முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » குத்தாங்கல் முதல் - குத்துவெட்டு வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - குத்தாங்கல் முதல் - குத்துவெட்டு வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| குத்துக்கம்பு | நுனி கூர்மையான கழி . |
| குத்துக்கல் | செங்குத்துக் கல் ; நிறுதிட்டமாய் வைக்கப்பட்ட கல் ; ஏரி நீரின் ஆழத்தைக் காட்டும் அளவுகோல் . |
| குத்துக்கழி | கட்டைவண்டியின் பாரில் இருபக்கத்திலும் நடும் கழி , குதிகால் . |
| குத்துக்காயம் | ஆயுதங்கொண்டு குத்துவதனால் உண்டாகிய புண் . |
| குத்துக்கால் | தாங்குகால் ; நெசவுத்தறியின் ஒர் உறுப்பு ; தடை . |
| குத்துக்காலிடுதல் | காலைக் குத்திட்டு உட்கார்தல் . |
| குத்துக் குடைச்சல் | வாயுவால் உண்டாகும் நோவு . |
| குத்துக்கு நிற்றல் | எதிர்த்து நிற்றல் ; வாதாடுதல் . |
| குத்துக்குளம்பு | குதிரை முதலிய விலங்கின் நெட்டான குளம்பு . |
| குத்துக்கூலி | நெல் முதலியவை குற்றுவதற்குக் கொடுக்குங் கூலி . |
| குத்துக்கொம்பு | விலங்கின் நேர்கொம்பு . |
| குத்துக்கோல் | தாற்றுக்கோல் , முனையின் கூரிய இரும்புள்ள கோல் . |
| குத்துச்சண்டை | குத்துப்போர் ; மற்போர் . |
| குத்துண்ணுதல் | செங்குத்தாக நிற்றல் . |
| குத்துணி | ஒரு புடைவை ; தமுக்குணி ; குத்துப்பட்டவன் ; இழிவுபட்டவன் . |
| குத்துத்திராய் | ஒரு கீரைவகை . |
| குத்துதல் | துளையிடுதல் ; ஊசி முதலியவற்றால் துளையிடுதல் ; படைக்கலன்களால் குத்துதல் ; தைத்தல் ; கொம்பினால் முட்டுதல் ; முட்டியால் குத்துதல் ; புள்ளி குத்துதல் ; முத்திரை குத்துதல் ; உலக்கையால் குற்றுதல் ; தின்னுதல் ; கிண்டுதல் ; சுடுசொல் சொல்லுதல் ; வருத்துதல் ; அகழ்தல் . |
| குத்துப்பாடு | பிறர் மனம் நோவச் செய்தல் ; குற்றம் . |
| குத்துப்பாறை | செங்குத்தான பாறை ; நெற்குற்றும் பாறை ; மலைப் பக்கத்திலுள்ள செங்குத்தான கற்குவியல் . |
| குத்துப்புரை | நெற்குற்றும் இடம் . |
| குத்துப்போர் | செங்குத்தாக வைக்குஞ் சூடு ; மற்போர் , குத்துச் சண்டை ; தீராப் பகை . |
| குத்துமதிப்பாய் | சுமாராய் . |
| குத்துமானம் | கட்டட வளைவுக்குமேல் குத்தாக வைக்கும் செங்கல் வேலை . |
| குத்துவல்லயம் | கையிற்கொண்டு குத்துதற்கு உதவும் ஈட்டி . |
| குத்துவலி | இசிவுநோவு . |
| குத்துவாதை | பசிவருத்தம் . |
| குத்துவாள் | உடைவாள் . |
| குத்துவிளக்கு | நிலையாக நிறுத்தப்படும் விளக்கு . |
| குத்துவெட்டு | சண்டையிற்படுங் காயங்கள் ; தீராப் பகை ; எழுத்துக் கிறுக்கு ; நாணயம் முதலியவற்றில் படும் பழுது . |
| குத்தாங்கல் | செங்குத்தாக வைக்குங் கல் அல்லது செங்கல் ; குத்துக்கல் . |
| குத்தாணி | மரக் கைப்பிடியமைந்த நீண்ட ஊசி வகை . |
| குத்தாமற்குத்துதல் | குறிப்பாகக் குற்றத்தைச் சொல்லிக் காட்டுதல் . |
| குத்தார்க்கு | குத்தூசியால் வாங்கித் தைக்கும் பனைநார் . |
| குத்தாலம் | திருவாத்தி , காட்டாத்தி . |
| குத்தாலா | கடுகுரோகிணி . |
| குத்தாளை | மானவாரியாக விளையும் நெல்வகை . |
| குத்தி | கோணிமூட்டையினின்றும் அரிசி முதலியவற்றை எடுக்கும் கருவி , குத்தூசி ; கலப்பைக் கூர் ; திரிகரண அடக்கம் ; மண் ; மாறுபாடு . |
| குத்திக்காட்டுதல் | ஒருவன் குற்றத்தைச் சுட்டிக் காட்டி அவன் மனத்தைப் புண்படச் செய்தல் . |
| குத்திக்கொல்லன் | ஆயுதபாணியாய்ப் பொருள் கொண்டு செல்பவன் . |
| குத்திச்செருப்பு | குதியிற் கனமுள்ள செருப்பு . |
| குத்திப்பிடுங்குதல் | வாந்திசெய்ய வருதல் . |
| குத்திப்பேசுதல் | நோவும்படி ஒருவரைச் சுட்டிப் பேசுதல் . |
| குத்தியளத்தல் | அளக்குங் கருவியைத் தானியத்திற் பாய்ச்சியளத்தல் . |
| குத்தியோட்டம் | இரண்டு விலாப்பக்கங்களிலும் கூரான கம்புகளைக் குத்திக்கொண்டு கோயிலை வலம்வரும் ஒரு வேண்டுதல் . |
| குத்திரக்காரன் | வஞ்சகன் . |
| குத்திரப்பேச்சு | இகழ்ந்துரைக்குஞ் சுடுசொல் . |
| குத்திரம் | வஞ்சகம் ; இழிவு ; ஏளனச் சொல் ; குரூரம் ; மலை ; சணல் ; பொய் . |
| குத்திரவித்தை | தந்திரம் ; சூனிய வித்தை . |
| குத்திரன் | வஞ்சகன் . |
| குத்திருமல் | கக்குவான் இருமல் . |
| குத்தினி | ஒருவகைப் பட்டுச்சீலை . |
| குத்தீட்டி | ஈட்டிவகை . |
| குத்து | கைமுட்டியால் தாக்குவது ; ஈட்டி முதலியவற்றால் தாக்குகை ; உரலிற் குற்றுதல் ; புள்ளி ; செங்குத்து ; நோவு ; பிடி ; தெரு முதலியவற்றின் பாய்ச்சல் . |
| குத்துக்கட்டை | ஒன்றைத் தாங்குவதற்கு நட்டு நிறுத்தப்படும் கட்டை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 343 | 344 | 345 | 346 | 347 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குத்தாங்கல் முதல் - குத்துவெட்டு வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், குத்துதல், செங்குத்தாக, நிற்றல், செங்குத்தான, தீராப், நெற்குற்றும், பாறை, செங்கல், வஞ்சகன், குற்றத்தைச், நிறுத்தப்படும், ஈட்டி, செய்தல், புள்ளி, குத்துப்போர், விலங்கின், நோவு, குத்துக்கல், மற்போர், துளையிடுதல், குற்றுதல், சொல், முதலியவற்றால், சுடுசொல்

