முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » கும்பிபாகம் முதல் - குமித்தல் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - கும்பிபாகம் முதல் - குமித்தல் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| குமித்தல் | குவித்தல் ; அரிசி முதலியவற்றை அதிகமாகக் குற்றுதல் . |
| குமிண்டி | கீரைவகை . |
| கும்மலித்தல் | விளையாடுதல் . |
| கும்மாயம் | குழைத்துச் சமைத்த பருப்பு ; சுண்ணாம்பு . |
| கும்மாளங்கொட்டுதல் | குதித்து விளையாடுகை ; குதித்தாடும் ஒர் அநாகரிகக் கூத்து . |
| கும்மாளம் | குதித்து விளையாடுகை ; குதித்தாடும் ஓர் அநாகரிகக் கூத்து . |
| கும்மி | மகளிர் கைகொட்டிப் பாடியாடும் கூத்து ; கும்மிப்பாட்டு . |
| கும்மிப் பாட்டு | மகளிர் குதித்து விளையாடுகையில் பாடும் ஒருவகைப் பாட்டு . |
| கும்மியடித்தல் | பாடிக்கொண்டு கைகொட்டியாடுதல் . |
| கும்மிருட்டு | மிக்க இருள் . |
| கும்முதல் | ஆடை கசக்குதல் ; உரலில் மெல்லக் குற்றுதல் ; கையால் பிசைந்து மெல்லிதாக்குதல் ; கூடுதல் . |
| கும்மெனல் | இருளடர்ச்சி ; காதடைப்பு முதலியவற்றைக் கூறுமிடத்து வரும் குறிப்பு . |
| குமஞ்சம் | பறங்கிச் சாம்பிராணி ; தூபவர்க்கம் . |
| குமஞ்சான் | பறங்கிச் சாம்பிராணி ; தூபவர்க்கம் . |
| குமட்டு | ஒக்காளம் , அருவருப்பினால் உண்டாக்கும் வாந்தி . |
| குமட்டுதல் | வாந்திக்கு வருதல் ; நிறைய உண்டு தெவிட்டுதல் ; கக்குதல் ; அருவருத்தல் . |
| குமடு | கன்னம் . |
| குமண்டை | ஒருவகை மகிழ்ச்சிக் கூத்து . |
| குமண்டையிடுதல் | மகிழ்ச்சியாற் குதித்தல் ; நிறைய உண்டு தெவிட்டல் . |
| குமதி | புத்திகேடன் , அறிவு கெட்டவன் . |
| குமர் | மணமாகாதவள் , கன்னி ; கன்னிமை , அழியாத்தன்மை . |
| குமரகண்டம் | ஒரு வலிப்புவகை . |
| குமரகண்டம்ன் | ஒரு வலிப்புவகை . |
| குமரகம் | மாவிலங்கமரம் . |
| குமரகோட்டம் | காஞ்சிபுரத்தில் உள்ள முருகன் கோயில் . |
| குமரதண்டம் | முருகக் கடவுளைப் படைத்தலைவனாகக் கொண்ட தேவர் படை . |
| குமரம் | கொம்பில்லாத விலங்கு ; மறைந்த ஒரு தமிழ் இலக்கணநூல் . |
| குமரவேள் | முருகக்கடவுள் . |
| குமரன் | இளைஞன் ; மகன் ; முருகன் ; வயிரவன் . |
| குமரி | கன்னி ; பருவம் அடைந்த பெண் ; மகள் ; துர்க்கை ; குமரியாறு ; கன்னியாகுமரி ; அழிவின்மை ; கற்றாழை ; மலைநிலத்துச் செய்யும் வேளாண்மை ; சொன்னபேதி . |
| குமரிக்கடல் | குமரியருகிலுள்ள கடல் . |
| குமரிக்கோடு | குமரிக்கடற் பக்கத்திலிருந்த ஒரு மலை . |
| குமரிச் சேர்ப்பன் | குமரித் துறைக்குரிய பாண்டியன் . |
| குமரிஞாழல் | மல்லிகை ; சங்கபுட்பி . |
