தமிழ் - தமிழ் அகரமுதலி - குத்துனி முதல் - குதிரைமுள் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| குதிரைமுள் | குதிரையை விரைவுபடுத்தற்கு ஏறுவோர் காலில் இட்டுக்கொள்ளும் முட்கருவி . |
| குதர்க்கி | போலித் தர்க்கிகன் , விதண்டை பேசுவோன் . |
| குதர்செல்லுதல் | நெறிதவறிச் செல்லுதல் . |
| குதர்தல் | கோதி யெடுத்தல் ; அடியோடு பெயர்த்தல் ; குதர்க்கவாதம் பண்ணுதல் . |
| குதரம் | மலை . |
| குதலை | மழலைச்சொல் ; இனிய மொழி ; அறிவிலான் . |
| குதலைமை | பொருள் விளங்காமை ; தளர்ச்சி . |
| குதற்று | நெறிதவறுகை . |
| குதறுதல் | சிதறுதல் ; கிண்டுதல் ; நெறிதவறுதல் ; புண் மிகுதல் ; குலைதல் . |
| குதனம் | துப்புரவின்மை ; திறமையின்மை ; அக்கறையின்மை . |
| குதனை | துப்புரவின்மை ; திறமையின்மை ; அக்கறையின்மை . |
| குதனைக்கேடு | துப்புரவின்மை ; திறமையின்மை ; அக்கறையின்மை . |
| குதாவிடை | அலங்கோலம் ; காலத்தாழ்வு . |
| குதானன் | தாளிச்செடி . |
| குதி | குதிப்பு ; குதிகால் ; முயற்சி . |
| குதிகள்ளன் | குதியில் வரும் ஒரு புண் வகை . |
| குதிகால் | குதிங்கால் , காற்குதி . |
| குதிகொள்ளுதல் | குதித்தல் ; பெருகுதல் ; பொலிதல் . |
| குதிங்கால் | உள்ளங்காலின் பின்பாகம் . |
| குதித்தல் | பாய்தல் ; நீர் முதலியன எழும்பி விழுதல் ; கூத்தாடுதல் ; செருக்குக் கொள்ளுதல் ; கடந்துவிடுதல் ; துள்ளல் . |
| குதிப்பு | குதிக்கை ; கருவங் கொள்ளல் ; சுதும்பு மீன் . |
| குதிமுள் | குதிரைமுள் . |
| குதிர் | தானியம் வைக்குடங் கூடு ; ஒரு மர வகை . |
| குதிர்தல் | தீர்மானப்படுதல் ; பூப்பெய்தல் . |
| குதிரம் | 35 கழஞ்சு அளவுள்ள கருப்பூரம் . |
| குதிரி | அடங்காதவள் . |
| குதிரை | பரி ; கயிறு முறுக்குங் கருவி ; யாழின் ஒர் உறுப்பு ; துப்பாக்கியின் ஒர் உறுப்பு ; தாங்குசட்டம் ; குதிரைமரம் ; ஊர்க்குருவி ; அதியமானின் குதிரைமலை . |
| குதிரைக்கயிறு | குதிரையின் வாய்வடம் . |
| குதிரைக்காரன் | குதிரைப் பாகன் ; குதிரை வீரன் . |
| குதிரைக்குளம்படி | நீர்ச்சேம்புச்செடி ; அடப்பங்கொடி . |
| குதிரைக்குளம்பு | குதிரையின் குரம் ; நீர்க் குளிரிச்செடி . |
| குதிரைக்கொம்பு | கிடைத்தற்கரியது . |
| குதிரைச் சம்மட்டி | குதிரைச் சவுக்கு . |
| குதிரைச்சாணி | குதிரைக்காரன் ; குதிரை வைத்தியன் . |
| குதிரைச் சாரி | குதிரையின் சுற்றி ஒடுங் கதி . |
| குதிரைச்சேவகன் | குதிரை வீரன் . |
| குதிரைத்தறி | நீருடைப்பை அடைத்தற்கு வைக்கோல் முதலியவற்றோடு நிறுத்தும் மரச்சட்டம் . |
