தமிழ் - தமிழ் அகரமுதலி - குரவரம் முதல் - குருத்தல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| குருக்கள் | ஆசாரியார் ; சிவன்கோயில் பூசாரி ; பார்ப்பனர் அல்லாத சைவர்க்குக் கிரியை செய்விக்கும் சைவ வேளாளர் ; கௌரவர் . |
| குருக்கன் | மெலிவிக்கும் நோய் . |
| குருக்கு | பிரமதண்டுச்செடி ; இளம்பனை முதலியவை நெருங்கிய தோப்பு . |
| குருக்குத்தி | பிரமதண்டுச்செடி ; பயிரில் விழும் நோய்வகை . |
| குருக்கொடுத்தல் | கோயிற்பூசை புரிதல் ; கொடுமைசெய்யத் தூண்டல் . |
| குருக்கொள்ளுதல் | குருவின் தன்மையை மேற்கொள்ளுதல் . |
| குருகு | விலங்கு முதலியவற்றின் இளமை ; குட்டி ; குருத்து ; வெண்மை ; பறவை ; நாரை ; அன்றில் ; கோழி ; மூலநாள் ; கொல்லுலை மூக்கு ; கைவளை ; குருக்கத்திமரம் ; கல்லால்வகை ; ஒரு நாடு ; இடைச்சங்க நூல்களுள் ஒன்று . |
| குருகுபெயர்க்குன்றம் | இமயமலை அடிவாரத்திலுள்ள குன்று . |
| குருகுமண் | வெண்மணல் . |
| குருகுமணல் | வெண்பொடி மணல் . |
| குருகுருத்தல் | நமைத்தல் ; நெஞ்சை உறுத்துதல் . |
| குருகுலம் | குரு மரபு ; குருவின் வாழ்விடம் . |
| குருகுலவாசம் | கல்வியின் பொருட்டு மாணாக்கர் ஆசிரியருடன் வாழ்தல் . |
| குருகூர் | நம்மாழ்வார் தோன்றிய ஆழ்வார்திருநகரி . |
| குருகை | நம்மாழ்வார் தோன்றிய ஆழ்வார்திருநகரி . |
| குருச்சி | சீனக்காரம் ; நாற்காலி . |
| குருசந்திரயோகம் | வியாழனுஞ் சந்திரனும் ஓர் இராசியிற் கூடியிருக்கும் யோகம் . |
| குருசம் | வெண்தோன்றிக்கிழங்கு . |
| குருசில் | காண்க : குரிசில் . |
| குருசு | சிலுவை . |
| குருசேவை | ஆசாரியனை வழிபடுகை . |
| குருட்டடியாய் | முன்னதாக நினையாதிருத்தல் ; தற்செயலாய் . |
| குருட்டாட்டம் | கண்மூடித்தனமான செய்கை . |
| குருட்டுக்கண்ணாடி | முகம் தெரியாத கண்ணாடி . |
| குருட்டுக்கல் | ஒளிமங்கின கல் . |
| குருட்டுச்சாயம் | மங்கலான சாயம் . |
| குருட்டுத்தனம் | அறியாமை , கண்மூடித்தனம் . |
| குருட்டுநாள் | செவ்வாயும் சனியும் . |
| குருட்டுநியாயம் | கண்மூடித்தனமான நியாயம் . |
| குருட்டுப்பத்தி | அறியாமையான பக்தி . |
| குருட்டுப்போக்காய் | கண்மூடித்தனமாய் ; தற்செயலாய் . |
| குருட்டுயோகம் | முயற்சியின்றிச் செல்வம் கிட்டுகை . |
| குருட்டுவழி | கண்மூடித்தனமான முறை . |
| குருட்டுவாக்கில் | தற்செயலாய் . |
| குருட்டெழுத்து | மங்கலான எழுத்து . |
| குருடன் | பார்வையில்லாதவன் ; சுக்கிரன் ; திருதராட்டிரன் . |
| குருடி | பார்வையில்லாதவள் . |
| குருடு | பார்வையின்மை ; ஒளியின்மை ; ஆடை முதலியவற்றின் முருட்டுப்பக்கம் ; மூடன் ; காதின் வெளிப்புறத்திலுள்ள செவிள் . |
| குருத்தடைத்தல் | நெல் முதலிய பயிர்கள் குருத்து விடாதிருத்தல் ; கதிர் பொதிநிரம்புதல் . |
| குருத்தல் | தோன்றுதல் ; வேர்க்குரு உண்டாதல் ; சினங்கொள்ளுதல் . |
| குரவரம் | குறிஞ்சாக்கொடி . |
| குரவன் | அரசன் ; ஆசிரியன் அல்லது குரு , தாய் , தந்தை , தமையன் என்னும் ஐங்குரவருள் ஒருவர் ; மந்திரி ; பிரமன் . |
| குரவு | குராமரம் ; குருத்தன்மை . |
| குரவை | மகளிர் கைகோத்தாடுங் கூத்து ; மகிழ்ச்சி ஒலி ; கடல் . |
| குரவைக்கூத்து | எழுவரேனும் ஒன்பதின்மரேனும் கைகோத்தாடும் ஒருவகைக் கூத்து . |
| குரவைப்பறை | ஒருவகைக் குறிஞ்சிப்பறை . |
| குரவையிடுதல் | நாவால் குழறி மகிழ்ச்சி ஒலி செய்தல் ; குலவையிடுதல் . |
| குரா | குராமரம் . |
| குராசானி | ஒருவகைப் பூண்டு . |
| குரால் | புகர்நிறம் ; ஈனாப் பருவத்து ஆடு ; பசு ; கோட்டான் . |
| குராற்பசு | கபிலைநிறப் பசு . |
| குரிகிற்றாளி | ஒரு கிழங்குவகை . |
| குரிசில் | பெருமையிற் சிறந்தோன் ; உபகாரி ; தலைவன் . |
| குரீஇ | குருவி ; பறவை . |
| குரீஇப்பூளை | சிறுபூளை . |
| குரு | அம்மை முதலிய கொப்புளங் காணும் நோய் ; புண் ; வேர்க்குரு ; புளகம் ; கொட்டை ; ஒளி ; முத்துக்குற்றங்களுள் ஒன்று ; துரிசு ; உலோகங்களைப் பேதிக்குஞ் சிந்தூரம் முதலியவை ; இரசம் ; ஞானாசாரியன் ; ஆசிரியன் ; புரோகிதன் ; தகப்பன் ; அரசன் ; வியாழன் ; பூசநாள் ; பாரம் ; பருமன் ; பெருமை ; நெடில் ; நெடிலும் நெடிலொற்றும் குறிலொற்றுமாகிய அசைகள் ; இரன்டு மாத்திரையின் அளவு ; எட்டு அட்சர காலங்கொண்ட தாள அங்கவகை ; குருவருடம் ; ஒரு தேசம் ; குருகுலத் தலைவன் . |
| குருக்கண் | முலை . |
| குருக்கத்தி | மாதவிக்கொடி . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 350 | 351 | 352 | 353 | 354 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குரவரம் முதல் - குருத்தல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், குரு, தற்செயலாய், கண்மூடித்தனமான, வேர்க்குரு, முதலிய, மங்கலான, அரசன், ஆசிரியன், தலைவன், ஒருவகைக், மகிழ்ச்சி, கூத்து, குராமரம், குரிசில், முதலியவற்றின், குருவின், முதலியவை, பிரமதண்டுச்செடி, குருத்து, பறவை, ஆழ்வார்திருநகரி, தோன்றிய, நம்மாழ்வார், ஒன்று, நோய்

