபறவைகளின் இளமைப் பெயர் . |
| குருமித்தல் | பேரொலி செய்தல் , முழங்குதல் . |
| குருமுடித்தல் | உலோகங்களை நீற்றுதற்கு உதவும் மருந்து செய்தல் ; இரசவாதத்தில் பொன்னாக்குதற்கு மருந்து செய்தல் . |
| குருமுறை | சவர்க்காரம் ; கோடாசொரிப்பூடு . |
| குருமுனி | அகத்தியன் . |
| குருமூர்த்தம் | தெய்வம் குருவாக வருதல் ; தேவன் குருவாக வருதல் ; குருவாக உபதேசிக்க வந்த கடவுளின் திருமேனி . |
| குருமூர்த்தி | பரமகுரு ; தட்சிணாமூர்த்தி . |
| குருமை | வண்ணம் ; பெருமை . |
| குருலிங்க சங்கமம் | குருவும் சிவமும் திருக்கூட்டமும் . |
| குருவகம் | வெண்சிவப்பு . |
| குருவண்டு | புள்ளியுள்ள குளவிவகை . |
| குருவரன் | காண்க : குருபரன் . |
| குருவருடம் | நவகண்டங்களுள் ஒன்று . |
| குருவன் | குரு . |
| குருவாரம் | வியாழக்கிழமை . |
| குருவால் | இத்திமரம் . |
| குருவி | ஒரு சிறுபறவை ; மூலநாள் ; குன்றிமணி . |
| குருத்து | மரம் முதலியவற்றின் குருத்து , ஓலைக் கொழுந்து ; தந்தம் , மூளை இவற்றின் குருத்து ; காதுக் கருத்து ; இளமை ; வெண்மை . |
| குருத்துமணல் | பொடிமணல் . |
| குருத்துரோகம் | ஆசிரியனுக்குச் செய்யும் துரோகம் . |
| குருத்துவம் | குருத்தன்மை ; பெருமை ; கனம் ; நன்றி . |
| குருத்துவாங்குதல் | குருத்துவிடுதல் . |
| குருத்தெலும்பு | இளவெலும்பு . |
| குருத்தோலை | இளவோலை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 351 | 352 | 353 | 354 | 355 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குருத்து முதல் - குருவிந்தம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், திருநாள், பரமகுரு, செய்தல், குருவாக, குருத்து, குருந்தக்கல், மரம், ஒருவகை, குருவி, புற்றாஞ்சோறு, குரு, செய்யும், குருவின், ஒருசார், குருவமிசவழி, குருபரன், இளமைப், வருதல், பெருமை, ஒருவகைச், மருந்து, புல்லுருவிப்பூடு, குருவண்டு, பெயர், விலங்குபறவைகளின், வியாழக்கிழமை, ஞாயிறன்று, கிறித்துநாதர், எருசலேம், கிறித்தவர்களின், குருத்தோலை, குருவிந்தம், குன்றிமணி, நகருக்குள், வெற்றிமுழக்கோடு, சிறு, ஒன்று, குருவிந்தக்கல், மூளை, கொடுக்கும், நுழைந்ததைக், கொண்டாடும், காண்க

