முதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » தமிழ் - தமிழ் அகரமுதலி » குடைந்தாடுதல் முதல் - குண்டுக்காயம் வரை
தமிழ் - தமிழ் அகரமுதலி - குடைந்தாடுதல் முதல் - குண்டுக்காயம் வரை
| சொல் | அருஞ்சொற்பொருள் |
| குடோரி | கீறுகை ; பாம்புக்கடிக்கு மருந்து இடுகை ; வங்கமணல் ; வெங்காரம் ; வெள்ளைப்பாடாணம் . |
| குடோரிவைத்தல் | மண்டையைக் கீறி மருந்து பதித்தல் . |
| குண்டக்கணிகை | கற்பழிந்து வேசையானவள் . |
| குண்டக்கம் | கோள் ; வஞ்சனை . |
| குண்டக்கிரியை | ஒரு பண்வகை . |
| குண்டகம் | மண்பறிக்கும் கருவிவகை . |
| குண்டகன் | சோரநாயகனுக்குப் பிறந்தவன் . |
| குண்டடித்தல் | கோலி இரும்புக்குண்டு முதலியவற்றால் விளையாடுதல் ; கஞ்சாக் குடித்தல் ; தேர்வு முதலியவற்றில் தவறுதல் . |
| குண்டடியன் | ஆண்சிவிங்கி . |
| குண்டடுப்பு | ஒருவகைக் குழியடுப்பு . |
| குண்டணி | குறளைச்சொல் . |
| குண்டப்பணிவிடை | கீழ்த்தரமான ஊழியம் . |
| குண்டம் | வேள்விக்குண்டம் ; குழி ; வாவி ; குடுவை ; பானை ; கற்பழிந்துபோனவள் ; பன்றி . |
| குண்டம்பாய்தல் | வேண்டுதலுக்குத் தீக்குழியில் நடத்தல் . |
| குண்டலப்புழு | வளைந்து சுருண்டுகொள்ளும் புழுவகை . |
| குண்டலப்பூச்சி | வளைந்து சுருண்டுகொள்ளும் புழுவகை . |
| குண்டலம் | ஆடவர் காதணிவகை ; வானம் ; வட்டம் ; சுன்னம் . |
| குண்டலமண்டலம் | சுருண்டு வளைகை . |
| குண்டலன் | குண்டலந்தரித்தவன் . |
| குண்டலி | நாபித்தானம் ; கருவாய்க்கும் எருவாய்க்கும் நடுவிலிருப்பதாகக் கருதப்படும் மூலாதாரம் ; சீந்திற்கொடி ; சங்கஞ்செடி ; சுத்தமாயை ; பாம்பு ; மயில் ; மான் ; தாளகம் . |
| குண்டலிசத்தி | சுத்தமாயை . |
| குண்டலினி | மகாமாயை ; மூலாதாரத்திலுள்ள பாம்பின் வடிவமைந்த ஒரு சக்தி . |
| குண்டன் | விபசாரத்திற் பிறந்த மகன் ; பருத்து வலுத்தவன் ; இழிந்தவன் ; அடிமை ; வளைந்தது ; குண்டுணி சொல்வோன் . |
| குண்டனி | காண்க : குண்டணி . |
| குண்டாக்கன் | தலைவன் . |
| குண்டாஞ்சட்டி | வாயகன்ற பாண்டம் . |
| குண்டாணிக்கொடி | ஒரு கொடிவகை . |
| குண்டாந்தடி | பருத்துக் குறுகிய கைத்தடி . |
| குண்டா | வாயகன்ற பாண்டம் . |
| குண்டான்சட்டி | வாயகன்ற பாண்டம் . |
| குண்டி | ஆசனப்பக்கம் ; அடிப்பக்கம் ; இதயம் ; மீன்சினை ; மூத்திரப்பை . |
| குண்டிக்காய் | மூத்திரப் பிருக்கம் ; இதயம் . |
| குண்டிக்காயெரிச்சல் | மூத்திரப்பையிற் காணும் ஒரு நோய் . |
| குண்டிக்கொழுப்பு | ஆணவம் , இறுமாப்பு . |
| குண்டிகாய்தல் | உணவின்மையால் வயறு காய்தல் . |