| குமரித்துறை | கன்னியாகுமரி ; தீர்த்தத்துறை . |
| குமரித்தெய்வம் | கன்னியாகுமரித் தெய்வம் . |
| குமரிப்பகவதி | கன்னியாகுமரித் தெய்வம் . |
| குமரிப்படை | அழியாச் சேனை . |
| குமரிப்போர் | கன்னிப்போர் ; முதற்போர் . |
| குமரிமதில் | அழியாக் கோட்டை . |
| குமதிமூத்தல் | கன்னியாயிருந்து மூபபடைதல் ; பயனின்றிக் கழிதல் . |
| குமரியாடுதல் | கன்னியாகுமரியில் நீராடுதல் ; கன்னிப்பெண்ணோடு கூடல் . |
| குமரியிருட்டு | கன்னியிருட்டு , விடியற்கு முன் உள்ள இருள் . |
| குமரியிருத்தல் | வீணே கழிதல் . |
| குமல் | அரிவாள் . |
| குமலி | துளசி . |
| குமார்க்கம் | தீயவழி . |
| குமாரசுவாமி | முருகக்கடவுள் . |
| குமாரத்தி | மகள் . |
| குமாரம் | இளமை ; உருக்கி ஒடவைத்த பொன் . |
| குமாரன் | மகன் ; இளைஞன் ; முருகக்கடவுள் . |
| குமாரி | புதல்வி ; குமரி ; காளி ; அழியா இளமையினள் . |
| குமிகை | முதிராத எள்ளு ; வெள்ளெள்ளு . |
| குமிட்டித்தல் | குமிழ்போலாதல் ; திரளுதல் . |
| குமிடக்கல் | கிட்டக்கல் . |
| குமிண்சிரிப்பு | புன்சிரிப்பு . |
| கும்பிபாகம் | ஏழு நரகத்துள் ஒன்று , பாவம் செய்தவரைக் குயவர் சூளையில் சுடுவதுபோல் வாட்டுவதாகிய நரகம் . |
| கும்பீரம் | முதலை . |
| கும்பீரளம் | முதலை . |
| கும்பு | கூட்டம் , திரள் ; அடிப்பற்று . |
| கும்புதல் | அடிப்பற்றுதல் , சமைத்த உணவு தீய்ந்து போதல் . |
| கும்பை | சிறுமரம் ; திக்காமல்லிவகை ; சேரி ; கும்பகோணம் ; குடம் ; வேசி ; ஒரு வாழை வகை ; பெருங்கம்பளிமரம் ; ஒமகுண்டத்தின் வேதிகை . |
| கும்மட்டம் | ஒருவகைச் சிறுபறை ; காகிதத்தினாலான கூட்டுவிளக்கு ; விமானக் கூண்டு ; கட்டட வளைவு . |
| கும்மட்டி | குதிக்கை ; குதித்து விளையாடுதல் ; ஒரு வாத்தியம் ; தீச்சட்டி ; ஆற்றுத்தும்மட்டிச் செடி . |
| கும்மல் | ஆடையை நனைத்துக் கசக்குதல் ; கூட்டம் ; அரிவாள் . |
| கும்மலி | தடித்தவள் , பருத்தவள் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 347 | 348 | 349 | 350 | 351 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கும்பிபாகம் முதல் - குமித்தல் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், கூத்து, குதித்து, முருகக்கடவுள், உள்ள, குமரி, மகன், இளைஞன், மகள், முருகன், கன்னியாகுமரித், முதலை, கூட்டம், அரிவாள், கழிதல், வலிப்புவகை, தெய்வம், கன்னியாகுமரி, உண்டு, அநாகரிகக், மகளிர், குதித்தாடும், விளையாடுகை, விளையாடுதல், சமைத்த, பாட்டு, இருள், நிறைய, குற்றுதல், தூபவர்க்கம், சாம்பிராணி, கசக்குதல், பறங்கிச், கன்னி