| குதிரை நடை | பெருமிதநடை ; கம்பீரநடை . |
| குதிரைநிலை | குதிரைக் கொட்டில் . |
| குதிரைப் பட்டை | மேற்கூரை தாங்கும் கட்டை ; கூரையில் ஒடு நழுவாமலிருக்கும்படி அடுக்கிய ஒட்டின் முகப்பில் பட்டையாகப் பூசப்படும் சாந்து . |
| குதிரைப்படை | குதிரைச்சேனை . |
| குதிரைப் பந்தி | காண்க : குதிரைநிலை . |
| குதிரைப்பல்லன் | வெள்ளைப்பூண்டு . |
| குதிரைப்பிடுக்கன் | பீநாறிமரம் . |
| குதிரைமரம் | கால்வாய் அடைக்குங் கதவு ; உடற்பயிற்சிக்குரிய தாண்டுமரம் ; குதிரைத்தறி ; நெசவிற் பாவு தாங்குதற்குரிய மரச் சட்டம் . |
| குதிரைமறம் | போர்க் குதிரையின் திறப்பாட்டைக் கூறும் புறத்துறை . |
| குதிரைமறி | குதிரைக்குட்டி ; பெட்டைக்குதிரை . |
| குதிரைமுகம் | முழந்தாள் எலும்பு ; குளத்தின் கரைக்கட்டிற்கு வலியுதவும் முட்டுக் கட்டடம் . |
| குதிரைமுகவோடம் | பரிமுக அம்பி , குதிரையின் உருவை முகப்பிற்கொண்ட தோணி . |
| குத்துனி | ஒருவகைப் பட்டுச்சீலை ; பட்டுக் கலந்த துணிவகை . |
| குத்தூசி | குத்தித் தைக்கும் ஊசி ; கூரைவேயும் ஊசி ; கோணிமூட்டைகளில் நெல் முதலியவற்றைக் குத்தி எடுக்கும் கருவி . |
| குத்தென விழுதல் | தலைகீழாய் விழுதல் ; செங்குத்தாய் விழுதல் . |
| குதக்குதல் | காண்க : குதப்புதல் . |
| குதகீலம் | மூலநோய் . |
| குதட்டுதல் | குதப்புதல் ; அதக்குதல் ; குழறிப் பேசுதல் . |
| குதப்புதல் | மெல்லுதல் ; அதக்குதல் . |
| குதபம் | பதினைந்தாகப் பகுக்கப்பட்ட பகற்காலத்தின் எட்டாம் பாகம் ; தருப்பைப் புல் . |
| குதபன் | சூரியன் ; தீ . |
| குதம் | ஒமம் , தருப்பை ; மலவாய் ; தும்மல் ; வெங்காயம் ; மிகுதி . |
| குதம்புதல் | துணி அலசுதல் ; கொதித்ததல் ; சினத்தல் . |
| குதம்பை | காது பெருக்குவதற்காக இடும் ஒலை ; சீலை முதலியவற்றின் சுருள் ; காதணிவகை . |
| குதர் | பிரிவு . |
| குதர்க்கக்காரன் | விதண்டாவாதி . |
| குதர்க்கம் | முறைகெட்ட தர்க்கம் ; தடை . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 344 | 345 | 346 | 347 | 348 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குத்துனி முதல் - குதிரைமுள் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், குதிரையின், குதிரை, விழுதல், குதிரைப், குதிரைச், அக்கறையின்மை, திறமையின்மை, குதப்புதல், துப்புரவின்மை, வீரன், குதிரைநிலை, அதக்குதல், காண்க, குதிரைக்காரன், குதிரைத்தறி, கருவி, குதிகால், குதிப்பு, புண், குதிங்கால், குதித்தல், உறுப்பு, குதிரைமுள், குதிரைமரம்

