தமிழ் - தமிழ் அகரமுதலி - குயில்தல் முதல் - குரவம்பாவை வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| குரங்குப் புத்தி | நிலையற்ற புத்தி . |
| குரங்குமச்சு | கூரையின்கீழ் அமைக்கும் மச்சு . |
| குரங்குமார்க்கம் | குதிரைநடையுள் ஒன்றான வானரநடை . |
| குரங்குமூஞ்சி | வேறுபட்ட முகம் , விகாரமான முகம் ; ஒருவகைச் சிறுமரம் . |
| குரங்குமூஞ்சிக்காய் | முகப்பிற் சிவந்த மாங்காய் . |
| குரங்குவலி | காண்க : குரக்குவலி . |
| குரச்சை | குதிரைக் குளம்பு . |
| குரசு | குதிரைக் குளம்பு . |
| குரண்டகம் | மருதோன்றிமரம் ; பெருங்குறிஞ்சி . |
| குரண்டம் | மருதோன்றிமரம் ; கொக்குவகை . |
| குரணம் | முயற்சி . |
| குரத்தம் | ஆரவாரம் . |
| குரத்தி | குருபத்தினி ; ஆசாரிய பதவி வகிப்பவள் ; தலைவி ; சைன தவப்பெண் . |
| குரப்பம் | குதிரை தேய்க்குங் கருவி . |
| குரம் | ஒலி ; தருப்பை ; பாகல் ; குதிரை முதலியவற்றின் குளம்பு ; பசு . |
| குரம்பு | அணைக்கட்டு ; ஆற்றினின்று பாசனக் கால்களுக்கு நீரைத் திருப்பும் அணை . |
| குரம்பை | சிறுகுடில் ; பறவைக் கூடு ; உடல் ; தானியக் கூடு ; சேர் ; பத்தாயம் ; இசைவகை . |
| குரமடம் | பெருங்காயம் . |
| குரல் | கதிர் ; பூங்கொத்து ; ஒன்றோடொன்றற்குள்ள சேர்க்கை ; தினை , வாழை முதலியவற்றின் தோகை ; தினை ; பாதிரி ; பெண்டிர் தலைமயிர் ; மகளிர் குழல்முடிக்கும் ஐவகையுள் ஒன்று ; இறகு ; பேச்சொலி ; மொழி ; சந்தம் ; மிடறு ; ஏழிசையுள் முதலாவது ; ஓசை ; கிண்கிணிமாலை . |
| குரல்காட்டுதல் | அழைத்தற் பொருட்டுக் குறிப்பொலி காட்டுதல் ; பறவை யொலித்தல் ; பெருஞ் சத்தமிடுதல் . |
| குரல்குளிறுதல் | யாழ் முதலியவற்றில் சுருதி கலைதல் . |
| குரல்வளை | மிடற்றின் உறுப்பு . |
| குரலடைப்பு | குரல் கம்முகை ; பேச முடியாமற் போகை . |
| குரவகம் | வாடாக் குறிஞ்சிமரம் ; மருதோன்றி மரம் . |
| குரவம் | குராமரம் ; பேரீந்துமரம் ; கோட்டம் . |
| குரவம்பாவை | பாவையின் வடிவுடைய குரவம்பூ . |
| குயில்தல் | சொல்லுதல் ; கூவுதல் ; செய்தல் ; மணி பதித்தல் ; கட்டுதல் ; பின்னுதல் ; நெய்தல் ; துளைத்தல் ; செறிதல் ; வாத்தியம் ஒலித்தல் ; நடைபெறுதல் . |
| குயிலுதல் | சொல்லுதல் ; கூவுதல் ; செய்தல் ; மணி பதித்தல் ; கட்டுதல் ; பின்னுதல் ; நெய்தல் ; துளைத்தல் ; செறிதல் ; வாத்தியம் ஒலித்தல் ; நடைபெறுதல் . |
| குயிலாயம் | மட்கலம் வளையுங்கூடம் ; சுவருள் அறை ; பறவைக் கூடு . |
| குயிலுவக் கருவி | இசைக்கருவிகள் . |
| குயிலுவம் | வாத்தியம் வாசித்தல் . |
| குயிலுவர் | இசைக்கருவி வாசிப்போர் . |
| குயிற்றுதல் | சொல்லுதல் ; செய்தல் ; மணிபதித்தல் . |
| குயிறல் | சொல்லுதல் ; கூவுதல் ; செய்தல் ; மணி பதித்தல் ; கட்டுதல் ; பின்னுதல் ; நெய்தல் ; துளைத்தல் ; செறிதல் ; வாத்தியம் ஒலித்தல் ; நடைபெறுதல் . |
