தமிழ் - தமிழ் அகரமுதலி - குணம் முதல் - குத்தன் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| குணுக்கு | மாதர் காதணியுள் ஒன்று ; காது பெருக்க இடும் ஒலைச்சுருள் ; மீன்வலையின் ஈயக்குண்டு ; வெள்ளி ; பணியாரவகை . |
| குணுக்குத்தடி | இரும்புப் பூணிட்ட கனத்த கழி . |
| குணுக்குதல் | வளைத்தல் ; துணுக்குதல் . |
| குணுகுணுத்தல் | மூக்காற் பேசுதல் ; முணுமுணுத்தல் . |
| குணுகுணெனல் | முணுமுணுத்தற் குறிப்பு . |
| குணுகுதல் | கொஞ்சுதல் . |
| குணுங்கர் | இழிந்தோர் ; புலையர் ; தோற்கருவியாளர் ; குயிலுவர் . |
| குணுங்கு | பிசாசு ; கொச்சை நாற்றம் . |
| குணைவண்டு | வண்டுவகை . |
| குத்தகை | குறிப்பிட்ட காலத்துக்கு அனுபவ உரிமையளிக்கும் ஒப்பந்தக் கட்டுபாட்டு முறை ; குத்தகைத் தொகை . |
| குத்தகைக்காரன் | குத்தகை எடுப்பவன் . |
| குத்தகைச்சரக்கு | ஒப்பந்தஞ் செய்த சரக்கு . |
| குத்தகைச்சீட்டு | குத்தகைப் பத்திரம் . |
| குத்தகைப்பொருள் | குத்தகைக்கு ஒப்பந்தப்படி கட்டவேண்டிய பொருள் . |
| குத்தகைமாறுதல் | குத்தகைக் காலம் முடிவு பெறுகை . |
| குத்தகையெடுத்தல் | குத்தகைக்கு வாங்குதல் . |
| குத்தம் | எருது . |
| குத்தரசம் | பெருங்காயம் . |
| குத்தல் | உடம்பின் உள்நோவு ; மனம் நோவச் செய்கை ; தெருவிற்கு எதிராக வீடு அமைந்திருப்பது முதலிய குற்றம் ; நீர்க்குத்தலான இடம் ; குற்றலரிசி . |
| குத்தலரிசி | குற்றித் தீட்டிய அரிசி . |
| குத்தன் | காப்பவன் ; வணிகர் பட்டம் ; குப்த மரபில் வந்த அரசன் . |
| குணம் | பொருளின் தன்மை ; ஒழுக்கத் தன்மை ; சாத்துவிக இராசத தாமதமாகிய மூலகுணங்கள் ; காப்பியத்தைச் சிறப்பிக்கும் செறிவு , தெளிவு முதலிய தன்மை ; அனுகூலம் ; சுகம் ; மேன்மை ; புத்தித் தெளிவு ; நிறம் ; வில்லின் நாண் ; குணவிரதம் ; குடம் ; கயிறு . |
| குணமணி | காண்க : குணவான் . |
| குணமாக்குதல் | நலமாக்குதல் ; சீர்திருத்தல் . |
| குணமாதல் | நலமடைதல் . |
| குணமுள்ளவன் | நற்குணம் உடையவன் . |
| குணலி | சீந்திற்கொடி . |
| குணலை | ஆரவாரக் கூத்து ; வீராவேசத்தாற் கொக்கரிக்கை ; நாணத்தால் உடல் வளைகை . |
| குணலையிடுதல் | கொக்கரித்தல் ; இரைந்து கூத்தாடுதல் . |
| குணவதம் | குணவிரதம் , ஒருவித சைன நோன்பு ; நற்குணம் . |
| குணவதன் | நற்குணம் உடையவன் ; குணவிரதத்தை அனுட்டிப்பவன் . |
| குணவதி | நற்குணமுள்ளவன் . |
| குணவந்தன் | குணவான் . |
| குணவாக்கு | சிறப்பாக அமைந்த குணம் ; சொந்தப் பழக்கம் . |
| குணவாகுபெயர் | பண்புப் பெயரைப் பண்பிக்கு உரைத்தல் . |
| குணவான் | காண்க : குணமுள்ளவன் . |
| குணவியது | மேன்மையானது . |
| குணவிரதம் | மகாவிரதத்துக்கு அடுத்தபடியாகக் கொள்ளும் ஒரு சைன நோன்பு . |
| குணன் | குணமுள்ளவன் , நற்குணம் உடையவன் . |
| குணனம் | எண்வகைக் கணிதத்துள் ஒன்றாகிய பெருக்கல் . |
| குணனீயம் | பெருக்கப்படும் எண் . |
| குணாக்கர நியாயம் | மரம் , புத்தகம் முதலியவற்றில் புழுவின் அரிப்பு எழுத்தாதல் போலத் தற்செயலாக நேர்வதைக் குறிக்கும் நெறி . |
| குணாகுணம் | நன்மையுந் தீமையும் ; குணமும் குணமின்மையும் . |
| குணாட்டம் | ஓருவகை வரிக்கூத்து . |
| குணாதிசயம் | குணவிசேடம் . |
| குணாதீதம் | குணங்கடந்தது . |
| குணாது | கிழக்கிலுள்ளது . |
| குணாம்பி | கோமாளி . |
| குணாம்பு | பகடி . |
| குணாம்புதல் | பகடி பேசுதல் . |
| குணாலங்கிருதன் | நற்குணத்தையே அணியாக உடையவன் . |
| குணாலம் | ஒருவகை ம்கிழ்ச்சிக்கூத்து ; வீராவேசத்தாற் கொக்கரித்தல் ; ஒரு பறவை . |
| குணாலயன் | நற்குணமுள்ளவன் , குணங்களுக்கு இருப்பிடமானவன் . |
| குணாலை | ஆரவாரத்துடன் நடிக்குங் கூத்து . |
| குணாளன் | நற்குணமிக்கவன் . |
| குணி | பண்பி ; முடமானது ; நற்குணம் உடையவன் ; சொத்தைக் கையன் . |
| குணித்தல் | கணித்தல் ; ஆலோசித்தல் ; வரையறுத்தல் ; பெருக்குதல் . |
| குணிதம் | பெருக்கிவந்த தொகை , மடங்கு . |
| குணிப்பு | அளவு ; ஆராய்ச்சி ; மதிப்பு . |
| குணில் | குறுந்தடி ; பறையடிக்குந் தடி ; கவண் . |
| குணு | புழு . |
| குணுக்கம் | வருத்தம் , துன்பம் . |
| குணுககன் | மூக்காற் பேசுவோன் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 342 | 343 | 344 | 345 | 346 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குணம் முதல் - குத்தன் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், உடையவன், நற்குணம், குணமுள்ளவன், குணவான், குணவிரதம், தன்மை, வீராவேசத்தாற், பகடி, நற்குணமுள்ளவன், நோன்பு, கொக்கரித்தல், கூத்து, காண்க, தொகை, குத்தகை, பேசுதல், குத்தகைக்கு, முதலிய, தெளிவு, குணம், மூக்காற்