| குண்டிகை | கமண்டலம் ; குடம் ; குடுக்கை ; நூற்றெட்டு உபநிதடங்களுள் ஒன்று . |
| குண்டித்துணி | அரைத்துணி . |
| குண்டியம் | குறளை ; மறைவை வெளிப்படுத்துகை ; பொய் . |
| குண்டில் | சிறுசெய் ; முதுகு . |
| குண்டீரம் | தத்துவம் ; வல்லமை . |
| குண்டு | பந்துபோல் உருண்டு கனப்பது ; நிறைகல் வகை ; துலாக்கோல் ; உருண்டை வடிவான ஒருவகைப் பாண்டம் ; பீரங்கிக் குண்டு ; உருண்டையான பொன்மணி ; கஞ்சா முதலியவற்றில் செய்த திரளை ; விலங்குகளின் விதை ; ஆண்குதிரை ; ஆழம் ; குழி ; குளம் ; தாழ்வு ; சிறுசெய் ; உரக்குழி . |
| குண்டுக்கட்டு | திரளச் சேர்த்துக்கட்டுங் கட்டு ; ஒருவனுடைய கழுத்தையும் காலையும் ஒன்று சேர்த்துத் திரளாகக் கட்டுங் கட்டு . |
| குண்டுக்கட்டை | பிளக்காத உருண்டை விறகு . |
| குண்டுக்கல் | தராசின் நிறைகல் ; வேலை செய்து செப்பனிடப்படாத கல் . |
| குண்டுக்கலம் | இருபத்துநான்கு மரக்கால் கொண்ட ஒரளவு . |
| குண்டுக்கழுதை | ஆண்கழுதை . |
| குண்டுக்காயம் | துப்பாக்கிக்குண்டு படடதால் உண்டான புண் . |
| குடைந்தாடுதல் | அமிழ்ந்து நீராடுதல் . |
| குடைநாட்கோள் | பகையரணைக் கொள்ள நினைத்து மேற்சென்ற வேந்தன் தன் குடையை நல்ல வேளையில் புறவீடு விடும் உழிஞைத்திணைத் துறை . |
| குடைநிலை | பகைமேல் செல்லும் அரசன் தன் குடையை நல்ல வேளையில் புறவீடு விடும் வஞ்சித்திணைத் துறை . |
| குடைமங்கலம் | நான்கு திக்கும் புகழ்மிக வீற்றிருந்த அரசனது குடையைப் புகழந்து கூறும் பாடாண் துறை . |
| குடைமிளகாய் | காப்பிரி மிளகாய் . |
| குடைமுல்லை | போரில் வெற்றிகண்ட அரசனது குடையைப் புகழ்ந்து கூறும் வாகைத் துறை . |
| குடையாணி | தலையிடம் உருண்டையான ஆணி ; கோயிற் குடையில் செருகும் ஆணி . |
| குடைவண்டு | துளைக்கும் வண்டு . |
| குடைவிருத்தி | விழாக் காலத்தில் சுவாமிக்குக் குடைபிடிப்பதற்காக ஏற்பட்ட மானியம் . |
| குடைவு | பொந்து ; குகை . |
| குடைவேல் | உடை ; நீருடை மரம் . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 340 | 341 | 342 | 343 | 344 | ... | 1011 | 1012 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
குடைந்தாடுதல் முதல் - குண்டுக்காயம் வரை - Tamil - Tamil Akara Mutali - தமிழ் - தமிழ் அகரமுதலி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், துறை, பாண்டம், வாயகன்ற, நல்ல, குடையை, உருண்டையான, கட்டு, புறவீடு, குடையைப், கூறும், அரசனது, விடும், உருண்டை, வேளையில், குண்டு, வளைந்து, சுருண்டுகொள்ளும், குழி, குண்டணி, முதலியவற்றில், புழுவகை, சுத்தமாயை, மருந்து, சிறுசெய், ஒன்று, இதயம், நிறைகல்