| குயின் | மேகம ; செயல் . |
| குயின்மூக்கெலும்பு | முதுகின் அடியெலும்பு . |
| குயின்மொழி | இன்மொழி ; அதிமதுரம் . |
| குயினர் | மணியில் துளையிடுவோர் ; தையற்காரர் . |
| குயுக்தி | நேர்மையற்ற உத்தி ; ஏளனம் . |
| குயுத்தி | நேர்மையற்ற உத்தி ; ஏளனம் . |
| குரக்களித்தல் | காண்க : குரக்குவலி . |
| குரக்கன் | கேழ்வரகு . |
| குரக்கன்சாறுதல் | கேழ்வரகு விதைத்தபின் வயலைக் கிளறிக் கொடுத்தல் ; கேழ்வரகு விதைத்தல் . |
| குரக்குக்கை | குரக்குவாதம் பிடித்த கை . |
| குரக்குவலி | குரங்குக்கு வரும் வலிப்பு நோய் ; கைகால்களில் வரும் ஒருவகை வலிப்பு . |
| குரக்குவலித்தல் | குரக்குவலி உண்டாதல் . |
| குரக்குவாதம் | குரங்குக்கு வரும் வலிப்பு நோய் ; கைகால்களில் வரும் ஒருவகை வலிப்பு |
| குரகதம் | குதிரை ; குதிரைப்பல் நஞ்சு . |
| குரகம் | விமானப் பறவை ; நீர்வாழ் பறவைப் பொது . |
| குரங்கம் | எட்டிமரம் ; மான் ; விலங்கின் பொது ; மலைக்கொன்றை . |
| குரங்கன் | குரங்குபோலக் குறும்புத்தனம் செய்பவன் ; குரங்கம் ; எட்டிமரம் ; சந்திரன் . |
| குரங்காட்டம் | குரங்கின் கூத்து . |
| குரங்காட்டி | குரங்ககை ஆடச்செய்துகாட்டி உயிர் வாழ்வோன் . |
| குரங்கி | சந்திரன் . |
| குரங்கு | வளைவு ; வானரம் ; முசுமுசுக்கைக் கொடி ; கொக்கி ; விலங்கு . |
| குரங்கு கடியன் | குரங்காலேனும் அணிலாலேனும் முனையில் தீண்டப்பட்டுப் பழுதற்ற தேங்காய் . |
| குரங்குச்சேட்டை | குறும்புச் செய்கை . |
| குரங்குடாப்பு | கதவு சாளரங்களின்மேல் மழை வெயில்களைத் தடுக்க அமைக்கும் மறைவு . |
| குரங்குத் தாழ்ப்பாள் | கொக்கித் தாழ்ப்பாள் . |
| குரங்குதல் | வளைதல் ; தாழ்தல் ; தொங்குதல் ; தங்குதல் ; குறைதல் ; இரங்குதல் . |
| குரங்குப்பட்டை | கூரையோடுகள் கலைந்து போகாதபடி முகட்டிலிருந்து அடிவரை கட்டும் சுண்ணாம்புப் பட்டை . |
| குரங்குப்பிடி | விடாப்பிடி ; பிடிவாதம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 349 | 350 | 351 | 352 | 353 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குயில்தல் முதல் - குரவம்பாவை வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், சொல்லுதல், செய்தல், குரக்குவலி, வாத்தியம், வரும், வலிப்பு, கட்டுதல், பதித்தல், கூவுதல், பின்னுதல், துளைத்தல், நடைபெறுதல், ஒலித்தல், செறிதல், கேழ்வரகு, நெய்தல், கூடு, குளம்பு, குதிரை, கைகால்களில், நோய், அமைக்கும், குரங்குக்கு, முகம், ஒருவகை, பொது, குரங்கு, தாழ்ப்பாள், சந்திரன், எட்டிமரம், குரங்கம், குரக்குவாதம், ஏளனம், முதலியவற்றின், புத்தி, பறவைக், குரல், தினை, கருவி, மருதோன்றிமரம், பறவை, உத்தி, நேர்மையற்ற, குதிரைக், காண்க

